ஸ்ரீ. மு. கா. தேசிய மாநாடு ; திட்டமிட்டபடி மார்ச்சில் நடத்துவதற்கு தீர்மானம்!

 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாகாநாட்டை அடுத்த மாதம் 19 ஆம் திகதி அம்பாறை மாவட்டத்தின் பாலமுனையில் நடத்துவதற்கு கட்சியின் உயர்பீட கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கட்சியின் உயர்பீட உறுப்பினரும் தேசிய மகாநாட்டு பிரசார ஊடகக் குழு உறுப்பினருமான ஏ.ஸி. யஹியாகான் தெரிவித்துள்ளார்.

dd_Fotor

நேற்று முன்தினமிரவு கொழும்பிலுள்ள கட்சியின் தலைமையகமான  தாருஸ் ஸலாமில் இடம்பெற்ற உயர்பீட கூட்டத்தில் இதற்கான தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தேசிய மகாநாட்டு பணிகளை முன்னெடுத்துச் செல்லும் வகையில் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில்  குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரீ.ஹஸன் அலி, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர், பிரதியமைச்சர்களான எம்.எச்..எம். ஹாரீஸ், பைஸல் காசிம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். தௌபீக், மன்சூர், அலி ஸாஹிர் மௌலானா, ஸல்மான் மற்றும் கிழக்கு மாகாண அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர், மாகாண சபை உறுப்பினர்கள், கட்சியின் தவிசாளர் பஷீர் ஷேகுதாவூத், தேசிய அமைப்பாளர் ஷபீக் ரஜாப்தீன் பிரதி செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர சபை மேயருமான நிஸாம் காரியப்பர் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

தேசிய மாகாநாடு தொடர்பில் மாவட்ட மற்றும் மாகாண ரீதியில் பணிகளை முன்னெடுப்பதற்கான உப குழுக்களும் இதன்போது நியமிக்கப்பட்டன. இதன்படி

அம்பாறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில்  மகாநாட்டு ஏற்பாட்டு பணிகள் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் முன்னெடுக்கப்படவுள்ளன.

மகாநாட்டு பணிகளை முன்னெடுப்பதற்காக அமைச்சர்  ரவூப் ஹக்கீமுக்கு உதவியாக நாடாளுமன்ற உறுப்பினர் ஸல்மான், உயர்பீட உறுப்பினர்களான முபீன்,ஸியாத் ஆகியோர் செயற்படுவர்.

மேல்மாகாணத்தில் பணிகளை முன்னெடுப்பதற்காக அலி ஸாஹிர் மௌலானா, ஷபீக் ரஜாப்தீன், நிஸாம் காரியப்பர், எஸ்.ரி.எம். அஸ்லம் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான அர்ஷாத், ஷாபி ரஹீம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குருணாகல்,பதுளை மாவட்டங்களுக்கு பிரதியமைச்சர் பைஸல் காசிமும் திருமலை மாவட்டத்துக்கு பிரதியமைச்சர் ஹரீஸும் கோகாலை, இரத்தினபுரி மாவட்டங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.தௌபீக், உயர்பீட உறுப்பினர் ஸியாத் ஆகியோரும் மற்றும் புத்தளம் மற்றும் வடமாகாணத்தின் கீழான மாவடங்களுக்குப் பொறுப்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீரும் நிமிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய மகாநாடு தொடர்பான பணிகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுப்பதற்காக கிழக்கு மாகாண  முதலமைச்சர் ஹாபிஸ் நஸீரும் நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மகாநட்டு அனுசரணை மற்றும் அழைப்பாளர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் ஸல்மான, அமைசச்ரின் அந்தரங்கச் செயலாளர் நயீமுல்லாஹ், செயலாளர், உயர்பீட உறுப்பினர் ரஹ்மத் ஏ மன்சூர் ஆகியோர் நிமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கட்சியின் உயர்பீட உறுப்பினரான ஏ.ஸி. யஹியாகான், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹாபிஸ் மற்றும் ஹனீபா மதனி ஆகியோர்மகாநாடு தொடர்பான பிரசார, ஊடக இணைப்பாளர்களாக செயற்படுவர் என்றும் யஹியாகான் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.