நைஜீரியாவில் 100 போகோ ஹரம் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை !

7F79AD59-8191-49B7-98B8-841CF56CF2F6_w640_r1_s_cx0_cy2_cw0_Fotor

 

நைஜீரியாவில் அரசுக்கு எதிராக செயல்பட்ட போகோ ஹரம் என்ற 100 தீவிரவாதிகளை அந்நாட்டு ராணுவம் சுட்டுகொன்றது.

ஆப்ரிக்க நாடானா நைஜீரியாவில் அரசுக்கு எதிராக போகோ ஹரம் என்ற தீவிரவாத அமைப்பினர் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள்  பொது இடங்களில் வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபடுவதும், அப்பாவி மக்களை சுட்டுக்கொல்வதும், வீடுகளுக்கு தீ வைப்பதும் போன்ற நாச வேலைகளில் போகோ ஹரம் தீவிரவாதிகள் ஈடுபட்டு வந்தனர்.

அவர்களை ஒடுக்க நைஜீரிய மற்றும் கேமரூன் நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர். போகோ ஹரம் தீவிரவாதிகள் கேமரூன் நாட்டு எல்லை அருகே பதுங்கி இருப்பதாக நைஜீரியா ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்தனின் பேரில் கேமரூன் நாட்டு எல்லை அருகே உள்ள பகுதியில் அதிரடி தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் சுமார் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கு நைஜீரிய அரசு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.