தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் யாப்பை உருவாக்குமாறு த. தே. கூ. கோரிக்கை!

tna

தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் அரசியல் யாப்பை உருவாக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. 

அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியல் யாப்பு திருத்தத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய பணி இதுவெனவும் அக் கட்சி குறிப்பிட்டுள்ளது. 

தேசியப் பிரச்சினை தொடர்பில் பல்வேறு யோசனைகள் கொண்டு வரப்பட்ட போதும் அவை உரிய முறையில் செயற்படுத்தப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

மேலும் அண்மையில் இடம்பெற்ற கூட்டமைப்பின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த விடயம் குறித்து அதிக அவதானம் செலுத்தியுள்ளதாக, அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

விஷேடமாக தேசியப் பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பு மூலம் தீர்வு பெற்றுக் கொடுக்க, அரசாங்கத்தை வலிறுத்த வேண்டும் என, மாகாண சபை உறுப்பினர்கள் கோரியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.