வடக்கு – கிழக்கு இணைக்கப்பட்டால் முஸ்லிம்களின் நிலை என்ன ?


chandrika-ranil-sirisena_Fotor_Collage

பாரா­ளு­மன்­றத்தின் அதி­காரம் அர­சி­ய­ல­மைப்பு பேர­வைக்கு மாற்­றப்­பட்டு, புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்றை வரை­வ­தற்கு உத்­தே­சிக்­கப்­பட்­டுள்ள இன்­றைய கால­கட்­டத்தில், இனப்­பி­ரச்­சினை தீர்வும் அதில் தமிழ், முஸ்லிம் இனங்­களின் அபி­லா­ஷை­களும் முக்­கிய இடம் பிடிக்­கின்­றன. குறிப்­பாக, தமி­ழர்­களின் அபி­லா­ஷையை நிறை­வேற்றும் முயற்­சியில் வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் இணைக்­கப்­படும் ஒரு நிலைமை வந்தால், இங்கு வாழும் முஸ்­லிம்­களின் அபி­லா­ஷை­க­ளுக்கு என்­ன­வாகும் என்று சிந்­திக்க வேண்­டி­யி­ருக்­கின்­றது.

நாட்டில் நல்­லாட்சி ஏற்­பட்­டதன் பின் தொடர் நிகழ்­வாக பல மாற்­றங்கள் இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. அந்த வகையில் 19ஆவது திருத்தச் சட்டம் சபையில் நிறை­வேற்­றப்­பட்டு அதற்­க­மை­வாக அர­சி­ய­ல­மைப்புப் பேரவை ஸ்தாபிக்­கப்­பட்­டுள்­ளது. இப் பேர­வைக்கு 10 உறுப்­பி­னர்கள் நிய­மிக்­கப்­ப­டு­வார்கள். இதில் ஏழுபேர் மக்கள் பிர­தி­நி­தி­க­ளா­கவும் மூவர் சிவில் சமூ­கத்தை பிர­தி­நி­தித்­துவம் செய்­ப­வர்­க­ளா­கவும் இருப்பர். அதா­வது அர­சி­ய­ல­மைப்­பின்­படி பிர­தமர், சபா­நா­யகர், எதிர்க்­கட்சித் தலை­வ­ர் ஆகியோருக்கு நேர­டி­யாக இதில் இடம்­பெ­று­வ­தற்­கான அதி­காரம் உள்­ளது. அதற்கு மேல­தி­க­மாக ஜனா­தி­பதி, சபா­நா­யகர், பிர­தமர் ஆகி­யோ­ருக்கு தலா ஒவ்­வொரு பிர­தி­நி­தி­களை நிய­மிக்க முடியும். அதேபோல் சிறு­கட்­சி­களின் சார்பில் ஒரு­வரும் சிவில் சமூகப் பிர­தி­நி­திகள் மூவரும் இந்த அர­சி­ய­ல­மைப்புப் பேர­வைக்கு நிய­மிக்­கப்­ப­டலாம். அதற்­க­மைய பிர­தி­நி­திகள் நிய­மிக்­கப்­பட்டு, தற்­ச­மயம் அர­சி­ய­லமைப்புப் பேரவை செயற்­பட ஆரம்­பித்­தி­ருக்­கின்­றது. சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­களும் அதற்­கான தலை­வர்கள், ஆணை­யா­ளர்கள் மற்றும் உறுப்­பி­னர்­களும் நிய­மனம் செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றனர்.

பேரவை பிர­க­டனம்

இந்­நி­லையில். பாரா­ளு­மன்­றத்தின் வகி­பங்கை அர­சி­ய­ல­மைப்பு பேர­வை­யாக மாற்­று­வ­தற்­கான அறி­விப்பு ஜன­வரி 9ஆம் திகதி வெளியி­டப்­ப­ட­வுள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இது தொடர்­பான அறி­விப்பை அன்­றைய தினம் காலை 9 மணிக்கு விடுப்பார். இவ்­வா­றான அறி­விப்­பொன்று வெளி யா­கி­ய­வுடன் தற்­போ­தி­ருக்­கின்ற அரச நிர்­வாக பொறி­மு­றையில் குறிப்­பி­டத்­தக்க மாற்­றங்கள் ஏற்­படும். அதற்­கா­கவே அர­சி­ய­ல­மைப்பு பேரவை முறைமை உரு­வாக்­கப்­ப­டு­கின்­றது என்றும் எடுத்துக் கொள்­ளலாம்.

