புதிய சட்டமா அதிபராக ஜயந்த ஜயசூரிய நியமனம் !

The-Jayasuriya-family-
புதிய சட்டமா அதிபராக ஜெனரல் ஜயந்த ஜயசூரியவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கையின் 28 ஆவது சட்டமா அதிபராக செயற்பட்டிருந்த யுவன் ரஞ்சன வணசுந்தர விஜய திலக்கவின் பதவிக் காலம் கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் திகிதியுடன் நிறைவு பெற்றிருந்தது.  

இதனைத் தொடர்ந்து சட்டமா அதிபர் பதவிக்கு வெற்றிடம் நிலவியிருந்த நிலையில் பதில் சட்டமா அதிபராக சுஹத கம்லத் நியமிக்கப்பட்டிருந்தார். 

இந்த நிலையில் சட்டமா அதிபர் பதவிக்கு ஜனாதிபதியினால் மூன்று பேர் பரிந்துரை செய்யப்பட்டனர். 

இதனையடுத்து, நிரந்தர சட்டமா அதிபராக நியமிப்பதற்கென பொருத்தமானவரை தெரிவு செய்வதற்கான அரசியலமைப்பு பேரவையின் அமர்வு இன்று நடைபெற்றது. 

இந்த அமர்வின்போது புதிய சட்டமா அதிபராக ஜயந்த ஜயசூரியவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை தீர்மானித்துள்ளது. 

சட்டமா அதிபராக திணைக்களத்தை சேர்ந்த ஒருவரே நியமிக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி, சட்டமா அதிபர் பதவிக்கான அனைத்து தகுதிகளையும் தான் கொண்டுள்ளதாகவும், அடுத்த சட்டமா அதிபர் நானே எனவும் சுஹத கம்லத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Judge-Jayantha-Jayasuriya-takes-oath-at-Government-House-on-Wednesday-February-4.