பொன்சேகா நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டமைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு !

fonseka-436x286
பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா ஐ.தே.க.வின் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டமைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளது. 

சரத் பொன்சேகாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்துச் செய்யுமாறும், அந்தப் பதவியில் அவர் செயற்படுவதை தடுக்கும் வகையில் தடை உத்தரவொன்றை பிறப்பிக்குமாறும் குறித்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலில் உள்வாங்கப்பட்டிராத சரத் பொன்சேகாவை அக்கட்சி தனது தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு நியமித்துள்ளமையானது பொதுமக்களின் அபிப்பிராயத்துக்கு எதிரானதாகும் என்று மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது. 

அத்துடன் அரசியலமைப்பின் 19வது சரத்தும் இந்த நியமனத்தின் மூலம் மீறப்பட்டுள்ளதாக குறித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

மனுவின் பிரதிவாதிகளாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம், நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, சபாநாயகர், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர், நாடாளுமன்ற செயலாளர் நாயகம், சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.