இனி­வரும் காலங்­களில் தற்­போ­தி­ருக்­கின்ற பாரா­ளு­மன்­றத்­திற்கு சம­மான அதி­கா­ரங்­களை இப் பேரவை கொண்­டி­ருக்கும் என கூறப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்றை வரை­வ­தற்கும் உத்­தே­சிக்­கப்­பட்­டுள்­ளது. தற்­போது நாட்டில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட வேண்­டு­மென்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்ற திருத்­தங்கள் எல்­லா­வற்­றையும் ஏதோ­வொரு வித்­தி­யா­ச­மான மாதி­ரியில் இது உள்­ள­டக்­கி­யி­ருக்கும் என்றும் நம்­பப்­ப­டு­கின்­றது.

இவ்­வா­றான ஒரு கட்­ட­மைப்பு மாற்றம் ஏற்­பட்ட பிறகு, இலங்­கையின் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தற்­கான நகர்­வு­களை அர­சாங்கம் மேற்­கொள்ளும். இலங்­கையின் இனப் பிரச்­சினை என்று வரு­கின்ற போது தமி­ழர்­களின் கோரிக்­கைகள் முதன்மை பெறும். மறு­பு­றத்தில் சிங்­கள, முஸ்லிம் மக்­களின் எதிர்­பார்ப்­புக்­க­ளையும் நிறை­வேற்ற வேண்­டிய நிர்ப்­பந்­தமும் கடப்­பாடும் அர­சாங்­கத்­திற்கு இருக்­கின்­றது.

இந் நிலை­மை­களை வைத்துப் பார்க்­கின்ற போது, தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தமிழ் மக்கள் சார்பில் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களின் இணைப்பை நேர­டி­யா­கவோ மறை­மு­க­மா­கவோ கோரும் என்று ஒரு சில அவ­தா­னிகள் ஊகத்தின் அடிப்­ப­டையில் கூறு­கின்­றனர். தமிழ் அர­சி­யல்­வா­திகள் தங்­க­ளுக்­கி­டை­யேயும்,் ஆட்­சி­யா­ளர்­க­ளு­டனும் அவ்­வப்­போது மேற்­கொண்டு வரு­கின்ற இர­க­சிய, பர­க­சிய சந்­திப்­புக்­களில் பேசப்­படும் விட­யங்கள் தொடர்­பாக கசிந்­தி­ருக்கும் தக­வல்கள் இந்த ஊகத்­திற்கு இன்னும் வலுச் சேர்ப்பன­வாக இருக்­கின்­றன. அதில் தவறு ஒன்­றுமே இல்லை. இவ்­வா­றான ஒரு கோரிக்­கையை தமிழ் தரப்பு முன்­வைத்தால் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்கோ ஆத்­தி­ரப்­ப­டு­வ­தற்கோ எந்த முகாந்­தி­ரமும் கூட இல்லை.

ஏனென்றால், தமி­ழர்­களின் பிரச்­சினை பல தசாப்­தங்கள் புரை­யோடிப் போயுள்­ளது. ஒரு பெரும் பிர­ள­யத்­தையும் அதன் வழி­வந்த பேரிழப்­புக்­க­ளையும் சந்­தித்­து­விட்ட பிறகும் அவர்­க­ளு­டைய கோரிக்­கை­க­ளுக்கு இன்னும் திருப்­தி­க­ர­மான தீர்வு கிடைக்­க­வில்லை என்­பதே நிதர்­ச­ன­மாகும். தமி­ழர்­களின் தாகம் தனி­யீழத் தாயகம் என்­பது ஆயுதப் போராட்ட காலத்தில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்ட கோஷ­மாகும். இது உண்­மை­யா­கவே புலி­களின் தார­க­மந்­திரம் என்று கூறப்­பட்­டாலும் தமி­ழர்­களின் கோரிக்­கைக்கும் இதற்கும் மிக நெருங்­கிய தொடர்­பி­ருக்­கின்­றது.

