• Home »
  • Slider »
  • டெல்லியில் மாதம் ரூ.333 வாடகையில் இயங்கும் லாலு கட்சி அலுவலகம்

டெல்லியில் மாதம் ரூ.333 வாடகையில் இயங்கும் லாலு கட்சி அலுவலகம்

புதுடெல்லி

lalu-prasad-yadav

லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரீய ஜனதா தள கட்சி அலுவலகம் தலைநகர் டெல்லியில் உள்ள வி.பி. ஹவுஸ் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த கட்டிடத்திற்கான வாடகை என்ன? என்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் சமூக ஆர்வலர் சுபாஷ் அகர்வால் என்பவர் கேட்டிருந்தார்.

இதற்கு ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சகம் பதில் அளித்து உள்ளது. அதில், கடந்த 2001–ம் ஆண்டு ஜூன் 1–ந் தேதியில் இருந்து வி.பி. ஹவுஸ் கட்டிடத்தில் ராஷ்டிரீய ஜனதா தள அலுவலகம் இயங்கி வருகிறது. 2 அறைகள் கொண்ட இந்த அலுவலகத்துக்கான மாதவாடகை வெறும் ரூ.333 மட்டுமே செலுத்தப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி கடந்த 2008–ம் ஆண்டு டெல்லியில் ராப்ரி பவன் என்ற பெயரில் 3 மாடி கொண்ட தலைமையகத்தை கட்டியபோதும் தொடர்ந்து இந்த வி.பி.ஹவுஸ் கட்டிட அலுவலகத்தையே பயன்படுத்தி வருகிறது.

 

 

முக்கிய குறிப்பு: லங்கா ப்ரொண்ட் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு லங்கா ப்ரொண்ட் நியூஸ் பொறுப்பல்ல.
-நிருவாகம்-