லிபியாவில் ஐ.எஸ். முகாம் மீது அமெரிக்கா விமான தாக்குதல்- 40 பேர் உயிரிழப்பு!

 
லிபியாவில் தலைநகர் திரிபோலி அருகே இன்று அமெரிக்கா நடத்திய விமான தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர்.

Unknown

திரிபோலிக்கு மேற்கே சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் சப்ரதா நகரில் உள்ள ஒரு வீட்டில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் முகாம் செயல்பட்டு வந்ததாகவும், அதில் ஏராளமானோர் கூடியிருந்ததாகவும் தெரிகிறது. இதனையடுத்து அப்பகுதியில் பறந்து வந்த மர்ம விமானம் அந்த வீட்டின் மீது குண்டுமழை பொழிந்துள்ளது. இதில் 40-க்கும் மேற்பட்டோர் பலியானதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். துனிசியா எல்லையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

துனியாவில் கடந்த ஆண்டு ஜிகாதிக்கள் நடத்திய மிகப்பெரிய தாக்குதலில் தொடர்புடைய அமைப்பினரை குறிவைத்து அமெரிக்க போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக நியூயார்க் டைம்ஸ் செய்தியை சுட்டிக்காட்டி அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ். அமைப்பு லிபியாவில் தங்கள் தளத்தை அமைக்க விடமாட்டோம் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா எச்சரித்த நிலையில், இந்த தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.