ஆனால், இன்­றைய நிலையில் அவர்கள் தனி­நாடு கோர­வில்லை. ஆயுதப் போராட்டம் ஒடுக்­கப்­பட்ட பிற்­பாடு அது சாத்­தி­யப்­ப­டவும் மாட்­டாது. என­வேதான், பொலிஸ், நிதி போன்ற அதி­கா­ரங்­க­ளு­ட­னான தனித்த ஒரு ஆட்சிப் பரப்பை அவர்கள் கோரு­கின்­றனர். இக் கோரிக்கை 13ஆவது திருத்­தத்­தினால் வலுப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. ஆட்சிப் பரப்பு அல்­லது எல்லை என்­பதை தமி­ழர்­களைப் பொறுத்­த­மட்டில் அது வடக்கு மட்­டு­மல்ல. மாறாக அது கிழக்கு மாகா­ணத்­தையும் உள்­ள­டக்­கி­ய­தா­கவே என்றும் இருந்து வந்­தி­ருக்­கின்­றது. அத­ன­டிப்­ப­டை­யி­லேயே வடக்கும், கிழக்கும் இணைக்­கப்­ப­டலாம் என்று தோன்­று­கின்­றது.

அர­சி­ய­ல­மைப்பு பேரவை உரு­வாக்­கப்­பட்ட பின்னர் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு வடக்கு கிழக்கு மாகா­ணத்தை மீளவும் நிரந்­த­ர­மாக இணைத்து, அதில் மேற்­சொன்ன அதி­கா­ரங்­களைப் பெற்றுக் கொள்­வ­தற்கு முயற்சி செய்­யக்­கூடும் என்று அனு­மா­னிக்க முடி­கின்­றது. இப்­போ­தி­ருக்­கின்ற அர­சியல் சாதக சூழ்­நி­லை­களை உச்­ச­பட்­ச­மாக பயன்­ப­டுத்திக் கொள்­வ­தற்கு தமிழர் தரப்பு திட­சங்­கற்பம் பூண்­டி­ருக்­கின்­றது. முஸ்­லிம்­களைப் போல ஏதா­வது நடந்து விட்டுப் போகட்டும் என்று சுர­ணை­கெட்ட தன­மாக தமி­ழர்கள் இருக்கப் போவ­தில்லை அந்த அடிப்­ப­டை­யி­லேயே இணைந்த வடக்கு, கிழக்கு மாகா­ணத்தை மீள உரு­வாக்கி, அதில் ஆட்சி, அதி­காரம், சுய­நிர்­ணய உரிமை என கூடு­மான அனைத்து வரப்­பி­ர­சா­தங்­க­ளையும் பெற்றுக் கொள்ள தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு நட­வ­டிக்கை எடுக்கும் என்­பதில் ஐய­மில்லை.

