கூட்டு எதிர்க்கட்சியினர் புதிய கட்சியை ஆரம்பிக்கும் நடவடிக்கைகளை ஒத்தி வைக்க தீர்மானம் !

Joint-Opposition-Press-by-Romesh-Danushka-Silva-
கூட்டு எதிர்க்கட்சியின் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய கட்சியை ஆரம்பிக்கும் நடவடிக்கைகளை ஒத்திவைத்து விட்டு, அதற்கு பதிலாக விரிவான அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்தியுள்ளனர்.

புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டால், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சட்டரீதியான தடைகள் ஏற்படும் வாய்ப்புள்ளதே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டு அதில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணையும் பட்சத்தில் சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமை இரத்தாகும் என்பதோடு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் இழக்க நேரிடும். 

இது சம்பந்தமாக மகிந்த ராஜபக்ஸ தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கவனம் செலுத்தியுள்ளனர். இதனால், அரசியல் அமைப்பு ஒன்றை ஏற்படுத்துவது தொடர்பிலேயே இவர்கள் அதிகம் விருப்பம் கொண்டுள்ளனர். 

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட புதிய கட்சியை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதுடன் அதுவரையில் விரிவான அரசியல் அமைப்பாக செயற்பட மகிந்த தரப்பு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.