கட்டார் வாழ் ஏறாவூர் மக்கள் அமைப்பினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற விளையாட்டு விழா!

சஜா. எம். அனைஸ் 
கத்தார் தேசிய விளையாட்டு தினத்தினை முன்னிட்டு கத்தார் வாழ் ஏறாவூர் மக்கள் அமைப்பினரின் ஏற்பாட்டில் இன்று காலை முதல் மாலை வரை பாரம்பரிய விளையாட்டுப்போட்டிகள் மைதர் விளையாட்டுமைதானத்தில்  கத்தார் வாழ் ஏறாவூர் மக்கள் அமைப்பினரின் நிர்வாகத்தின் நெறிப்படுத்தலில் விமர்சையாக நடைபெற்றது.
12660479_1107325705966913_316944523_n_Fotor
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை முன்னாள் சுகாதார அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் முன்னாள் தேசிய கொள்கைபரப்பு செயலாளருமான மாகாணசபை உறுப்பினர் அல் -ஹாஜ் MSS . சுபைர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றியீற்றிய வீரர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தார். 
12695879_1107326855966798_1328530881_n_Fotor
இங்கு  மாகாணசபை உறுப்பினர் அல் -ஹாஜ் MSS . சுபைர் அவர்கள் வெளிநாட்டில் நமது மக்களின் நிலைகளை பற்றியும் நாட்டின் தற்போதைய முஸ்லிம் தலைமைகளின் போக்கினை பற்றியும் சிறப்பாக விளக்கவுரை ஒன்றினை நிகழ்த்தினார் . இந்நிகழ்வில் மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.