மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பேரில் தொலைபேசி உரையாடல் ஒட்டு கேட்பு நடவடிக்கைகள் !

MahindaPhoneTalk_CI
மகிந்த ராஜபக்ச காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி உரையாடல் ஒட்டு கேட்பு நடவடிக்கைகள், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பேரில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச புலனாய்வு சேவை உட்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி செயலகத்தின் தகவல்களை யார் வெளியில் கசிய விடுகின்றனர் என்பதை கண்டறிவதற்காவே ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் தொலைபேசி ஒட்டு கேட்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மகிந்த ராஜபக்ச காலத்தில் தமது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படுவதை தடுக்க பலர் வைபர் போன்ற தொழிற்நுட்பங்களை பயன்படுத்தினர். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த தொலைத் தொடர்பு தொழிற்நுட்பங்களையும் ஒட்டுகேட்குமாறு உத்தரவிட்டுள்ளதாக பேசப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் அங்கம் வகித்த பலர் தற்போது புதிய அரசாங்கத்துடன் இணைந்துள்ளனர். இவர்களில் யார் தகவல்களை கசிய விடுகின்றனர் என்பதை அறியும் பொறுப்பை ஜனாதிபதி அரச புலனாய்வு சேவைக்கு வழங்கியுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.