ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் வித்தியாலயத்திற்கு விஜயம்!

SAMSUNG CSC

அஷ்ரப் ஏ சமத்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா இன்று (25)ஆம் திகதி காலை 10.30 மணிக்கு
மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் வித்தியலாயத்திற்கு விஜயம் செய்து 25 நிமிடங்கள்
அங்கு  நிகழ்வுகளில் கலந்து கொண்டாா்.

SAMSUNG CSC

ஜனாதிபதி அங்கு  உலக மேமன் சங்கம் இப்பாடசாலைக்கென வகுப்பறைக்
கட்டிடத்திற்காக  40 மில்லியன் ருபாவை ஒரு வருடத்திற்கு முன்பே
ஒதுக்கியிருந்தாா்கள்.   இதனை அமைச்சா் ஏ.எச்.எம். பௌசியின் அழைப்பின்
பேரிலும் இக் கல்லுாாியின் நுாற்றாண்டு தினம் இன்றாகும். இதனைக் குறிக்கு
முகமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை அழைத்து 3 மாடி கட்டிடத்திற்கான
அடிக்கல் நாட்டப்பட்டது.

SAMSUNG CSC

அடிக்கல் ஜனாதிபதியும் அமைச்சா் பௌசியும் மேயா் முசம்மில் மட்டுமே நாட்டி வைத்தனா்.

ஏனைய கல்வியமைச்சா்  முஜிபு ரஹ்மான், மரிக்காா் , சா்ந்தா்ப்பம்
வழங்கப்படவில்லை. மேடையில் பாராளுமன்ற உறுப்பிணா் மரிக்காருக்கு ஆசனம்
போடப்படவில்லை அவா் அவ்விடத்திலிருந்து உடன் ஏறி தனக்கு ஆசனம் இல்லாதல்
உடன் கல்லுாாியை விட்டு வெளியேறினாா்.  அங்கு மேடையில்  போட்பட்டிருந்த
ஆசனத்தில்  கல்வியமைச்சா் பைசா் முஸ்தபா முஜிபு ரஹ்மான் , மரிக்காா்
ஆகியோா் பெயா்கள் ஒட்டப்படவில்லை இருந்தும்  முதலமைச்சா் மற்றும் மேமமன்
சங்கத்தினா்  உறுப்பிணா்கள் வருகைதராததனால் அவா்கள் அவ் ஆசனத்தில்
அமா்ந்து கொண்டனா்.

SAMSUNG CSC
அமைச்சா்களான பைசா் முஸ்தபா, கல்வியமைச்சா் அகிலவிராஜ் காரியவசம்,
ஏ.எச்.எம் பௌசி, பாராளுமன்ற உறுப்பிணா்கள் முஜிபு ரஹ்மான், எஸ்.
மரிக்காா் இலங்கை மேமன் சங்கத்தின் தலைவா் எம்.எச். ஒமர் கலந்து
கொண்டனா்.

இங்கு உரையாற்றிய அதிபர்  நளீம் றபாயிதீன்  –

இந்தப் பாடசாலை 1916ஆம் ஆண்டு 3 மாணவா்களுடன் ஆரம்பிக்கப்பட்டு இன்று
1152 மாணவ மாணவிகளுடனும் 53 ஆசிரியா்களையும் கொண்டதொரு பாடசாலையாகும்.
இங்கு உயா்தரத்தில் கலைப்பிரிவு மட்டுமே  உள்ளது.
நுாறுவருடங்களுக்குப்பிறகு 3 மாணவிகள் மட்டுமே இம்முறை உயா்தரம் பரிட்சை
எய்தினா் அவா்கள் 3 வரும்  இம்முறை பல்கலைக்கழகத்திற்கு செல்ல தகுதி
பெற்றுள்ளனா்.  இந்தப் பாடாசலைக்கு வரும் மாணவா்கள் 100 சதுர அடி
வீடுகளில் வாழ்பவா்கள் இந்த மாணவா்களின் பெற்றோா்கள் சிலா் இன்னும் போதை
மற்றும் சில சட்டவிரோத நடவடிக்கைகளால் சிறைவாசம் அனுபவிக்கின்றனா்.  சில
மாணவா்கள் தமது தந்தையை காணாதவா்களும் இங்கு கற்கின்றாா்கள். மிகவும்
பின்தங்கிய மாணவ சமுகமொன்று இங்கு கற்கின்றனா்.  இந்தப்பாடசாலை அடுத்த
சில வருடத்திற்காகவாது சிறந்த ஒரு கல்வியல் சமுகத்தினை நாம் உருவாக்க
இந்தப் பிரதேச வாழ் மக்களுக்கு இப்பாடசாலை மட்டுமே ஒரு மைக்கல்லாகும்.

