விட்டுச் சென்ற 1 வயது குழந்தையை 13 வருடத்திற்குப்பின் கட்டியணைத்த தாய்

2.018

 

 

 

 

 

 

 

 

 

 

rsz_116

rsz_12

 

 

 

அஷ்ரப் .ஏ. சமட்  (கொழும்பு  விஷேட நிருபர் ) 

அனுராதபுரம் இப்ளோகமவில் இருந்து பணிப்பெண்னாகச் சவுதிஅரேபியா றியாத் நகரத்திற்குக்குச் சென்ற தமயந்தி வயது (47) எபின்னர் 13 வருடத்திற்குப் பின் இன்று கொழும்பு வந்து தமது குடும்பத்துடன் இணைந்து கொண்டார்.

றியாத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு அதிகாரிகள் அப் பணிப் பெண்னை கடந்த 13 வருடங்கள் தேடி கடந்த நிலையில் கடந்த மாதமே அவரை கண்டுபிடித்துள்ளனர். அவர் வாழ்ந்த வீட்டை அணுகி அவரை வெளியில் எடுத்துள்ளனர்.

அப் பெண் தான் வெளிநாடு செல்லும்போது விட்டுச் சென்ற 1 வயது குழந்தையை இன்று 13 வருடத்திற்குப்பின் கட்டியணைத்தார்.

அவர் வெளிநாடு செல்லும்போது 5 குழந்தைகள் இருந்தன. அவற்றில் 2 பெண்கள் அவர்களும்; திருமணம் முடித்துள்ளனர். வறுமையினால் இப் பென்களும் தத்தமது குழந்தைகளை விட்டுவிட்டு வெளிநாடு சென்றுள்ளதாக அப் பெண் தெரிவித்தார்.
இன்று பத்தரமுல்லையில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலத்தா அத்துக்கோரல தலைமையில்

இந் நிகழ்வு நடைபெற்றது. இப் பெண் றியாத்தில் வேலைசெய்ததற்காக 21 இலட்;சம் ரூபாவுக்கான காசோலையையும் அமைச்சர் தலத்தா அத்துக்கோரல வழங்கி வைத்தார்.

தனக்கென ஒரு வீடடை நிர்மாணிக்கவும.; கனவருக்கும் தொழிலின்மையினாலும்
எனது 5 குழந்தைகளையும் வளர்ப்பதற்கும் வழியின்றியே வறுமையினால் தான் வெளிநாடு சென்றதாகக் கூறினார்.

அத்துடன் தான் வெளிநாடு செல்லும்போது எனக்கு 1, 3, 6, 8,10 வயதில் 5 குழந்தைகள் இருந்தன அவர்களை எனது தங்கையிடம் ஒப்படைத்துவிட்டு தான் வெளிநாடு சென்றதாக அப் பெண் தெரிவித்தார்;.

அவரது தங்கை கருத்து தெரிவிக்கையில் – நாங்கள் இந்த நாட்டில் உள்ள சகல கோவில்கள் பண்சலைகள் பள்ளிவாசலுக்கெல்லாம் சென்று சகல தேவலாயங்கள், சென்று எனது தங்கை மீண்டும் கிடைக்க பெற பூஜைகள் செய்துவந்தோம். அல்லது அவரது சவப் பெட்டியாவது வந்து சேரவேண்டும் என பிரார்த்தனைகளில் ஈடுபட்டோம்.

நாங்கள் கடந்த 12 வருடமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு வந்து முறைப்பாடு செய்வதும் அவரை தேடுவதுமாகவே இருந்து வந்தோம் அந்த முறைப்பாட்டின் காரணமாகவே 13 வருடத்திற்குப்பிறகு இவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இவரை அராபிய எஜாமானி துன்புறுத்தியுள்ளார். அவருக்கு உடை உணவு, துணி தொலைத்தொடர்பு ஒன்றுமே வழங்காமல் அவரிடமிருந்து வேலை வாங்கியுள்ளர். அவருக்கு ஒரு சதமும் கூட வழங்கவில்லை. இவர் முதலில் சிரியா நாட்டுக்கு கொண்டு சென்று அங்கிருந்து அவர் எடுத்து வரப்பட்டு இந்த வீட்டில் விடப்பட்டுள்ளார். ஆனால் இவரது எந்தவொரு முகவரும் அந்த நாட்டில் இல்லாமையால் இவரை ஒரு அடிமைப் பெண்னாக வைத்து அந்த அரபு எஜாமானி நடாத்தியுள்ளார்.

றியாத்தில் உள்ள தூதுவராயத்தின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு சேப் ஹவுசின் அதிகாரிகள் 13 வருடத்தின் பின் தேடி வந்து தூதுவரலயத்தின் சேப் ஹவுசில் வைக்கப்பட்டு கடந்த 1 வருடமாக சவுதி எஜமானியிடம் வழக்குத் தொடர்ந்தார்கள்.

இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள் தமது கடமைகளைச் சரிவரச் செய்து எனது தங்கையை உயிரோடாவது தேடித் தந்துள்ளார்கள். அது மட்டுமல்ல அமைச்சருக்கும் வேலைவாய்ப்பு அதிகாரிகளும் எங்களுக்கு 21 இலட்சம் ருபா பெற்றுத்தந்தமைக்கும் நாம் நன்றி கூறுகின்றோம். ஏன அப் பெண்னின் சகோதரி கூறினார்.