அக்கரைப்பற்று மக்களின் சொத்துக்களை அபகரிப்புச் செய்த பைசால்காசிம் எவ்வாறு தலைமை வகிக்க முடியும்?

safees faizal cassim slmc
சப்றின்
 அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணை தலைவராக உள்ள பிரதி அமைச்சர் பைசல்  காசீம், அக்கரைப்பற்று அபிவிருத்தி குழுவிற்கும் தலைவராக இருக்கின்றார். அக்கரைப்பற்று பிரதேசம் பெரும்பான்மையாக  பைசல் காசிம் தெரிவாகியுள்ள முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை  நிராகரித்துள்ளமையினால், இப்பிரதேசத்தில் வாழும் ஒரு சில மு. கா போராளிகளை அழைத்து கட்சிக் கூட்டம் போல் அக்கரைப்பற்று அபிவிருத்திக் குழு  கூட்டத்தினை நடத்துகிறார்.
 
பாடசாலை நிர்வாகம், அக்கரைப்பற்றுக்கான நிதி ஒதுக்கீடு போன்றவற்றில் ஓரவஞ்சனையோடு நடந்து கொள்கிறார். கடந்த காலத்தில்  அரசாங்கப்பதவிகளில் இருந்துகொண்டு அக்கரைப்பற்று  மக்களின்  சொத்துக்களை தனது சொத்தாக நினைத்து அபகரிப்புக்களில் ஈடுபட்டவர் எவ்வாறு அக்கரைப்பற்றின் அபிவிருத்திக் குழு கூட்டத்திற்கு தலைமை வகிக்க முடியும்?
 
பைசல் காசிமுக்கு சொந்தமான காசீம் குலோதீன் என்ற நிறுவனத்தின் மூலம் அக்கரைப்பற்று மக்களின் வாள்வாதாரத்தோடு தொடர்புடைய நிலப்பரப்பினை முறையற்ற விதத்தில் அபகரித்து இலாபம் ஈட்டி வந்தவர் பைசல் காசீம்.
 
பலமாத உழைப்பும் பல இலட்சம் ரூபாய் செலவும் செய்து  அந்நிலைப்பரப்பினை  மீளவும் அக்கரைப்பற்று மக்களுக்கு  பெற்றுக்கொடுப்பதற்காக மேற்கொண்ட முயற்சியில் நாங்கள் வெற்றி கண்டோம். இப்போது அவ்விடம் அக்கரைப்பற்று விவசாயிகளின் காப்பகமாக மாறிவருகிறது.
 
இவ்வாறு எமது மக்களின் சொத்துக்களை அபகரித்த பைசல்  காசீம் அக்கரைப்பற்று அபிவிருத்திக்குளுவிற்கு தலைமை வகிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவரிடமிருந்து எவ்வாறு அக்கரைப்பற்றின் சொத்தை மீட்டோமோ  அதேபோன்று ஆதாரங்களுடன் சில நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டிவரும் என்பதனை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.