அவ்­வா­றான ஒரு தீர்வு தமி­ழர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­மாயின், முஸ்­லிம்­களின் நிலையும் நிலைப்­பாடும் என்­ன­வாக இருக்கும் என்­பது குறித்து கால­தா­ம­த­மின்றி தீவி­ர­மாக சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது. வடக்கும் கிழக்கும் இணைக்­கப்­பட்டு ஒரு தீர்வு தமி­ழர்­க­ளுக்கு வழங்­கப்­பட்டு, அதில் வட­ப­கு­தியை முதன்­மைப்­ப­டுத்­திய ஒரு ஆட்சிச் சூழல் முன்னெடுக்கப்படு­மாக இருந்தால், அது மற்­றைய சிறு­பான்மை இன­மான முஸ்­லிம்­களின் உரி­மை­களை எந்­த­ள­வுக்கு பாதிக்கும் என்­பது குறித்து முஸ்­லிம்கள் விரி­வாக கலந்து பேச வேண்­டி­யி­ருக்­கின்­றது. தமி­ழர்­க­ளுக்கு வழங்­கு­கின்ற தீர்வே முஸ்­லிம்­களை திருப்­திப்­ப­டுத்தும் என்று நினைத்துக் கொண்டு வாளா­வி­ருக்கப் போகின்­றோமா அல்­லது அவர்­க­ளுக்­கான தீர்­வுக்கு ஆத­ரவு வழங்­கு­கின்ற சம­கா­லத்தில் நமக்­கான உரி­மை­க­ளையும் வென்­றெ­டுக்கப் போகின்­றோமா என்ற முடி­வுக்கு முஸ்லிம் கட்­சி­களும், அர­சி­யல்­வா­தி­களும், பொது அமைப்­புக்­களும் மக்­களும் வந்­தாக வேண்­டிய கால­மாக இது இருக்­கின்­றது.

அஷ்­ரஃபின் கோரிக்கை

M.H.M.Ashraff

முன்னர், வடக்கும் கிழக்கும் தனித்­தனி மாகா­ணங்­க­ளா­கவே இருந்­தன. 1987ஆம் ஆண்டு மேற்­கொள்­ளப்­பட்ட இலங்கை – இந்­திய ஒப்­பந்­தத்தின் பிர­காரம் 1988ஆம் ஆண்டு இரு மாகா­ணங்­களும் வட­கி­ழக்கு என்ற ஒரு தனித்த மாகா­ண­மாக இணைக்­கப்­பட்­டது. இந்த இணைப்பு மக்­களின் விருப்­பப்­ப­டியோ நிரந்­த­ர­மா­கவோ இடம்­பெ­ற­வில்லை. அதா­வது தற்­கா­லி­க­மான ஒரு இணைப்­பாக இது காணப்­பட்­ட­துடன் அதனை நிரந்­த­ர­மாக்­கு­வது என்றால், சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு ஒன்றை மேற்­கொள்ள வேண்­டிய சட்டத் தேவைப்­பாடும் இருந்­தது.

இந்­நி­லையில், வடக்கு கிழக்கு இணைப்பு சட்­ட­வி­ரோ­த­மா­னது எனக் குறிப்­பிட்டும், அதனை இரு மாகா­ணங்­க­ளாக பிரிக்­கு­மாறு கோரியும் தாக்கல் செய்­யப்­பட்ட வழக்­கிற்கு 2006ஆம் ஆண்டு நீதி­மன்றம் தீர்ப்பு வழங்­கி­யது. இவ்­வி­ணைப்பு சட்­ட­வலு அற்­றது என்­பதால் இரு மாகா­ணங்­க­ளாக பிரிக்க வேண்­டு­மென்ற நீதி­மன்ற சிபா­ரி­சுக்கு அமை­வாக, 2007ஜன­வரி 1ஆம் திக­தியில் இருந்து அமு­லுக்கு வரும் வகையில் வட­கி­ழக்கு மாகா­ண­மா­னது வடக்கு, கிழக்கு என இரு மாகா­ணங்­க­ளாக பிரிக்­கப்­பட்­டது,

