கடந்த பத்துவருட காலங்களில் முஸ்லிம்கள் பற்றி எதுவுமே பேசாத தலைவர் ரவூப் ஹக்கீம் !

mahintha rishad hakeem

 

 இறுதி நேரத்தில் ஹக்கீம் மகிந்தவுக்கு எழுதிய அனுதாபக் கடிதமும் வெளியானது !
கபட நாடகம்…..
 ரவூப் ஹக்கீம் அவர்களின் பிரபல்யம் சடுதியாக வீழ்ச்சியுற்று செல்வதை மு கா வின் முக்கியஸ்தர்கள் சிலரும், ரவுப் ஹக்கீமின் அரசியல் ஆலோசகர் சிலரும் சுட்டிக் காட்டியுள்ளனர். இந்த விடயம் கடந்த தேர்தல்கள் மூலமாகவும் நிரூபணம் ஆனதும் குறிப்பிடத் தக்கதாகும் . மேற்படி விடயத்தில் உள்ள உண்மை தன்மைகளை கண்டறிந்து, நிலைமைகளை சீர்செய்து கட்சியையும் கட்சித் தலைமையையும் தக்கவைத்துக்கொள்ள தேவையான ஆலோசனைகள் மற்றும் தீர்வுகள் அடங்கிய ஆய்வறிகையொன்றை உடனடியாக சமர்பிக்கும்படி ரவூப் ஹகீம் அவர்களின் சகோதரர் ரவுப் ஹசீர் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட விஷேட குழுவொன்றிற்கு கட்சித் தலைமையால் பணிக்கப் பட்டுள்ளது. கட்சி தலைமைக்கு மிகவும் விசுவாசமிக்க குறிப்பிட்ட விஷேட ஆய்வுக் குழுவின் ஆய்வறிக்கையின் படி 

கடந்த சுமார் மூன்று வருடங்களுக்கு மேலாக இலங்கை நாட்டு முஸ்லிம்களுக்கெதிரான பல சதிகள் சூழ்சிகள் பல இனவாத சக்திகளால் மேற்கொள்ளப் பட்டு வருகின்றது. பொது பல சேனா , ராவணா பலய , மஹா சங்க சம்மேளணய, உட்பட்ட பல இனவாத இயக்கங்கள் ,மற்றும் சக்தி, சிரச, ஹிரு , சுவர்ணவாகினி, போன்ற நாட்டின் பிரதான இலத்திரனியல் ஊடகங்கள் உட்பட லங்கா தீப , திவயின போன்ற அச்சு ஊடகங்கள் , மேலும் சில பௌத்த இனவாத அரசியல் தலைமைகள் வரை ரிஷாத் அமைச்சருக்கு எதிராக செயற்படுகின்றார்கள். 

வடக்கு மக்களின் மீள் குடியேற்றத்திற்காக கட்டங்க கட்டமான அமைச்சர் ரிஷாடின் செயற்பாடுகளான , தற்போதைக்கு அவர் அங்கு நிர்மாணித்துள்ள வீடுகளும் பாடசாலைகளும், பள்ளிவாயல்களும், மதரசாக்களும், வைத்தியசாலைகளும் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளன.

இவை அனைத்திற்கும் மேலாக இனவாத கருத்துகளை பரப்பி வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தையும் இந்த நாட்டு ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் கொச்சைபடுத்திய இனவாத ஊடகமான ஹிரு தொலைகாட்சியில் தமது தரப்பு நியாங்களை எடுத்துக் கூறி முஸ்லிம்களின் மானம் காத்ததுடன் சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் பற்றிய நல்லபிப்ராயத்தையும் ஏற்படுத்தியது, 

மேற்சொன்ன இனவாத அமைப்புகளின் செயற்பாடுகளுக்கு முட்டுக் கட்டையாக இருந்துகொண்டு உரிய இடத்தில் உரிய தரப்பினருக்கு எதிராக குரல் கொடுப்பதில் அமைச்சர் ரிஷாத் பெருந்தலைவைவர் அஷ்ரபை அடியொட்டி செயற்படுகின்றார் என்ற எண்ணம் மக்கள் மனங்களில் இடம் பிடித்துள்ளன. 

அளுத்கம வன்செயல்களுக்கு எதிராகவும் , புனித அல்குரானுக்கு எதிராக படுதூறு கூறிய பொது பல சேனா அமைப்பிற்கு எதிராகவும் உரிய தருணத்தில் சட்ட நடவடிக்கைகள் எடுத்து வழக்குகளை பதிவு செய்ததில் அமைச்சர் ரிஷாடின் செயற்பாடுகள் தொடர்ந்தும் விடா முயற்சியாக இருந்து வருகின்றன. 

