• Home »
  • அரசியல் »
  • அம்பாரை மாவட்டத்திற்குள் ஊடுருவியுள்ள சில்லறைக் கட்சிகள் நாட்டை விட்டு விரண்டோடும் !

அம்பாரை மாவட்டத்திற்குள் ஊடுருவியுள்ள சில்லறைக் கட்சிகள் நாட்டை விட்டு விரண்டோடும் !

unnamed_Fotor


எஸ்.அஷ்ரப்கான்

எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்வதா, மீண்டும் ஒற்றுமைப்பட்ட சமூகமாக நாம் மாறுவதா என்ற தீர்மானத்தை எடுக்க வேண்டிய தார்மீக பொறுப்பு அம்பாரை மாவட்ட முஸ்லிம்களுக்கு உண்டு என வேட்பாளர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்

சாய்ந்தமருதில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கருத்தரங்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சாய்ந்தமருது மத்திய குழு உறுப்பினரும், தொழிலதிபருமான ஹக்கீம் ஷெரீப் தலைமையில் சாய்ந்தமருதில் நடைபெற்றது.  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சாய்ந்தமருது அமைப்பாளரும், கல்முனை மாநகர சபையின்உறுப்பினருமான எம்.ஐ.எம்.பிர்தௌஸ்  உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

 

இங்கு உரையாற்றிய வேட்பாளர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தொடர்ந்தும் இங்கு உரையாற்றுகையில்,

 

இன்று நாட்டில் நல்லாட்சி மேலோங்கியிருக்கும் இக்கால கட்டத்தில் பாராளுமன்றம் செல்லும் ஒவ்வொருஉறுப்பினருக்கும் பெரும் சலுகைகள் அதாவது மக்களின் அபிலாசைகளை தேவையான ஊர்களுக்குத்தேவையான சேவைகளைச் செய்வதற்கு சந்தப்பம் வழங்கப்படும். அப்படி ஒரு சிறந்த ஆட்சியை அமைக்க ஐக்கிய தேசிய முன்னனி வெற்றி பெற வேண்டும். மீண்டும் நம் நாடு இருண்ட யுகத்தை நோக்கிச் செல்லமுடியாது. அதற்காக மக்கள் நீங்கள் உங்களை தயார் படுத்தி நாமும், நமது மக்களும் நின்மதியாக வாழும்நாடாக நம் நாட்டை மாற்றியமைக்க சிறந்த அரசை நிர்மாணிப்பது நமது கடமையாகவிருக்கிறது.

 

 

எதிர்வரும் 18ஆம் திகதிக்குப் பிறகு அம்பாரை மாவட்டத்திற்குள் ஊடுருவியுள்ள சில்லறைக் கட்சிகள்நாட்டை விட்டு விரண்டோடும் நிலைப்பாட்டை எடுக்கவுள்ளனர். அந்தளவு அவர்களை மக்கள்அவமானப்படுத்தி விரட்டியடிக்க காத்துக்கொண்டிருக்கிறார்கள். எனவே நீங்கள் யாரும் பசப்புவார்த்தைகளுக்கு உங்களை மாற்றிக்கொள்ளாது ஆட்சியின் பங்காளர்களாக மாறியிருக்கும் இலங்கைத்தேசத்தின் முஸ்லிம்களின் குரலாக ஒலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பக்கம்அனைவரும் ஒன்று பட்டு உழைக்க முன்வாருங்கள்.

 

இத்தேர்தலின் பிற்பாடு அமையப்போகும் ஐக்கிய தேசியக் கட்சி அரசில் எமது கட்சிக்கு பெரியதோர் கௌரவமும், அதிகாரமும் கிடைக்கவிருக்கின்றது. இதனூடாக எமது கல்முனை மாநகர பிரதேசங்கள்அபிவிருத்தி செய்யப்படவுள்ளதுடன் மாமனிதர் அஷ்ரஃப்பின் கல்முனை புதிய நரக அபிவிருத்தித் திட்டமும்அமுல்படுத்தப்படவுள்ளது. எனவே மக்கள் தங்களது வாக்குகளை இத்தேர்தலில் சிதறடிக்காமல் முஸ்லிம்காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மூவருக்கும் வாக்களிக்கவேண்டும்.

 

எமது மக்களின் நிலைமை வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைத்த கதையாகி விடக்கூடாது.இதனை உணர்ந்து மக்கள் உதிரிக் கட்சிகளின் மாயைக்குள் சிக்கிவிடாமல் எமது மக்களின் தேசிய மற்றம்சர்வதேச குரலான முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் கரங்களை இத்தேர்தலில்பலப்படுத்த நாம் அனைவரும் ஓரணியில் ஒன்றிணைய வேண்டும்.

 

மஹிந்தவின் கொடுங்கோல் ஆட்சியினை நாமே அழித்தோம். எமது கட்சியின் வேட்பாளர்களுக்கு நாம்வாக்களிக்காமல் மாற்றுக் கட்சிக்கு வாக்களிப்பதன் மூலம் மீண்டும் மஹிந்தவின் கொடுங்கோல் ஆட்சியைகொண்டு வருவதற்கு நாமே காரணமாக அமைந்து விடக்கூடும்.

 

எமது மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரஃப் எம்மக்களை முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக அரசியல்மயப்படுத்தியுள்ளார். இன்று தனிநபர்களின் விருப்பு வெறுப்புகளுக்காக நாம் எமது தேசிய இயக்கமானமுஸ்லிம் காங்கிரஸினை அழிப்பதற்கு இடம்கொடுக்க முடியாது. எனவே எமது மக்களை இலகுவில் யாரும்ஏமாற்றிவிட முடியாது. எமது முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை எம்மக்கள் பாதுகாப்பார்கள் என்றநம்பிக்கை எமக்குண்டு.

 

அடுத்துவரும் பாராளுமன்றத்தில் எமது கட்சி வலுவான பேரம் பேசும் சக்தியினை பெறவுள்ளது. இதன்மூலம் எமது பிரதேசம் முழுவதும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. அத்துடன் இளைஞர்களுக்கான தொழில்வாய்ப்புக்கள், மீனவர்களுக்கான நலத்திட்டங்கள், விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள், சுயதொழில்முயற்சியாளர்களுக்கான உதவிகள் என பல அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன என்றும் குறிப்பிட்டார்.(எஸ்.அஷ்ரப்கான்-0772348508)

 

முக்கிய குறிப்பு: லங்கா ப்ரொண்ட் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு லங்கா ப்ரொண்ட் நியூஸ் பொறுப்பல்ல.
-நிருவாகம்-