முன்­ன­தாக வடக்கு, கிழக்கில் வாழ்­கின்ற கணி­ச­மான சனத்­தொ­கையை கொண்ட முஸ்­லிம்­களைப் பற்றி இலங்கை-, இந்­திய ஒப்­பந்தம் கிஞ்­சித்தும் கணக்­கெ­டுக்­காமல் விட்­டமை பல்­வேறு உட்­கேள்­வி­களை தோற்­று­வித்­தி­ருந்­தது. எனவே, வடக்கும் கிழக்கும் ஒரு தனி­மா­கா­ண­மாக இணைக்­கப்­பட்ட போது முஸ்லிம் காங்­கி­ரஸின் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷரஃப், முஸ்­லிம்­களின் எதிர்­காலம் குறித்து தூர­நோக்­குடன் சிந்­தித்தார். இணைந்த வட­கி­ழக்கில் முஸ்­லிம்­களின் இருப்பு பாது­காப்­பற்­றது என்று அவர் பகி­ரங்­க­மாக தெரிவித்தார். தமிழ் ஆயு­தக்­கு­ழுக்­களில் முஸ்­லிம்கள் நம்­பிக்கை இழந்து போன நிலையில், மாகா­ணத்தின் ஆட்­சியில் தமி­ழர்கள் அதுவும் வட­பு­லத்­த­வர்­களின் ஆதிக்கம் அதி­க­மாக இருக்­கின்ற ஒரு புறச் சூழல் காணப்­ப­டு­வதால் அஷ்ரஃப் இவ்­வா­றான ஒரு நிலைப்­பாட்­டுக்கு வந்­த­தாக சொல்ல முடியும். எனவே அவர் பகி­ரங்­க­மாக சில கருத்­துக்­களை தெரிவித்து, கோரிக்­கை­களை முன்­வைத்தார்.

அவ­ரது பிர­தான கோரிக்கை இணைந்த வட­கி­ழக்கு மாகா­ணத்தில் நிலத்­தொ­டர்­பற்ற முஸ்லிம் மாகாண நிர்­வாக அல­காக இருந்­தது. 1980களின் இறு­தியில் நடை­பெற்ற தேர்தல் பிரச்­சாரக் கூட்­டங்­களில் தலைவர் அஷ்ரஃப் இந்தக் கோரிக்­கையை மிகவும் வலி­யு­றுத்தி வந்தார். ஆனால் அது கைகூ­டு­வ­தற்கு முன்­னமே அவ­ரது மரணம் நிகழ்ந்து விட்­டது. அதற்கு பின்­வந்த மு.கா. தலை­வ­ருக்கு இது பற்றி எவ்­வித பிரக்­ஞையும் இல்­ல­வே­யில்லை. அது­மாத்­தி­ர­மன்றி, புலிகள் தோற்­க­டிக்­கப்­பட்­ட­மை­யாலும், வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் பிரிக்­கப்­பட்டு கிழக்கு மாகா­ணத்தின் ஆட்­சியில் முஸ்­லிம்கள் முக்­கிய இடத்தை வகித்து வரு­கின்­ற­மை­யாலும் நிலத்­தொ­டர்­பற்ற மாகாண அல­குக்­கான உந்­து­தல்கள் குறைந்து விட்­ட­தாக சொல்ல முடியும். ஒரு­வி­தத்தில் பார்த்தால், நிலத்­தொ­டர்­பற்ற முஸ்லிம் மாகாண அல­குதான் ஏதோ ஒரு அடிப்­ப­டையில் குறு­க­ல­டைந்து, கரை­யோர மாவட்ட கோரிக்­கை­யாக அண்­மைக்­காலம் வரை இழு­பட்டுக் கொண்­டி­ருப்­ப­தாக குறிப்­பி­டலாம் என நினைக்­கின்றேன்.

தமிழ், முஸ்­லிம்­களின் அபி­லாஷை

sambanthan hakeem

இப்­பேர்ப்­பட்ட பின்­பு­லத்­து­ட­னேயே தமிழர் தரப்பு வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களை நிரந்­த­ர­மாக இணைக்கும் கோரிக்­கையை முன்­வைக்­கலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. அது தொடர்­பான பேச்­சு­வார்த்­தைகள், காய்­ந­கர்த்­தல்கள் எல்லாம் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தா­கவும் உள்­வீட்டு தக­வல்கள் தெரிவிக்­கின்­றன. தமிழ் மக்­களின் நீண்­ட­கால பிரச்­சி­னைக்கு தீர்­வினைப் பெற்றுக் கொடுப்­பதில் இந்­தியா உள்­ளிட்ட நாடுகள் மிகவும் அக்­க­றை­யுடன் இருக்­கின்­றன. இதற்கு வழி­விடும் விதத்தில் அர­சி­ய­ல­மைப்பில் அதற்குத் தேவை­யான ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­ப­டலாம் என்ற அனு­மா­னங்­க­ளையும் சிலர் முன்­வைக்­கின்­றனர்.

