மருதமுனை எம்.எம்.நௌபல் எழுதிய ‘இலங்கை முஸ்லிம்களால் எதிர்கொள்ளப்படும் சவால்கள்’ நூல் வெளியீட்டு விழா!

 

1-PMMA CADER-07-02-2016-_Fotor
பி.எம்.எம்.ஏ.காதர்

மருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரி எம்.எம்.நௌபல் எழதிய இலங்கை முஸ்லிம்களால் எதிர்கொள்ளப்படும் சவால்கள் நூல் வெளியீடு கடந்த ஞாயிற்றுக்கிழமை (07-02-2016)மருதமுனை பொது நூலகக் கட்டத்தில்; முன்னாள் கிழக்கு மாகாண மேல் நீதிமன்ற ஆணையாளர் சட்டத்தரணி எம்.எஸ்.எம்.ஜெமீல் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் முன்னிலை அதிதிகளாக வவுனியா மாவட்ட நீதிபதி தாவூத் லெப்பை அப்துல் மனாப்,தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆங்கில மொழிப் பிரிவின் தலைவர் கலாநிதி ஏ.எம்.எம்.நவாஸ்,சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.ஏ.முகம்மது நுபைல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

15-PMMA CADER-07-02-2016_Fotor

 

இங்கு வரவேற்புரையை கவிஞர் றகுமான் ஏ ஜமீல் நிகழ்த்தினார் கலாநிதி சத்தார் எம் பிர்தௌஸ் நூல் அறிமுக உரையாற்றினார் நூல்பற்றி கவிஞர் ஏ.எல்.எம்.றிபாஸ்,எழுத்தாளர் ஏ.எம்.றியாஸ் அஹமட் ஆகியோர் கருத்துக்களை முன்வைத்தனர் நூலின் விமர்சன உரையை விமர்சகர் சிராஜ் மஸ்ஹூர் நிகழ்த்தினார்

நூலின் முதற் பிரதியை நீதிபதி தாவூத் லெப்பை அப்துல் மனாபிடமிருந்து சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளர் எஸ்.எம்.றபாய்தீன் பெற்றுக்கொண்டார். சிறப்புப் பிரதிகளை ஹேன்டிகெப் இன்டநெஷனல் பொறுப்பாளர் ஏ.ஜி.எம். கலீலுர் றஹ்மான்,ஆசியா மன்றத்தின் நிகழ்ச்சித்திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் ஆகியோர் பெற்றுக் கொண்டனர் அறிவிப்பாளர் நஸ்றுத்தீன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்

இந்த நிகழ்வில் பெரும் அளவிலான எழுத்தாளர்களும்,பிரமுகர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.