யுத்தத்தினால் நலிவடைந்து போன வடக்கு, கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை கட்டியெழுப்படும் – ஹரீஸ் !

harees

ஹாசிப் யாஸீன், எம்.எம்.ஜபீர்

 

 வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விளையாட்டு அகடமி நிறுவப்பட்டு அதன் மூலம் எமது வீரர்களுக்குசர்வதேச தரத்திலான பயிற்சிகள் வழங்கி வடக்கு,கிழக்கு மாகாண விளையாட்டுத்துறையினை கட்டியெழுப்புநடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

வட மாகாணத்தின் விளையாட்டு மற்றும் விளையாட்டு மைதானங்களின் அபிவிருத்தி தொடர்பில்ஆராய்வதற்கு வட மாகாணத்தின் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களுக்கானஇரண்டு நாள் விஜயத்தினை பிரதி அமைச்சர் ஹரீஸ் தலைமையிலான விளையாட்டுத்துறை அமைச்சின்உயர் அதிகாரி குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.

வட மாகாணத்தின் வவுனியா மாவட்டத்தின் விளையாட்டு மற்றும் விளையாட்டு மைதானங்களின் அபிவிருத்திதொடர்பில் ஆராயும் மாநாடு வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று (05) வெள்ளிக்கிழமை பிரதேசசெயலக கூட்ட மண்டபத்தில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ்தலைமையில் இடம்பெற்றது.

IMG_8405_Fotor

இம்மாநாட்டில் தமிழத் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றகுழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான கே.காதர் மஸ்தான், வட மாகாண கல்வி, கலாச்சார, பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பீ.குருகுல ராஜா, முன்னாள் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முத்தலிபா பாறூக், வட மாகாண சபை உறுப்பினர்எம்.எச்.றயீஸ், விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் ரீ.எம்.ஆர்.டி.திஸாநாயக்கா, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம்.அப்துல் ஹை, இணைப்புச் செயலாளர்எம்.எஸ்.எம்.மிஸ்பர், வவுனிய பிரதேச செயலாளர் கே.உதயராஜா உள்ளிட்ட மாவட்ட விளையாட்டுஉத்தியோகத்தர்கள், விளையாட்டு உத்தியோகத்தர்கள், விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள், விளையாட்டு ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்த உரையாற்;றிய பிரதி அமைச்சர்,

கடந்த 30 வருட கால யுத்தத்தினால் நலிவடைந்து போன வட, கிழக்கு மாகாண விளையாட்டுத்துறையினைகட்டியெழுப்புவதற்கான முழு நடவடிக்கையினையும் மேற்கொள்ளவுள்ளேன். இம்முயற்சிக்கு வடக்கு, கிழக்குமாகாண மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட அதிகாரிகளின் ஒத்துழைப்பினை எதிர்பார்க்கின்றேன்.

IMG_8413_Fotor

இன்று நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள நல்லாட்சியில் தமிழ், முஸ்லிம் மக்கள் நிம்மதி பெரும்மூச்சுவிடுகின்றனர். யுத்தத்திற்கு பின்னர் வட கிழக்கு வீரர்கள் தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்குபற்றிஎமது நாட்டுக்கும் எமது பிராந்தியத்திற்கும் புகழைத் தேடித்தந்துள்ளனர். இதனையிட்டு இப்பிராந்தியத்தைச்சேர்ந்த விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் என்ற வகையில் பெருமையடைகின்றேன்.

2018ம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டியில் இலங்கை வீரர்கள் தங்கப் பதக்கங்களை பெறுவதற்கானஇலக்கினை வைத்து விளையாட்டுத்துறை அமைச்சி செயற்படுகின்றது. இதில் எமது வட, கிழக்கு மாகாணவீரர்களும் இலங்கை சார்பாக ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு தங்களது முழுத் திறமைகளையும்வெளிக்காட்ட வேண்டும். 

வட கிழக்கு மாகாணங்களில் விளையாட்டு அகடமி நிறுவப்படவுள்ளது. இதற்கான ஏற்பாட்டுகளைவிளையாட்டுத்துறை அமைச்சும், சர்வதேச நிறுவனங்களும் மேற்கொள்ளவுள்ளது. இதன்மூலம் வீரர்களுக்குதொடர்ச்சியான பயிற்;சிகளை வழங்குவதோடு சர்வதேசத்தில் புகழ் பூத்த வீரர்களை வரவழைத்து அவர்கள்மூலமான பயிற்சிகளையும் வழங்க முடியும்.

வன்னி மாவட்ட விளையாட்டுக் கழகங்களின் பிரச்சினைகளை கவனத்திலெடுத்து அக்கழகங்களைமேம்படுத்தும் நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதோடு இம்மாவட்டத்தின் விளையாட்டு மைதானங்களில்நிலவும் குறைபாடுகளை கண்டறிந்து அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 

விளையாட்டு உத்தியோகத்தர்களின் சம்பள முரண்பாடு சம்பந்தமாக அமைச்சர் தயாசிறியும், நானும்திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் பேசியுள்ளோம். இவ்விடயம் சம்பந்தமாக விரைவில்தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்தார்.