கிழக்கில் 8 பாடசாலைகளுக்கு அமெரிக்க நிதி முதலமைச்சரால் வழங்கிவைப்பு!

முதலமைச்சர் ஊடகப்பிரிவு 

அமெரிக்க  நிதியில் இருந்து கடந்த வருடங்களில் கட்டங்கட்டமாகப் பகிர்ந்தளிக்கப்படும் நிதியில் இருந்து இம்முறை கிழக்கு மாகாணத்தில் 8 பாடசாலைக்கு $ 3,218,000 அமெரிக்க டொலர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சரின் பெருமுயற்சியால் பகிர்ந்தளிக்கப்பட்டன..

இதன் முதற்கட்டமாக கடந்த 2012ஆம் ஆண்டில் இவ்விருதிட்டங்களிலும் மொத்தமாக 19 பாடசாலைகள் உள்ளடக்கப்பட்டிருந்தன.  இதில் 11 தமிழ் பாடசாலைகளும் 08 முஸ்லிம் பாடசாலைகளும் உள்ளடக்கப்படுள்ளன. தமிழ் பாடசாலைகளுக்கான மொத்த நிதி ஒதுக்கீடு 5.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். முஸ்லிம் பாடசாலைகளுக்கான மொத்த நிதி ஒதுக்கீடு 3.4 மில்லியன் டொலர்களாகும். 

தமிழ் பாடசாலைகளுக்கான நிதி முதற்கட்டத்தில் வழங்கிவைக்கப்பட்டதுடன் இம்முறை ஒரு தமிழ் பாடசாலை உவெஸ்லி உயர்தரப்பாடசாலை முஸ்லிம் பாடசாலைகளுடன் மேலதிகமாகச் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தகது.
வழங்கிவைக்கப்பட்ட பாடசாலைகளும் தொகைகளுமாக:

01. அட்டாளைச்சேனை அந்-நூர் மஹாவித்தியாலயத்திற்கு 200,000 அமெரிக்கடொலர்கள்.

02.ஏறாவூர் – அப்துல் காதர் வித்தியாலயத்திற்கு 240,000 அமெரிக்கடொலர்கள்.

03.கல்முனை- வெஸ்லி உயர்பாடசாலைக்கு 240,000 அமெரிக்கடொலர்கள்.

04. சாய்ந்தமருது காரியப்பர் வித்தியாலயத்திற்கு 590,000 அமெரிக்கடொலர்கள்.

05.காவத்தமுனை – அல்-அமீன் வித்தியாலயத்திற்கு 178,000 அமெரிக்கடொலர்கள்.

06. காத்தான்குடி -பதுரியா வித்தியாலயத்திற்கு 590,000 அமெரிக்கடொலர்கள்.

07.சம்மாந்துறை தாறுஷலாம் மகாவித்தியாலயத்திற்கு 590,000அமெரிக்கடொலர்கள்.

08.நிந்தவூர் -அல்-மஷ்ஹர் வித்தியாலயத்திற்கு 590,000 அமெரிக்கடொலர்கள்.

ஆகிய பாடசாலைகளுக்கு இத்தொகைகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.