தேசத்தின் முன்னேற்றத்திற்காக உண்மையான பிரஜைகளாக அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் : பிரதமர் !

இன, மத, கட்சி பேதமின்றி இலங்கை மக்கள் அனைவரோடும் கைகோத்து செயற்படுவது தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாக காணப்படுகிறது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள 68ஆவது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ranil-prathamar-720x480-720x4802-720x480

இலங்கையின் 68வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

ஒழுக்கமான தேசமாக எமது நாட்டை உயர்த்தி ‘ஒரே நாடு பாரிய பலம்’ என்ற அடிப்படையில் அனைத்து மக்களையும் ஐக்கியப்படுத்திய நிலையில், 68ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாட கிடைத்தமையானது நாம் பெற்றுக்கொண்ட வெற்றியாகும்.

அவ்வாறு பெற்றுக்கொண்ட சுதந்திரத்தை, நிலையான மிகவும் அர்த்தபூர்வமான சுதந்திரமாக மாற்றிக்கொள்ளும் பொறுப்பு தற்போது நம் அனைவர் மீதும உள்ளது. அதற்காக வேண்டி இன, மத, கட்சி பேதமின்றி இலங்கை மக்கள் அனைவரோடும் கைகோத்து செயற்படுவது தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாக காணப்படுகின்றது.

இங்கிலாந்தின் காலனித்துவத்திலிருந்து நாட்டை மீட்டெடுக்க அனைத்து மக்கள் பிரிவினரையும் ஒன்றிணைத்து முன்நின்று செயற்பட்டதுபோன்று மக்களின் ஜனநாயக உரிமைகள், உரித்துடைமைகளை அடக்கி, ஒடுக்கி சர்வதேச ரீதியாக நாடு அபகீர்த்திக்கு உட்பட்டுக்கொண்டிருந்த இருண்ட காலப்பகுதியில் சர்வாதிகாரத்திலிருந்தும்,

குடும்ப நாட்டை மீட்டெடுக்க நாம் முன்நின்று செயற்பட்டோம். அதன் மிகச் சிறந்த பெறுபேறு கடந்த ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி பெற்றுக்கொண்ட வெற்றியாகும்.

மனித உரிமைகளைப் பாதுகாக்கும் சுதந்திரமான கௌரவம் மிக்க நாடாக எமது தனித்துவத்தை சர்வதேசத்தின் முன்னே நாம் மீண்டும் உறுதிப்படுத்திக்கொண்டிருக்கிறோம். சட்டம், ஒழுங்கு மற்றும் நல்லிணக்கத்தைப் பாதுகாத்து, முன்னேற்றகரமான சமூக, பொருளாதார சூழலில் நாட்டைக் கட்டியெழுப்பும பாரிய பணி நம் முன்பே உள்ளது.

இந்த மொத்த செயற்பாட்டிலும் தமது வகிபாகத்தை ஒழுங்காக விளங்கி தேசத்தின் முன்னேற்றத்திற்காக உண்மையான பிரஜைகளாக அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் 
என்பதை இச்சுதந்திர தினத்தில் விசேடமாக மனதில் கொள்வோம்” – என்றுள்ளது.

 

ranil_wishing_002