அஸார்தீன் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார் !

IMG_1761_Fotor
 
 இலங்கை வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தேசிய இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அஸார்தீன் அவர்கள் இன்று உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை கொழும்பு 02, நவம் மாவத்தையிலுள்ள இலங்கை வர்த்தக கூட்டுத்தாபன தலைமையகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். மிகுந்த துடி துடிப்பும் ஆற்றலுமிக்க அஸார்தீன் அவர்களுக்கு இப்பொருப்பு வழங்கப்பட்டமையானது மிகவும் பொருத்தமானது என்றே நான் கருதுகின்றேன். 
அவருடைய பொருப்புக்களை செவ்வனே நிறைவேற்ற எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு துணைபுரிவானாக!
மேலும், இன்றைய நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொதுச் செயலாளர் சுபைர்தீன் ஹாஜியார், இலங்கை வர்த்தக கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் லீயாவுத்தீன், இலங்கை கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் பிரதித் தலைவர் நஸீர்,  கொளரவ அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி மொஹிதீன், உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.
முனவ்வர் .எ.காதர்