தனது கடைசி ஒருநாள் போட்டியில் 47 ரன்களுடன் விடைபெற்றார் மெக்கல்லம் !

New Zealand v Australia - 3rd ODI

 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 3 ஒரு நாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து 159 ரன் வித்தியாசத்திலும், 2–வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு 4 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா–நியூசிலாந்து அணிகள் மோதும் 3–வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடந்தது. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 246 ரன்னில் ஆல்அவுட் ஆனது. 247 ரன் இலக்குடன் ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரோடு ஓய்வு பெற போவதாக நியூசிலாந்து கேப்டன் மெக்குல்லம் ஏற்கனவே அறிவித்து இருந்தார். இதனால் அவர் விளையாடிய கடைசி ஒரு நாள் போட்டியாக இன்று இருந்தது. தனது கடைசி ஒரு நாள் போட்டியில் அவர் 47 ரன்களை எடுத்தார். 27 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரி, 3 சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார்.

மெக்குல்லம் 260 ஒரு நாள் போட்டியில் விளையாடி 6083 ரன் எடுத்துள்ளார். இதில் 5 சதமும் அடங்கும். அதிகபட்சமாக 166 ரன் குவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரோடு மெக்குல்லம் சர்வதேச போட்டியில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுகிறார்.