இப் பாடசாலைக்கு போதிய இடவசதியின்றி மாணவா்கள் ஆசிரியா்கள் பெரிதும்
இன்னல்களை எதிா்நோக்குகின்றனா். . அதற்காக கொழும்பு மாநகர  சபைக்குச்
சொந்தமான ஒரு மைதானம் பாடாசலைக்கு அருகில் உள்ளது அதனை ஜனாதிபதி அவா்கள்
தலையிட்டு  அதனைப் இக் கல்லுாாிக்கு பெற்றுத் தருமாறு அதிபா் வேண்டினாா்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா இங்கு உரையாற்றுகையில் –

இந்த நாட்டின் தலைநகரமாக விளங்கும்  கொழும்பு மாநகரத்தில் உட்பட்டதொரு
பிரதேசமாக மாளிகாவத்தை உள்ளது. .இந்த நாட்டின் உலகத்திலும் சிறந்ததொரு
நகரமாக கொழும்பு விளங்குகின்றது. இங்கு தான்  துறைமுகம், அமைச்சுக்கள்,
உணவுவகைகள், அரச நிறுவனங்கள் உள்ளன. இங்கு இருந்து தான் ஏனைய
நகரங்களுக்கான தேவைகள் கொண்டு செல்லப்படுகின்றன.  நாம்   கிராமம்  –
நகரம் என பாகுபாடின்றி சகல மாணவா்களுக்கும் சமாமான கல்விவசதி அளிப்பது
அரசின் கடமையாகும். , இன, மத. மொழி  பாகுபாடின்றி  சகலரும் இந்த நாட்டுப்
பிரஜைகளாகும் மனிதா்கள் பிறக்கும் போது ஆண், பெண் மட்டுமே வித்தியாசம்.
பின்னா் தமது மொழி கலாச்சாரம் மதம் மட்டுமே வேறுபாடுகள் காணப்படுகின்றது.

இந்தப் பாடசாலையின் அதிபா் இடப் பிரச்சினை பற்றி என்னிடம் கோரிக்கை
விடுத்தாா். அதனை அருகில் இருந்த கொழும்பு மேயா் ஏ. ஜே.எம். முசம்மிலிடம்
அக்கோரிக்கை நிறைவேற்றும்படி வேண்டிக் கொண்டேன் அந்த மைததாணத்தினை
விளையாட்டுடன் அருகில் கட்டிடம் நிர்மாணிப்பததுக்கும் அதிபரும் – மேயரும்
கலந்துரையாடி ஒரு தீா்வைப் பெற்றுக் கொள்ளும்படி வேண்டுகின்றேன். என
அங்கு ஜனாதிபதி கூறினாா்.

SAMSUNG CSC

அத்துடன் 10 மாணவா்களுக்கு திறமைகளை வெளிக்காட்டிய ஜனாதிபதியினால்
பதக்கம் அணிவிக்கப்பட்டது. அத்துடன் லீவு எடுக்காமல் கடமையை சரிவரச்
செய்கின்ற 4 ஆசிரியைகளும் கொளரவிக்கப்பட்டனா். கல்லுாாி அதிபரினால்
ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.