நிச்­ச­ய­மாக சத்­தி­ய­மாக தமி­ழர்­களின் பிரச்­சி­னைக்கு நல்­ல­தொரு தீர்வு முன்­வைக்­கப்­பட வேண்டும். அதற்கு குறுக்கே எந்த முஸ்லிமும் நிற்கக் கூடாது. ஆனால் இங்­கி­ருக்­கின்ற பிரச்­சினை தமி­ழர்­க­ளுக்கு வழங்கும் தீர்வு அவர்­களை திருப்­திப்­ப­டுத்­து­வ­தாக இருக்க வேண்­டி­யது மட்­டு­மன்றி, முஸ்­லிம்­களை பாதிக்­கா­த­தா­கவும் இருக்க வேண்டும் என்­ப­தாகும். இது விட­யத்தில் அர­சாங்­கமும் சர்­வ­தே­சமும் கொஞ்சம் தெளிவாக இருப்­ப­தா­கவே தெரிகின்­றது. அதா­வது, தமி­ழர்­க­ளுக்கு வழங்­கப்­படும் தீர்வு முஸ்­லிம்­க­ளாலும் இணங்கிக் கொள்­ளப்­பட்­ட­தாக இருப்­பதே நல்­ல­தென்ற நிலைப்­பாடு சர்­வ­தே­சத்­திற்கு உள்­ளது. சிங்­கள ஆட்­சி­யா­ளர்கள் சிறு­பான்மை மக்­க­ளி­டையே ஏற்­ப­டுத்­திய பிளவு இதன்­மூலம் இல்­லாது செய்­யப்­ப­டுதல் வேண்­டு­மென சர்­வ­தே­சமும் ஆளும் வர்க்­கத்தில் ஒரு பிரி­வி­னரும் கரு­து­கின்­றனர்.

மீண்டும் வடக்கு, கிழக்கு இணைக்­கப்­பட்டால் பிரச்­சி­னை­யில்லை. ஆனால் அப்­படி இணைக்­கப்­பட்டால் முஸ்­லிம்­களின் எதிர்­காலம் பற்றி சிந்­திக்க வேண்டி ஏற்­படும். இப்­போது ஆயு­தக்­கு­ழுக்கள் இல்லை. தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு முஸ்­லிம்­க­ளுடன் நல்­லு­றவை பேணு­கின்­றது. எனவே, இதனை வைத்து மேலோட்­ட­மாகப் பார்க்­கின்ற போது யார் ஆண்­டாலும் பர­வா­யில்லை என்று நாம் எடுத்துக் கொள்­ளலாம். ஆனால், நீண்ட காலத்தில் என்ன நடக்கும் என்று சொல்ல இய­லாது. நிலை­மைகள் எவ்­வாறு மாறும் என கணிப்­பிட முடி­யாது. எனவே, இப்­போதே இரு சமூ­கங்­க­ளுக்­கு­மான தீர்வை வழங்­கு­வதே சாலச் சிறந்­தது. தமி­ழர்­களின் அள­வுக்கு இல்­லா­விட்­டாலும், முஸ்­லிம்­க­ளுக்கும் ஏகப்­பட்ட பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­டா­தி­ருக்­கின்­றன. அவற்றை தீர்ப்­ப­தற்­கான அதி­கா­ரத்தை அந்த தீர்வு வழங்­கு­வ­தாக இருக்க வேண்டும்.

