காணிப் பிரச்சினைக்கு விசாரணை செய்ய விசேட செயலணி -அமைச்சர் ஹசனலியிடம் பிரதமர் ரணில் இணக்கம்

காணிப் பிரச்சினைக்கு விசாரணை செய்ய விசேட செயலணி -அமைச்சர் ஹசனலியிடம் பிரதமர் ரணில் இணக்கம்
காணிப் பிரச்சினைக்கு விசாரணை செய்ய விசேட செயலணி -அமைச்சர் ஹசனலியிடம் பிரதமர் ரணில் இணக்கம்

மீரா .எஸ் .இஸ்ஸடீன் ,ஊடகச் செயலாளர்- சுகாதார இராஜங்க அமைச்சு

கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் காணி பிரச்சினைகளை விசாரணை செய்து அவற்றிற்கு உரிய நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்குடன் அதிகாரம்மிக்க விசேட செயலணி ஒன்றை அமைப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார். (17.03.2015) காலைபாராளுமன்றத்தில் நடைபெற்றஅரசாங்கதரப்புகுழுக் கூட்டத்தில் இவ்விடயம் சம்பந்தமாக முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் எம்.ரீ.ஹசன்அலி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது பிரதமர் தனது உடன்பாட்டை வெளியிட்டார்.

அடுத்தவாரம் செயலணியினைஅமைக்கும் பணியைதான் செய்யப் போவதாகவும் அதுபற்றிகலந்தாலோசிப்பதற்காக முஸ்லிம் காங்கிரஸ்ஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலியைதொடர்புகொள்வதாகவும் பிரதமர் உறுதியளித்தார். அம்பாறைமாவட்டத்தில் நீண்டகாலமாகதீர்க்கப்படாதுதொடர்ந்துவந்த 21 காணிகள் தொடர்பானஆவணங்களை முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் பிரதமரிடம் பாராளுமன்றத்தில் வைத்துஏற்கனவேபிரதமரிடம் ஒப்படைத்;திருந்தார்.

மட்டக்களப்புஇதிருமலைமாவட்டங்களில ;இது போன்று தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகள்சம்பந்தமானஆவணங்கள் தற்போதுதயாராகிவிட்டதனால் அடுத்தவாரம் விசேடசெயலணிஅமைக்கும் போதுஅவைசமர்ப்பிக்கப்படவுள்ளன. ஏற்கனவேசிலஆண்டுகளுக்குமுன்னர்
தயாரிக்கப்பட்டிருந்தஆவணங்களில் உள்ளவிபரங்களைதற்போதுள்ளநிலவரங்களுக்குஏற்றவாறுமீளாய்வுசெய்துபுதியதகவல்களையும் உள்ளடக்கியதானஆவணங்களேதற்போதுபிரதமரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

இவ்ஆவணங்களைப் பரிசீலித்துநியாயமானதீர்வுகளைவழங்குவதற்காகசகலஅதிகாரம் பொருந்தியஒருவிசேடசெயலணியைஅமைக்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதமரைக் கேட்டிருந்தது. அரசியல் மற்றும் இனவாதநோக்குடன் கிழக்குமாகாணத்தில் கடமைபுரிந்தஉயர் அதிகாரிகள் யுத்தபின்னணியைதமக்குசாதகமாகபயன்படுத்திக் கொண்டு இக் காணிப் பிரச்சினைகளுக்குநியாயமானதீர்வுகளைவழங்காது இழுத்தடித்துவந்துள்ளனர். இவ்வாறானஅவலநிலையைக் காரணமாகக் காட்டியேவிசேடசெயலணியைஅமைத்துத் தருமாறும் 100 நாள் வேலைத்திட்டத்திற்குள் இதனைஅமுல்படுத்துமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.