நிந்தவூரில் பொலிஸ் நடமாடும் சேவையும், சமூக சேவையாளர்கள் கௌரவிப்பும்!

ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் 

 

நிந்தவூர்-02ம் பிரிவு கிராம அபிவிருத்திச் சங்கமும், சிவில் பாதுகாப்புப் படையணியினரும் இணைந்து நடாத்திய பொலிஸ் நடமாடும் சேவையும், சமூக சேவையாளர்கள் கௌரவிப்பும் நேற்று நிந்தவூர்-02 கிராம அபிவிருத்திச் சங்க பல்தேவைக் கட்டிட மண்டபத்தில் இடம் பெற்றது.

நிந்தவூர்-02 சிவில் பாதுகாப்புப் படையணியின் ஆலோசகர் எம்.சீ.எம்.சுபையிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் அம்பாரை மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியேட்சகர் டீ.கே.டீ.ஹேமந்த பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

IMG_0446_Fotor_Collage_Fotor

சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.எம்.உபுல் பெரேரா, நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி.றிபா உம்மா ஜலீல், நிந்தவூர் ஜும்ஆப்பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைச் செயலாளர் எம்.ஏ.எம்.றசீன் உள்ளிட்ட உயரதிகாரிகளும், நூற்றுக் கணக்கான பொது மக்களும் இந்நிகழ்வுகளில் பங்கு கொண்டு, பயன் பெற்றனர்.

ஆயுர்வேத மருத்துவ கிகிச்சைகளும், பிறப்பு இறப்பு பதிவுகள், பொலிஸ் பதிவுகள் போன்ற முக்கிய விடயங்களுக்கு இங்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டன.

அம்பாரை மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியேட்சகர் டீ.கே.டீ.ஹேமந்த, சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.எம்.உபுல் பெரேரா, நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி. றிபா உம்மா ஜலீல், கிராம சேவக உத்தியோகத்தர் எஸ்.எம்.அசதுல்லாஹ் போன்றோர் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டதோடு, பாடசாலை மாணவர்களுக்குப் பரிசுப் பொருட்களும், சிவில் பாதுகாப்புக் குழுக்களில் திறமை காட்டியவர்களுக்குச் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.