அதா­வது, வடக்கு, கிழக்கு மாகாணம் இணைக்­கப்­பட்டு அதில் ஆட்­சி­ய­தி­காரம் தமி­ழர்­க­ளுக்கு வழங்­கப்­பட்டால், மீண்டும் அஷ்­ரஃபின் கோரிக்­கையை அர­சாங்கம் நிறை­வேற்றித் தர­வேண்டும். அதா­வது, இணைந்த வட­கி­ழக்கு மாகா­ணத்­திற்குள் நிலத்­தொ­டர்­பற்ற முஸ்லிம் மாகாண அலகு ஒன்று வழங்­கப்­பட வேண்டும். இந்த மாகாண பரப்பு என்­பது நில அடிப்­ப­டையில் தொடர்­பற்­ற­தாக அமைந்­தி­ருக்கும். இது இந்­தி­யாவின் பாண்­டிச்சேரி பிராந்­திய மாதி­ரியை ஒத்­த­தாக அமையும்.

அத்­துடன் அஷ்ரஃப் சொன்­னது போல், மன்னார், திரு­கோ­ண­மலை, மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை போன்ற மாவட்­டங்­களில் உள்ள முஸ்லிம் கிரா­மங்­களை உள்­ள­டக்­கி­ய­தாக இந்த மாகாண அல்­லது நிர்­வாக அலகு அமை­யலாம். இதில் இருக்­கின்ற முக்­கிய விடயம் என்­ன­வெனில், வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்­களில் தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் இரண்­டறக் கலந்து வாழ்­வ­தனால், முஸ்­லிம்­களின் நிர்­வாக அலகு நிலத்­தொ­டர்­பற்­ற­தாக காணப்­ப­டு­மாயின், தமி­ழர்­களின் வட­கி­ழக்கு மாகா­ணமும் நிலத்­தொ­டர்­பற்­ற­தா­கவே அமையும்.

இதென்­னடா புதுப் பிரச்­சினை? என்று தமிழ் சகோ­த­ரர்­களும் நண்­பர்­களும் யோசிக்க வேண்டாம்.

ஏனென்றால், பன்­னெ­டுங்­கா­ல­மாக ஏற்­பட்ட பிரச்­சி­னைக்கு நிரந்­தர அர­சியல் தீர்­வொன்றை காணப் போகின்றோம் என்றால் அங்கு வாழும் எல்லா இனக் குழு­மங்­க­ளையும் திருப்­தி­யுறச் செய்யும் ஒரு தீர்­வாக அது அமை­வது அத­னது அடிப்­படை நிபந்­த­னை­யாக இருக்க வேண்டும். இல்­லா­விட்டால், சிங்­கள ஆட்­சி­யா­ளர்­க­ளிடம் தமி­ழர்கள் சண்டை பிடித்­தது போல தமிழ் அதி­கார தரப்­பி­ன­ருடன் என்­றா­வது ஒருநாள் முஸ்­லிம்கள் முரண்­ப­டலாம். அப்­போது நானோ நீங்­களோ இவ்­வு­லகில் இல்­லாது இருக்­கலாம். ஆனால் அது நடக்­க­மாட்­டாது என்­ப­தற்கு என்று நம்மால் அறு­தி­யிட்டுச் சொல்ல முடி­யாது. ஒரு சிறு முறுகல் வந்­தா­லேயே சிங்­கள அர­சாங்­கங்கள் இரு இனங்­க­ளையும் மோத­விட்டு வேடிக்கை பார்க்கும் என்­பதால், எதுவும் நடக்கும் என்ற நிய­தியை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

எனவே இது குறித்து தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் சிந்­திக்க வேண்­டு­மென கோரு­கின்றேன். தமி­ழர்கள் புறக்­க­ணித்­தலின் வலியை உணர்ந்­த­வர்கள். எனவே முஸ்­லிம்­களின் நியா­ய­மான கோரிக்­கை­களை தராது அடம்­பி­டிக்க மாட்­டார்கள் என்றே தோன்­று­கின்­றது. ஆனால், தாம் பத­வி­களைப் பெற்­றது போல் குறுக்கு வழி­ய­லன்றி, நேரான தௌிவான பாதையில் சென்று, முறை­யாக கோரிக்­கை­க­ளையும் அதற்­கான நியா­யப்­ப­டுத்­தல்­க­ளையும் முஸ்லிம் தரப்பு முன்­வைத்து தமக்­கு­ரி­யதை சர்­வ­தேசம், அர­சாங்கம், தமி­ழர்­களின் சம்­ம­தத்­துடன் பெற்றுக் கொள்ள வேண்டும்.

