நேபாளத்தில்,புதிய அரசியலமைப்பில் தங்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதாக பழங்குடி மக்கள் கடும் எதிர்ப்பு!

3cc8c0d5-865b-4d12-bfcf-518c0e7fc927_S_secvpf

நேபாளத்தில், கடந்த செப்டம்பர் மாதம் 20-ம்தேதி புதிய அரசியலமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த புதிய அரசியலமைப்பின்படி, நேபாளம் 7 மாகாணங்களாக பிரிக்கப்பட்டது. ஆனால் புதிய அரசியலமைப்பில் தங்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதாக மாதேசி, தாரு உள்ளிட்ட பழங்குடி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 

மாதேசி மக்களின் தொடர் போராட்டத்தில் இதுவரை சுமார் 55 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொந்தளிப்பான அரசியல் சூழ்நிலை அங்கு நிலவி வருகிறது. ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாதேசி மக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது. 

இந்த நிலையில், மாதேசி சமூகத்தினரின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், நேபாள அரசு புதிய அரசியல் சட்டத்தில் இரு திருத்தங்களை கொண்டு வந்து நேற்று முன்தினம்(சனிக்கிழமை) பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. 

இந்நிலையில், தற்போது கொண்டு வரப்பட்டுள்ள சட்டத்திருத்தம் முழுமையற்றதாக உள்ளதாக கூறி மாதேசிகள் நிராகரித்துள்ளனர். எல்லைகள் மறுவரை உள்ளிட்ட தாங்கள் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகள் இதில் இடம்பெறவில்லை என்ற அவர்கள் விமர்சித்தனர். 

”நேற்று(சனிக்கிழமை) பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு சட்டத்திருத்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட போதும், அதில் ஓரளவிற்கு நேர்மறை இருந்தது. மாதேசி ஆதரவு கட்சிகள் முன் வைத்த கோரிக்கைகள் அதில் இடம்பெறவில்லை.” என்று மாதேசி ஆர்ப்பாட்டக் குழுவின் மூத்த தலைவர் ரமேஷ்வோர் ராய யாதவ் கூறினார்.