பேஸ்புக் ஊழியர்கள் ஆப்பிள் பயன்படுத்த தடை !

பேஸ்புக் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளை உருவாக்கும் பிரிவில் வேலை செய்யும் பணியாளர்கள் அனைவரும் ஆப்பிள் போனை பயன்படுத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. 

android-apple-facebook-featured

ஏதோ பேஸ்புக்கிற்கும் ஆப்பிளுக்கும் சண்டை என்று நினைத்துவிட வேண்டாம். பேஸ்புக்கை பயன்படுத்தும் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவது ஆண்ராய்ட் போன்களைத்தான். ஆனால், பேஸ்புக்கில் பணிபுரிபவர்கள் பயன்படுத்துவது ஆப்பிள் போன்களை தான். எனவே, அவர்களுக்கு ஆண்ராய்ட் போன்களை பயன்படுத்துபவர்களின் பிரச்சனைகளை புரிந்துகொள்வது கடினம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கான தலைமை செயல் அதிகாரி கிறிஸ் காக்ஸ் தெரிவித்துள்ளார். 
மேலும் இது குறித்து கிறிஸ் காக்ஸ் தெரிவிக்கையில், “இங்கு வேலை செய்பவர்களில் பெரும்பாலனவர்கள் ஆப்பிள் போன்களையே தேர்ந்தெடுக்கிறார்கள். எனவே எங்கள் அணியில் இருக்கும் அனைவரையும் ஆப்பிள் போன்களில் இருந்து ஆண்ராய்ட் போன்களுக்கு மாறும்படி கூறியுள்ளேன். இதன் மூலம் பேஸ்புக் பயனாளர்கள் சந்திக்கும் அதே பிரச்சனைகளை அவர்களும் எதிர்கொள்ள நேரிடும்.” என்று தெரிவித்துள்ளார்