பதுளையில் வாகன விபத்தில் சிக்குண்டு ஆசிரியை பலி !

க.கிஷாந்தன்

 

photo (3)_Fotor_Collage_Fotor

பதுளை உடுவர பாடசாலை ஆசிரியை ஒருவர் வாகன விபத்தில் சிக்குண்டு அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்து 29.02.2016 அன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பதுளை பண்டாரவளை பிரதான வீதியில் தெம்மோதரை உடுவர தமிழ் வித்தியாலய பாடசாலைக்கு முன்பு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

பாடசாலை முடிந்து பஸ்ஸில் ஏற முற்பட்டபோது பஸ்ஸுக்கு பின்னால் வந்த லொறியொன்று பஸ்ஸில் மோதியதால் அவர் தவறி கீழே விழுந்து பஸ்ஸுக்கும் லொறிக்கும் இடையில் நசுங்குண்டு உயிரிழந்தள்ளார்.

photo (7)_Fotor
மேற்படி சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இந்த விபத்தில் மேலும் இரு ஆசிரியைகள் காயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

மேற்படி ஆசிரியை உடுவர தமிழ் வித்தியாலயத்தில் பணியாற்றிய டபிள்யூ எம்.பிரியலதா (வயது – 47) என தெரியவந்துள்ளது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

முக்கிய குறிப்பு: லங்கா ப்ரொண்ட் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு லங்கா ப்ரொண்ட் நியூஸ் பொறுப்பல்ல.
-நிருவாகம்-