இது அஷ்­ரஃபின் கோரிக்கை என்ற அடிப்­ப­டை­யிலும், முஸ்­லிம்­களின் பிர­தான கட்­சி­யான மு.கா. ஆரம்­பிக்­கப்­பட்­டதன் அடிப்­படை நோக்கம் என்ற வகை­யிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸிற்கு இது விட­யத்தில் கூடிய பொறுப்பு உள்­ளது. கரை­யோர மாவட்­டத்தைக் கூட பெற்றுத் தரு­வ­தற்கு முயற்சி செய்­யாத அதன் தலைவர், நிலத் தொடர்­பற்ற முஸ்லிம் மாநி­லத்தை பெற்­றுத்­தர பாடு­ப­டு­வாரா? என்று மு.கா. உயர் பீட உறுப்­பினர் ஒருவர் என்­னிடம் கேட்டார். அதேுபோல் வில்­பத்து விவ­கா­ரத்தில் இருந்து இன்னும் வௌியில் வர முடி­யா­தி­ருக்கும் மக்கள் காங்­கிரஸ் தலைமை இதை பேசுமா என்றும் தொியவில்லை.

எவ்வாறிருப்பினும், இது ரவூப் ஹக்கீமினதோ அல்லது றிசாட் பதியுதீனினதோ அல்லது வேறு முஸ்லிம் அரசியல்வாதிகளினதோ சொந்தப் பிரச்சினையல்ல. மாறாக வடக்கு கிழக்கில் வாழ்கின்ற ஒட்டுமொத்த முஸ்லிம்களினதும் எதிர்காலம் என்பதால் மக்கள்தான் சிந்திக்க வேண்டும்.

rauff hakeem , rishad

இவ்வாறான ஒரு மாகாண இணைப்பு இடம்பெற்று தீர்வு வழங்கப்படுமாயின், அது நடைபெறுவதற்கு குறைந்தது ஒன்றரை வருடங்கள் எடுக்கும் என்று கணிப்பிட்டுச் சொல்ல முடியும். அதற்கு முன்னதாகவே தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும். தமிழர்களும் முஸ்லிம்கள் இவ்விடயத்தை கலந்துபேசி, இணக்கம் கண்டபின் ஒரு வரைபை தயாரித்து அரசாங்கத்திடம் முன்வைத்தால் நிலைமைகளை லாவகமாக கையாளலாம் என்று தோன்றுகின்றது.

அதேபோல் முஸ்லிம் சமூகம் பற்றி சிந்திக்கின்ற மூத்த அரசியல்வாதிகள், ஆர்வலர்கள் இது குறித்த கலந்தாய்வுகளை தற்போது ஆரம்பித்துள்ளதாக அறிய முடிகின்றது. அது பரந்தளவில் மேற்கொள்ளப்பட வேண்டும். அரசாங்கம் கருத்தறியும் நடவடிக்கையை அல்லது சர்வஜன வாக்கெடுப்பை மேற்கொள்ளும் போது சரியான முறையில் தமது நிலைப்பாடுகளை வௌிப்படுத்த வேண்டும். குறிப்பாக, தமது அரசியல்வாதிகளுக்கு உயர்ந்தளவான அழுத்தங்களை பிரயோகிப்பது அவசியமாகும்.

கூரையேறி கோழி பிடிக்கவே முடியாத முஸ்லிம் அரசியல்வாதிகள், வைகுண்டம் போய் சூரியனை பிடித்து தருவார்கள் என்று முஸ்லிம் மக்கள் நம்பிக் கொண்டிருந்தால், அதற்கு யாரும் பொறுப்பல்ல.

 ஏ.எல்.நிப்றாஸ்
nifras 
நன்றி – வீரகேசரி – 26.12.15