ஆசிய கோப்பை : ஹொங்கொங் அணி வாய்ப்பை இழந்தது !

Asia-CUp-2016-1_Fotor

 

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகளோடு தகுதி சுற்றில் இருந்து ஒரு அணி ஆக மொத்தம் 5 அணிகள் விளையாடும்.

தகுதி சுற்று ஆட்டம் கடந்த 19–ந்தேதி தொடங்கியது. இன்றுடன் முடிகிறது. இதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், ஆப்கானிஸ்தான், ஹொங்கொங் ஆகிய நாடுகள் விளையாடி வருகின்றன. ஹொங்கொங் அணி தொடக்க ஆட்டத்தில் ஒமனிடமும், நேற்றைய 2–வது போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்சிடமும் தோற்றது. இதனால் அந்த அணி வாய்ப்பை இழந்தது. கடைசி ஆட்டத்தில் ஹொங்கொங் அணி ஆப்கானிஸ்தானை இன்று சந்திக்கிறது. மற்றொரு ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்– ஓமன் அணிகள் மோதுகின்றன.

ஐக்கிய அரசு எமிரேட்ஸ் தான் ஆடிய 2 ஆட்டத்திலும் வென்று இருந்தது. ஒமன், ஆப்கானிஸ்தான் தலா ஒரு வெற்றி ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்றுள்ளன.