19ஆல் அதிகாரம் குறைப்பு ….

IMG_1261c-300x188

பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள அர­சி­ய­ல­மைப்பின் 19ஆவது திருத்தச் சட்­டத்தின் பிர­காரம் ஜனா­தி­ப­தியின் பல்­வேறு நிறை­வேற்று அதி­கா­ரங்கள் குறைக்­கப்­பட்­டுள்­ளன என்று அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ன தெரி­வித்தார்.

அர­சி­ய­ல­மைப்பு பேர­வைக்கு ஏழு மக்கள் பிர­தி­நி­தி­களும் மூன்று சிவில் பிர­தி­நி­தி­களும் அங்­கத்­துவம் வகிப்­ப­தாக திருத்தம் செய்­யப்­பட்­டுள்­ளது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில்  நடை­பெற்ற விசேட செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்,

அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்தச் சட்­டத்தின் ஊடாக ஜனா­தி­பதி பல நிறை­வேற்று அதி­கா­ரங்கள் நீக்­கப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக 19 ஆவது திருத்தச் சட்­டத்தின் ஊடாக ஜனா­தி­ப­திக்கு எதி­ராக வழக்கு தாக்கல் செய்ய முடி­யாது என்ற வரப்­பி­ர­சாரம் நீக்­கப்­பட்­டுள்­ளது. தற்­போது அவ­ருக்கு எதி­ராக அடிப்­படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்­யலாம்.

மேலும் சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­களை நிய­மி­ககும் வகையில் அர­சியல் அமைப்புப் பேரவை உரு­வாக்­கப்­ப­ட­வுள்­ளது. அந்த செயற்­பாட்டில் ஒரு சில திருத்­தங்கள் செய்­யப்­பட்­டுள்­ளன. அதா­வது முதலில் மூன்று மக்கள் பிர­தி­நி­தி­களும் ஏழு சிவில் பிர­தி­நி­தி­களும் அர­சி­ய­ல­மைப்புப் பேர­வையில் அங்­கத்­துவம் வகிப்­ப­தாக இருந்­தது. ஆனால் தற்­போது ஏழு மக்கள் பிர­தி­நி­தி­களும் மூன்று சிவில் பிர­தி­நி­தி­களும் அங்­கத்­துவம் வகிப்­ப­தாக திருத்தம் செய்­யப்­பட்­டுள்­ளது. இது மிகப்­பெ­ரிய பாத­க­மான விட­ய­மாக தெரி­ய­வில்லை.

சுயா­தீன ஆணைக்­கு­ழுக்கள் விரைவில் நிறு­வப்­படும். தேர்தல் ஆணைக்­கு­ழுவும் நீதி சேவை ஆணைக்­குழும் பாரா­ளு­மன்­றத்­திற்கு பொறுப்­புக்­கூ­ற­வேண்­டிய தேவை­யில்லை. அந்த வகையில் அனைத்து ஆணைக்­கு­ழுவும் உரு­வாக்­கப்­படும்.

மிக முக்­கி­ய­மாக தற்­போது ஜனா­தி­பதி பாரா­ளு­மன்­றத்­திற்கு பொறுப்­புக்­கூ­ற­வேண்­டி­ய­வ­ராக இருக்­கின்றார். கேள்­வி­க­ளுக்கு அவர் பாரா­ளு­மன்­றத்­திற்கு வருகை தந்து பதி­ல­ளிக்க வேண்­டிய தேவை கடந்த செவ்­வாய்க்­கி­ழமை முதல் உரு­வா­கி­யுள்­ளது. அது­மட்­டு­மன்றி பாரா­ளு­மன்­றதைக் கலைக்கும் அதி­கா­ரமும் அவ­ரி­ட­மி­ருந்து நீக்­கப்­பட்­டுள்­ளது. இது நிறை­வேற்று அதி­கா­ரத்தில் செய்­யப்­பட்­டுள்ள மிகப் பெரி­ய­தொரு அதி­கார குறைப்­பாகும்.

2001 ஆம் ஆண்டு நாம் பெரும்­பான்மை பலத்­துடன் ஆட்சி செய்த போது அப்­போ­தைய ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா குமா­ர­துங்க அமைச்­ச­ரவை அமைச்­சர்­க­ளுக்­குக்­கூட அறி­விக்­காமல் பாரா­ளு­மன்­றத்தைக் கலைத்தார். அதன்­போது மக்கள் தீர்ப்பு கூட கவ­னத்­தில்­கொள்­ள­வில்லை. ஆனால் இன்று ஜனா­தி­ப­தியின் இந்த அதி­காரம் நீக்­கப்­பட்­டுள்­ளது.

அது­மட்­டு­மன்றி 17 ஆவது திருத்தச் சட்­டத்தில் உரு­வாக்­கப்­பட்ட சுயா­தீன ஆணைக்­கு­ழுக்கள் 18 ஆவது திருத்த சட்­டத்தின் மூலம் நீக்­கப்­பட்­டன. அவற்றை நாம் 19 ஆவது திருத்த சட்­டத்தின் ஊடாக நிறு­வி­யி­ருக்­கின்றோம். 18 ஆவது திருத்த சட்­டத்­திற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்த நாம் பகி­ரங்­க­மாக மன்­னிப்பு கோரு­வ­துடன் வருந்­து­கின்றோம்.

அது­மட்­டு­மன்றி ஆறு வரு­டங்­க­ளான ஜனா­தி­பதி பத­விக்­கா­லத்தை ஐந்து வரு­டங்­க­ளாக குறைத்துள்ளோம். ஜனாதிபதி ஒருவர் இரண்டு முறைமாத்திரமே பதவி வகிக்கலாம் என்று சட்டத்தை திருத்தியுள்ளோம்.

அமைச்சர்களின் எண்ணிக்கையையும் அவர்களுக்குரிய இலாக்களையும் தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது. ஆனால் யாரை அமைச்சர்களாக நியமிப்பது என்பது தொடர்பில் பிரதமரின் ஆலோசனையை ஜனாதிபதி பெறலாம். எனினும் பிரதமரின் அந்த ஆலோசனையை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றார்.