ஊடகவியலாளர் எக்னலி கொடவின் விசாரணையைத் திசை திருப்ப இடமளிக்கவேண்டாம் ஊடக சிவில் அமைப்புக்கள் கோரிக்கை ! [வீடியோ]

 

 

அஹமட் இர்ஷாத்

 

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கொலை தொடர்பான விசாரணைகளை திசைதிறப்ப இடமளிக்காது அந்த அநியாயத்தைச் செய்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஊடக அமைப்புக்களும், சிவில் அமைப்புக்களும் நேற்று கூட்டாக வேண்டுகோள் விடுத்தன. 

ஊடக சுதந்திரத்திற்கான செயற்குழு ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் மாநாட்டில் ஊடக அமைப்புக்களின் பிரதிநிதிகளும்இ சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் ஒருமித்து இக்கருத்தினை வெளியிட்டனர். 

கொழும்பு – 10, சி.எஸ்.ஆர். மண்டபத்தில் இச்செய்தியாளர் மாநாடு நடைபெற்றது. பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் தர்மசிறி பண்டாரநாயக்க ஊடக சுதந்திரத்திற்கான செயற்குழுவின் ஏற்பாட்டாளர் சமன் மகாராச்சி தொழிற்சங்க பிரமுகர் சமன் ரத்னபிரிய, ஊடகவியலாளரும், கலைஞருமான அனுர ராஜகுரு, ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன், ஊடக சுதந்திரத்திற்கான செயற்குழு முக்கியஸ்தர் பிரகீத் கமகே, பல்கலைகழக விரிவுரையாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவஸ்ரீ உட்பட பலர் கருத்து தெரிவித்தனர்.

03_Fotor 01_Fotor 02_Fotor