31ஆவது அமர்வு ஜெனிவாவில் ஆரம்பம் , இலங்கை தொடர்பாக எதையும் சுட்டிக்காட்டாத ஹுசைன் !

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 31ஆவது அமர்வு இன்று ஜெனிவாவில் ஆரம்பமானது. 

இந்த அமர்வில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட்ராட் அல் ஹுசேன் தொடக்கவுரை நிகழ்த்தியிருந்தார். 

Zeid Raad al-Hussein

 

இதன்போது, அண்மையில் இலங்கைக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பாக  ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தனது உரையில் எதுவும் குறிப்பிடாமல் மௌனம் காத்துள்ளார். 

அவர் தனது உரையில், பல்வேறு நாடுகளின் மனித உரிமைகள் பிரச்சினைகள்  தொடர்பாக குறிப்பிட்டிருந்தார்.

எனினும் இலங்கை தொடர்பாக எதையும் சுட்டிக்காட்டவில்லை. 

அவர் இன்றைய உரையில், தனது இலங்கைப் பயணம் தொடர்பான விபரங்களை வெளியிடுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டிருந்த போதிலும், அவர் அதுதொடர்பாக மௌனம் காத்துள்ளார். 

இதேவேளை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 31ஆவது அமர்வில், இலங்கை குறித்த விவாதங்கள் எதுவும் நிகழ்ச்சி நிரலில் பட்டியலிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.