எனது 99 சதவீத பந்து வீச்சுகள் சரியான அளவிலேயே உள்ளன :சயீத் அஜ்மல்

பாகிஸ்தான் கிரிக்கெட்டின் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல்.  சந்தேகத்திற்குரிய முறையில் பந்து வீசுகிறார் என கடந்த 2014ம் ஆண்டு போட்டிகளில் விளையாட அவருக்கு தடை விதிக்கப்பட்டது. அதுவரை அவர் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் முக்கிய அதிரடி பந்து வீச்சாளராக இருந்து வந்துள்ளார்.

images

அதன்பின் அவர், கடந்த வருட உலக கோப்பை போட்டி தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன் பந்து வீச அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், சர்வதேச போட்டிகளில் அனைவரும் எதிர்கொள்ள அச்சப்படும் தனது பழைய பந்து வீச்சை கொண்டு வர அவர் கடுமையாக போராடினார். இந்நிலையில் 38 வயது நிறைந்த அஜ்மல் ஆப் ஸ்பின் பந்து வீசுவதில் புதிய யுக்தியை பயிற்சி செய்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தயாராகியுள்ளார்.

அவர் தனியார் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், கடந்த 15 வருடங்களாக ஒரு கிரிக்கெட் வீரராக செய்யாத விசயத்தை நான் கற்றுள்ளேன்.

கிரிக்கெட் அகாடமிக்குள் 10 வயது சிறுவனாக முதன்முறையாக சென்றதை போன்று நான் குழந்தையாகி போனேன். நான் திரும்பவும் விளையாட வருவேன். அந்த நாள் தொலைவில் இல்லை.

நான் நீண்ட நாட்கள் போட்டிகளில் விளையாடாமல் இருந்துள்ளேன்.  பாகிஸ்தான் அணி தோல்வி அடையும்பொழுது அது என்னை துயரமடைய செய்துள்ளது என கூறியுள்ளார். பேருந்து விபத்து ஒன்றில் அவரது கை மணிக்கட்டு முறிந்தது. ஆனால் பேட்ஸ்மேன்களை திணற செய்ய தன்னால் இன்னும் முடியும் என அஜ்மல் கூறுகிறார். இந்த யுக்தியுடன் (புதிய) நான் கிரிக்கெட்டை விட்டு விலகுவேன். திறமையுடன் செயல்படாவிட்டால், போட்டியில் விளையாடாமல் விலகி விடுவேன்.

எனது பந்து வீச்சு 20 டிகிரி கோணங்கள் சற்று விலகலாம். ஆனால் அதனை சரி செய்ய நான் உடனடியாக கடினமுடன் உழைத்துள்ளேன். எனது ஒவ்வொரு போட்டியையும் வீடியோவில் நான் கவனித்து வருகிறேன். எனது 99 சதவீத பந்து வீச்சுகள் சரியான அளவிலேயே உள்ளன என அவர் கூறியுள்ளார்.