சட்டமா அதிபர் நிலைக்கு தகுதியற்ற ஒருவரை நியமிக்க அரசாங்கம் திட்டமிடுகின்றது !

சட்டமா அதிபர் நிலைக்கு தகுதியற்ற ஒருவரை நியமிக்க அரசாங்கம் திட்டமிடுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பிவித்துரு ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். 

uthaya

சொலிஸிட்டர் ஜெனரல் சுகத கம்லத் தற்போது பதில் சட்டமாஅதிபராக செயற்பட்டு வருகிறார்.

இந்தநிலையில் அவரை சட்டமா அதிபராக நியமிக்கவேண்டும் என்று கம்மன்பில வலியுறுத்தியுள்ளார். 

வழக்கு விசாரணைகளை முன்னெடுத்து செல்லும் வகையில் சட்டமா அதிபர் ஒருவர் விரைவில் நியமிக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது கம்மன்பில தமது கருத்துக்களை வெளியிட்டார்.