ஓட்டமாவடி பிரதே சபையின் செயலாளர் ஷாபிக்கு எதிராக ஊழியர்கள் பணிபகிஸ்கரிப்பு ! (வீடியோ )

1_Fotor

 

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்

வீடியோ பணிபகிஸ்கரிப்பின் காணொளி:– VIDEO

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையில் செயலாளராக கடமையாற்றும் எஸ்.எம்.எம்.ஷாபி அவர்களை இடமாற்றம் செய்யுமாறு கோரி பிரதேச சபையில் கடமையாற்றும் சிற்றூழியர்கள், சுகாதார ஊழியர்கள், நிருவாக உத்தியோகத்தர்கள் அடங்களாக இன்று 05.02.2016 வெள்ளிக்கிழமை கடமைகளில் ஈடுபடாது பிரதேச சபைக்கு முன்னால் உள்ள முற்றத்தில் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டதனை காணக்கூடியதாக இருந்தது.

  

பிரதேச சபையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுடன் முறையற்ற விதத்தில் நடந்து கொண்டமையால் நீண்ட காலமாக பிரதேச சபை செயலாளருக்கும் உத்தியோகத்தர்களுக்குமிடையில் முரண்பாடு காணப்பட்டுள்ளது. இதனை அடுத்து அங்கு கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் அனைவரும் கையெழுத்திட்டு உத்தியோகத்தர் கூட்டத்தினை கூட்டுமாறு செயலாளரிடம் சென்ற வருடம் கோரியிருந்தனர். அவ்வாறு கோரியிருந்தும் அதனை அவர் தட்டிக்கழித்து வந்துள்ளார்.

02_Fotor

இதனையடுத்து, எமது பிரச்சினைகளை பேசுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்காத செயலாளர் எமக்கு வேண்டாமென்றும், உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளை நேரில் வந்து கண்டறியுமாறும் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அவர்களிடம் உத்தியோகத்தர்கள் முறையிட்டிருந்தனர்.. இக்கோரிக்கையினை ஏற்ற மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் சென்ற வெள்ளிக்கிழமை 29.01.2016 திகதி அன்று ஓட்டமாவடி பிரதேச சபைக்கு வருகைதந்து உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளை உள்வாங்கி சென்றதுடன் இப்பிரச்சினைகளை மாகாண உள்ளுராட்சி ஆணையாளரிடம் தான் அறிக்கையிடுவதாகவும் தெரிவித்திருந்தார்..

 

இது இவ்வாறிருக்கையிலேயே உத்தியோகத்தர்களால் செயலாளரை இடமாற்றம் செய்யுமாறு கோரி கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு மகஜர் ஒன்றும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

 

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, உத்தியோகத்தர்களிடம் செயலாளர் முறையற்ற வார்த்தை பிரயோகங்களை பிரயோகிக்கின்றமை, சேவைநாடிகளின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் அசமந்தப் போக்கினை கையாள்வதுடன் அதனை உத்தியோகத்தர்கள் மீது பழி சுமத்துகின்றமை, அலுவலக நேரங்களில் சபையில் இல்லாது வெளிவேலைகளில் அதிகம் ஈடுபடுகின்றமை, அபிவிருத்தி விடயங்களை அமுல்படுத்துகின்ற போது உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடலை மேற்கொள்வதில்லை, ஒட்டமாவடி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்யாமை, அலுவலக வாகனத்தினை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை, குப்பை எடுக்கும் சுகாதாரத் தொழிலாளிகளை புறக்கணித்து நடக்கின்றமை, குப்பைகளை அகற்றுவதற்கான முறையான திட்டமிடல் இன்மை, உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் பதவியுயர்வு, சம்பள மாற்றம், சம்பள உயர்ச்சி ஆகியவற்றிற்கு ஒப்பமிடுவதில் காலதாமதம் போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து 

7_Fotor

மேலும், நெல்சிப் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மீன் விற்பனை சந்தை, ஓட்டமாவடி பிரதான பஸ் நிலையம் என்பன சென்ற வருடம் பிரதேச சபையின் அபிவிருத்தியில் இடம்பெற பணிக்கப்பட்டிருந்தும் இதுவரை இவ்விரு அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்காதமையால் பிரதேச மக்கள் ஓட்டமாவடி பிரதேச சபையின் மீது அதிருப்தியை வெளியிட்டுவருகின்றனர். அதேபோன்று முறையற்ற வடிகாண் அமைத்தல், வீதி அமைத்தல், மக்களின் தேவைகளை துரித கதியில் நிறைவேற்றாமை, பொழுதுபோக்கிற்கு என அமைக்கப்பட்ட ஓட்டமாவடி சிறுவர் பூங்காவை மூடிவைத்துள்ளமை, பொது நூலகத்தில் போதிய நூற்கள் இன்மை, பிரதேச சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள கடைகளில் பொருட்கள், சேவைகளை பெறாமல் வேறு இடங்களில் பெற்றுவருகின்றமை, ஆட்டா தரிப்பிடங்களை முறையாக திட்டமிட்டு வழங்காமை, இறைச்சிக் கடை வியாபாரிகளின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொள்ளாமல் தவிர்த்துவருகின்றமை, முன்பள்ளிகளை முறையாக ஒழுங்குபடுத்தாமல் அலட்சியமாக நடக்கின்ற நிலை நீடிக்கின்றமை போன்ற குறைபாடுகள் தீர்க்கப்படாமல் உள்ளமையால் ஓட்டமாவடி பிரதேச சபையின் மீது மக்கள் அதிருப்தியை வெளியிட்டுவருதுடன் பிரதேச சபைக்கு பொருத்தமான செயலாளர் ஒருவரை நியமிக்குமாறும் கோரிவருகின்றனர். 

 

6_Fotor