பிரதி அமைச்சர் அமீர் அலியினால் புதிய வடிகான் திறந்து வைப்பு !

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்

 

வீடியோ வடிகான் திறப்பு:- youtube.com/watch?v=k8Q5u5znWpg&feature=youtu.be

ஓட்டமாவடி மூன்றாம் வட்டாரத்தின் பிரதான வீதியான மருங்கைகேனி வீதி எனப்படும் எம்.கே வீதிக்கான புதிய வடிகானினை திறந்து வைக்கும் முகமாக ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.ரி.அஸ்மியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உத்தியோகபூர்வ வைபவத்தில் பிரதி அமைசர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி  பிரதம அதீதியாக கலந்து கொண்டு இன்று 24.01.2016 ஞாயிறுக்கிழமை திறந்து வைத்தார்.

 

கவர் போட்டோ_Fotor

 

  பிரதேச சபை உறுப்பினர் அஸ்மியின் வேண்டுகோளுக்கு அமைய பிரதி அமைச்சர் அமீர் அலியின் நிதி ஒதுக்கிட்டில் நிருமாணிக்கப்பட்ட இவ்வடிகான் திறப்பு நிகழ்வில் குறித்த பிரதேசத்தினை அண்டிய அனேகமான பொதுமக்கள் கலந்து கொண்டதனை அவதானிக்க கூடியதாக இருந்தது.

 

6_Fotor