வியக்கத்தக்க இந்தியா-வின் புதிய தூதர் அமித்தாப் பச்சன்?

 

 இந்திய சுற்றுலாத்துறையை பிரபலப்படுத்தும் நோக்கில் வியக்கத்தக்க இந்தியா (incredible india) என்ற பிரச்சார திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் விளம்பர தூதராக பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் நேற்று மத்திய சுற்றுலா மந்திரி மகேஷ் சர்மா பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “வியக்கத்தக்க இந்தியா திட்டத்திற்காக விளம்பர நிறுவனமான மெக்கேன் எரிக்சன் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டது. எனவே அந்த நிறுவனத்தால் விளம்பர தூதராக நியமிக்கப்பட்ட அமீர்கான் ஒப்பந்தமும் முடிவுக்கு வந்துவிட்டது” என்று விளக்கமளித்தார். 

da15b388-928a-4ee1-867a-2f6f3f03b0a7_S_secvpf

தற்போது வெளிவந்துள்ள தகவல் படி பிக் பி என்று அழைக்கப்படும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வியக்கத்தக்க இந்தியா-வின் புதிய தூதராக நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

அமிதாப் இல்லாவிடில், நடிகர் அக்ஸய் குமார், நடிகையர் தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா ஆகியோரில் ஒருவரை நியமிக்கப்படலாம். மோடி குஜராத் முதல்வராக பதவி வகித்த போது அம்மாநில சுற்றுலா வளர்ச்சித் துறையின் தூதராக அமிதாப் பச்சன் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.