இயற்கை அனர்த்தங்களின்போது காலதாமதமின்றி சேவையாற்றுவதற்கு கிழக்கு மாகாணத்தில் உரிய பொறிமுறை உருவாக்கப்படல் வேண்டும் !

IMG_7078_Fotor

கிழக்கு மாகாண சபையின் 48வது அமர்வில் முன்னால் அமச்சரும் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை அவர்களினால் கொண்டு வரப்பட்ட அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்குரிய நஷ்ட ஈட்டுத் தொகையை அதிகரிப்பதற்கான தனிநபர் பிரேரனையை வழிமொழிந்து மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீ.மு.கா.குழுத்தலைவருமான ஆர்.எம்.அன்வர்கள் உரையாற்றும் பொழுது திடீரென ஏற்படும் இயற்கை அனர்த்தங்களின் போது பாதிக்கப்படும் மக்களுக்கு மிக அவசரமாக உதவி செய்யும் நோக்குடன் கிழக்கு மாகாண சமூகசேவை திணைக்களம் எப்பொழுதும் தயார் நிலையில் இருக்க வேண்டிய அவசியம் காணப்படுவதுடன் அதற்கென திட்டமிடப்படப்பட்ட விதத்திலான நிதி முன்னேற்பாடொன்றுடன் கூடிய விஷேட பொறிமுறை ஒன்று காணப்பட வேண்டும் எனவும் அதற்காக கிழக்கு மாகாண சபையின் 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் எனவும் ஆலோசனை முன்வைத்தார்.

 

தொடர்ந்து உரையாற்றும் பொழுது இவ்வாறான திடீர் அனர்த்த நிலமைகளின் பொழுது உதாரணமாக வெள்ளம் தேங்கி நிற்கின்ற பகுதிகளில் வெள்ள நீரை உடனடியாக வெளியேற்றுவதற்கு உள்ளுராட்சி மன்றங்களின் ஒத்துழைப்புடன் சமூக சேவை திணைக்களமும் இணைந்து செயற்படுவதற்கும் அதே போன்று இடைத்தங்கல் முகாம்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்படுகின்ற பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் ஏனைய அவசர தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதற்கான நிதியுதவியை மத்தியரசிலிருந்து எதிர்பார்க்கின்ற பொழுது அதிக கால தாமதமும் அதே வேளை மட்டுப்பாடுகளுடனான நிதி உதவியுமே வந்து சேர்கின்றது. இதனால் எமது மக்களுக்கு உடனடியாக உதவுவதற்கு மக்கள் பிரதிநிதிகளாகிய எங்களால் களத்தில் நேரடியாக சென்று பார்வையிட்டும் கூட எந்த வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் எடுக்க முடியவில்லை.

IMG_7137_Fotor

இதனை சபையில் கௌரவ உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் விபரித்துதடன் ஏற்கெனவே 2011ம் ஆண்டு வெள்ள அனர்த்தமொன்றின்போது மாகாண சபை உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து குறிப்பிட்ட தொகையொன்று அவசர தேவையின் நிமிர்த்தம் சமூக சேவை திணைக்களத்தினூடாக வழங்கப்பட்டதையும் நினைவு படுத்திய பொழுது இதனை சபையில் அணைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக வரவேற்றதுடன் மாகாண முதலமைச்சர் கௌரவ நஸீர் அகமட் அவர்களும் சமூக சேவை திணைக்களத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஏ.எல.எம்.நஸீர் அவர்களும் ஏற்றுக் கொண்டு அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சபையில் உறுதியளித்தனர்.

கி.மா.சபை.உறுப்பினரின் ஊடகப்பிரிவு