- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ஊழல் நிறைந்த கிழக்கு மாகாண சபையை கலைத்து விட வேண்டும், ஐ.தே.காவின் தீர்மானத்துக்கு சு.க. கடும் எதிர்ப்பு

 கிழக்கு மாகாண சபை உற்பட சில மாகாண சபைகளின் கால எல்லையை நீடித்து ஒரே தினத்தில் 9 மாகாண சபைகளுக்குமான தேர்தலை நடத்துவதற்கு ஐ.தே.க. எடுத்துள்ள தீர்மானத்துக்கு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரிப்பதில்லை...

பிரதமரும் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் : நாமல் ராஜபக்சே

 ரவியை இராஜினாமா செய்துவித்து இவ்வாட்சியிலுள்ள மஹா திருடர்கள் தப்பித்துக்கொள்ளப் போகிறார்கள் என ஹம்பாந்தோட்டைபாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார். இன்று காலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தற்போது மத்திய வங்கியில் இடம்பெற்ற இந்த மிகப் பெரும் ஊழல் மோசடிகளின் பின்னணியில் ரவி கருணாநாயக்கமாத்திரமில்லை.இன்னும் பலர் ஒளிந்துள்ளனர். 2015ம் ஆண்டு இடம்பெற்ற மத்திய வங்கியின் முறிகளை ஏலம் விடும்கலந்துரையாடலில் பிரதமரின் நெருங்கிய சகாவான மலிக் சமரவிக்கிரம மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் கபீர் ஹாசிம்ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் ஐக்கிய தேசிய கட்சியுடன் தொடர்புடைய விடயங்களில் கலந்து கொண்டால் பறவாயில்லை.இவர்கள் நாட்டின் நிதிதொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளனர். அதில் கலந்து கொள்ள வேண்டியவர்கள் நாட்டின் நிதி விடயங்களில்சம்பந்தப்பட்டவர்களே. குறித்த ஐக்கிய தேசிய கட்சி பிரமுகர்கள் அல்ல. இக் குறித்த விடயமே இதன் பின்னால் மிக முக்கியமான நெருங்கிய புள்ளிகள் மறைந்திருப்பதை அறிந்துகொள்ளச் செய்கிறது. இன்னும் வெளிப்படையாக சொல்லுவதானால் இதன் பின்னால் இலங்கை நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இருக்கவேண்டும்.இந்த விடயம் மிகவும் நீதியான முறையில் கையாளப்பட வேண்டுமாக இருந்தால் ரவி கருணாநாயக்கவுடன் சேர்த்து பிரதமரும் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும். ரவி கருணாநாயக்க மாத்திரம்  தனது பதவியை இராஜினாமா செய்வதால் எதுவும் நிகழ்ந்து விடப்போவதில்லை.அதனை விடஅதிகாரமிக்க இத் திருட்டின் பங்காளிகள் இவ்வாட்சியுடன் உள்ளனர்.இந்த முறி மோசடியில் ஒரு லட்சம் கோடி இழப்புஎற்பட்டுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.எனவே,ரவி கருணாநாயக்கவின் குறித்த அமைச்சு இராஜினாமா என்பதுமஹா திருடர்கள் தப்பிக்க அனைவரையும் திசை திருப்ப மேற்கொள்ளப்பட்ட ஒன்றாகும்.அது மாத்திரமன்றி இவர் தொடர்பானவிசாரணைகள் நீதியாக மேற்கொள்ளப்படுவதோடு குறித்த ஊழல் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட வேண்டும்.

எத்தனை அம்புகள் எறிந்தாலும் அத்தனையையும் தாங்கிக் கொண்டு பணிகளை தொடருவேன்: அமைச்சர் ரிஷாட்

  ஊடகப்பிரிவு எத்தனை அம்புகள் என்னை நோக்கி எறிந்தாலும், அத்தனையையும் தாங்கிக் கொண்டு சமூகப் பணிகளை முன்னெடுத்துச்செல்வேன் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.  மன்னார் மறிச்சிக்கட்டி ஜாசிம் சிட்டி...

ஜனாதிபதி வசம் உள்ள வெளிவிவகார அமைச்சுப் பதவிக்கு திலக் மாரப்பன நியமிக்கப்படலாம் ?

வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன நியமிக்கப்படலாம் என அரசாங்க தகவல்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. வெளிவிவகார அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்க நேற்றைய தினம் பதவியை இராஜினாமா செய்ததையடுத்து, புதிய வெளிவிவகார அமைச்சர் ஒருவர்...

ரவி தமது அமைச்சு பதவியை இராஜினாமா செய்ய எடுத்த தைரியமான முடிவை பாராட்டுகின்றேன்

 வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த ரவி கருணாநாயக்க நேற்று நடாளுமன்றத்தில் அறிவிப்பொன்றை விடுத்து அந்தப் பதவியிலிருந்து விலகினார். இதையடுத்து, கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர், ரவி கருணாநாயக்க தமது அமைச்சு பதவியை இராஜினாமா செய்ய...

திராவிடம் என்பது மக்கள் சக்தி. திராவிடத்தை யாராலேயும் அழிக்க முடியாது – கமல்ஹாசன்

திராவிடம் என்பது வாக்குகளின் எண்ணிக்கை இல்லை. திராவிடம் என்பது மக்கள் சக்தி. திராவிடத்தை யாராலேயும் அழிக்க முடியாது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். முரசொலி பத்திரிகையின் 75 வது ஆண்டு பவளவிழா, சென்னை கலைவாணர்...

இந்த நல்லாட்சி தொடர்ந்தால் எமது நாட்டில் எதிர்கால சந்ததியினருக்கு எதுவும் எஞ்சாது – ரொமேஷ் பதிரன

லாபத்தில் இயங்கும் அரச நிறுவனங்கள் பலவற்றை தனியார் மயப்படுத்த அல்லது நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனைசெய்துவிட  நல்லாட்சி அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ரொமேஷ் பதிரன சுட்டிக்காட்டியுள்ளார். நேற்று இரவு ஹிரு தனியார் தொலைக்கட்சியில் இடம்பெற்ற பலய அரசியல் நிகழ்சியில் கருத்து கூறும் போது அவர் இந்த விடயத்தைசுட்டிக்காட்டினார். கடந்த வாரம் வெளியான தேசிய பத்திரிகைகளை மேற்கோள் காட்டி தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், தற்போது ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீன நிறுவனதிற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுவிட்டது.அடுத்து மத்தளை விமான நிலையம், அதனை தொடர்ந்து ஹில்டன் ஹோட்டல் பங்குகளை விற்கவும், நில அளவையாளர் திணைக்களத்தின் பணிகளை முற்றாக அமெரிக்ககம்பனிக்கு வழங்கவும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவை ஒருபுறம் இருக்க லாபத்தில் இயங்கும் லங்கா ஹொஸ்பிடல் திட்டமிடப்பட்டு நட்டத்தை நோக்கி இயக்கபடுகிறது.அதையும்தனியாருக்கு வழக்கும் திட்டமே இந்த அரசுக்கு உள்ளது. ஹம்பாந்தோட்டை சீனாவுக்கு, திருகோணமலை இந்தியாவுக்கு , இந்த நல்லாட்சி தொடர்ந்தால் எமது நாட்டில் எதிர்காலசந்ததியினருக்கு எதுவும் எஞ்சாது என அவர் சுட்டிக்காட்டினார்.  

Latest news

- Advertisement -spot_img