இவற்றின் காரணமாக இன்று இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் அமைச்சர் ரிஷாடின் செல்வாக்கு அதி உச்சத்திற்கு சென்றுள்ளது. 
அதேவேளை அமைச்சர் ரவூப் ஹகீம் அவர்கள் ,
கடந்த காலங்களில் உரிமை அரசியல் உரிமை அரசியல் என்று கூறி வந்ததுடன், முஸ்லிம்களின் உரிமை கோஷங்களுக்காக எந்த வித பங்களிப்பையும் வழங்காது, உரிமை அரசியலுமின்றி அபிவிருத்தி அரசியலுமின்றி தலைமையையும் கட்சியையும் காபாத்துவதாக கூறிவந்தது.

பொது பல சேனா வின் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு எதிராக எந்த வித காத்திரமான நடவடிக்கையும் எடுக்காதது 

வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் சம்பந்தமாக எந்தவொரு காத்திரமான நடவடிக்கையும் மேற்கொள்ளாது மௌனம் காத்து வந்தது. 

நல்லாட்சி அரசாங்கத்தை அமைக்கும் போது கடைசி வரை மகிந்தவுக்கு விசுவாசமாக நடந்தது மட்டுமல்லாமல் ரணிலிடம் 4௦௦ மில்லியன் ரூபா வரை பேரம் பேசி இறுதியில் மாறியதும், அமைச்சர் ரிஷாத் தகுந்த நேரம் பார்த்து நடைபெறும் “நல்லாட்சி புரட்சிக்கு” தன்னாலான நிதியுதவிகளை வழங்கி கைம்மாறு பெறாமல் புரட்சியின் பங்காளியாக ஆன விடயம் கட்சிக்குள்ளும் வெளியிலுமுள்ள முக்கியஸ்தர்கள் மூலம் வெளியானது. 

 

hakeem slmc

இறுதி நேரத்தில் மகிந்தவை விட்டு பிரிய மனமில்லாமல் பிரிந்தது மட்டுமில்லாமல் தாம் பிரிவதற்கான பிரதான காரணமாக முஸ்லிம் மக்களையும் கட்சியை காப்பாத்த வேண்டிய பொறுப்பையும் சுட்டிக் காட்டி எழுத்து மூலம் அறிவித்து விட்டு நல்லாட்சிக்கு ஆதரவு தரவேண்டிய நிர்பந்த நிலையில் ரணிலுடன் பேரம் பேசி ஆதரவளித்தது. 

போன்ற விடயங்கள் ஹக்கீமின் வீழ்ச்சிக்கும் ரிஷாடின் எழுட்சிக்கும் அடிப்படை காரணங்களாக குறிப்பிட்ட ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப் பட்டுள்ளதாக அறிய முடிகின்றது., இந்த நிலைமைகளிலிருந்து கட்சியின் வீழ்ச்சியை தடுத்து முன்னேற்ற பாதையில் கட்சியை கொண்டு செல்ல மேற்கூறப்பட்ட ஹக்கீமால் உதாசீனமாக கருதப் பட்ட முஸ்லிம்களின் உரிமை விடயங்கள் , வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் போன்ற அனைத்து விடயங்களிலும் ஹக்கீமின் பங்களிப்பு இருந்துள்ளதென மக்கள் மனதில் பதியும் படியான ஆக்கங்கள் இணைய தளங்களிலும் அச்சு ஊடகங்களிலும் தொடர்ந்து வெளிவர வேண்டும் என்றும் குறிப்பிட்ட அறிக்கையில் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. 

மேற்படி ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப் பட்டுள்ள விடயங்களை உறுதி செய்வதாக அமைந்த கடந்த மகிந்த ஆட்சியை விட்டு பிரியும் போது அமைச்சர் ரவுப் ஹகீமினால் மஹிந்த ராஜபக்ஷ வுக்கு எழுதிய கடிதமும் அம்பலமாகியுள்ளது. 
கீழே அந்த கடிதத்தை காணலாம். 

“கட்சி ஆதவாளர்களினாலும் மக்களினாலும் கட்சிக்கு ஏற்படுத்தப்பட்ட அழுத்தம் காரணமாகவே அரசை விட்டு விலகுகிறேன். வரலாற்றில் வந்த மிகப்பெரும் அரசியல்வாதி நீங்கள். நாட்டை பல்வேறு வெற்றிப்பாதைக்கு இட்டுச்சென்றிருக்கிறீர்கள். மிக்க நன்றிக்கடனுடனும் நம்பிக்கையுடனும் உங்களை விட்டு பிரிகிறேன்” – ஹக்கீமினால் மஹிந்தவுக்கு அனுப்பப்பட்ட இராஜினமா கடிதம்…

 

அஷ்ஹர் தையூப் (புத்தளம்)
Cvt.Musali.