கிழக்கு மாகாண சுகாதார திணைக்கள விளையாட்டு விழா-2015

பி.எம்.எம்.ஏ.காதர்

 

கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் 5வது விளையாட்டு விழா- 2015 சனிக்கிழமை (29-08-2015)கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை பிரதேசமான கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் மிகவும் கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

 

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன் தலைமையில் நடைபெற்ற இந்த விளையாட்டு விழாவில் அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சேனக்க தலகல, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ்.சதுர்முகம்,திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி அ.ராஜ்மோகன் உள்ளீட்ட சுகாதார திணைக்கள அதிகாரிகள,; டாக்டர்கள் உள்ளீட்ட உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

 

கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்தில் சேவை புரியும் உத்தியேத்தர்களுக்கிடையில் நடைபெறும் இவ்விளையாட்டு விழாவில் அம்பாறை,மட்க்களப்பு,திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள் பங்குபற்றினார்கள்.
இங்கு ஓட்டம்,பரிதி வட்டம் எறிதல்,குண்டெறிதல்,ஈட்டி எறிதல்,காற்பந்து,கிரிகட்,அஞ்சல் ஓட்டம்,வேக நடை,வலைப் பந்து,கரப் பந்து கயிறிழத்தல்,வினோத உடை,உள்ளீட்ட விளையாட்டு;க்களுடன் கலை கலாசார நிகழ்வுகளும் நடைபெற்றன.

1-PMMA CADER-29-08-2015-1_Fotor 3-PMMA CADER-29-08-2015-1_Fotor

முக்கிய குறிப்பு: லங்கா ப்ரொண்ட் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு லங்கா ப்ரொண்ட் நியூஸ் பொறுப்பல்ல.
-நிருவாகம்-