அதிகார பரவலாக்கத்தினை எந்தவித தடையுமின்றி அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் உதவ வேண்டும் !

habis_trinco_002
கிழக்கு மாகாண சபையும் ஜனதக்சன், கேயார் (CARE) அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு இன்று திருகோணமலையில் ஜானக ஹேமா திலக்க சிரேஷ்ட முகாமையாளரின் வழிகாட்டலுடன் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தலைமையில் ரின்கோ பிலு (TRINCO BLUE) ஹோட்டலில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் போது கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் உரையாற்றுகையில், 

கிழக்கு மாகாணத்தில் பின் தங்கிய உள்ளூராட்சி சபைகளை அல்லது அடிமட்டத்தில் இருந்து அவர்களை உயர் நிலைக்கு கொண்டு வருவதற்கான ஆலோசனைகளை எடுத்து பல்வேறு திட்டங்களை அமுல்படுத்த தேவையான வழிகாட்டல்களையும் முன்னெடுக்க உள்ளதான வகையில், 

இன்று மத்திய அரசு உயர் அதிகாரிகள் மற்றும் மாகாண அதிகாரிகள், மாகாண சபை அமைச்சர்கள் , மாகாணசபை உறுப்பினர்கள் கொண்ட இக்கலந்துரையாடல் மூலம் இவ்வாறன பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுக் கொடுக்க இதற்கென புதிய குழு ஒன்றையும் அமைத்து இத்திட்டத்தினை முதன் முறையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிப்பது தொடர்பான திட்டம் இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

மேலும் இங்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர், 

hafiz_trinco_001

கிழக்கு மாகாண சபைக்கான 13 வது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவதற்காக இந்நாட்டின் ஜனாதிபதியும், பிரதமரும் முழு அங்கீகாரத்தினையும் மாகாண சபைக்கு தர வேண்டும். 

அத்துடன் அதிகார பரவலாக்கத்தினையும் எந்தவித தடையும் இன்றி அமுல்படுத்துவதற்கு இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள நல்லாட்சி மூலம் ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் முதலமைச்சர் கேட்டு கொண்டார். 

அத்துடன் இத்திட்டமானது நான்கு மாகாணங்களில் மேற்கொள்ளவுள்ளதாகவும் அதாவது வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய மாகாணம், போன்ற மாகாணங்களுக்கும் கொண்டு செல்லப்படவுள்ளதுடன், 

மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபை அதிகாரிகளுக்கு முழுமையான அதிகாரத்தினை வழங்குவதன் மூலம் மக்களின் தேவைகளை இனங்கண்டு அம்மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வினை பெற்றுக் கொடுக்க முடியாமைக்கு இவ்வதிகார பரவலாக்கம் சரியாக அமுல்படுத்தப்படாமை பாரிய தடையாக உள்ளதாகவும், 

இதனை மாற்றி அமைத்து சரியான சேவையினை செய்வதற்கான முழு பலத்தையும் அதிகாரத்தையும் மாகாண சபைக்கு வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க ஆகியோரும் அதிக கவனம் செலுத்தி உடனடியாக அமுல்படுத்தி தர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

habis_trinco_003