- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

உலகின் மிகப் பெரிய விமானம் சோதனை ஓட்டம் வெற்றி..

உலகின் மிகப்பெரிய ஏர்லேண்டார் 10 என்ற விமானம் உருவாக்கப்பட்டது. இது விமானம், ஹெலிகாப்டர் மற்றும் விண்கலம் ஆகியற்றின் தொழில் நுட்பத்தை கலந்து தயாரிக்கப்பட்டது. இது பயணிகள் பயன்பாட்டுக்கு பயன்படுத்துவதற்காக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இங்கிலாந்தில்...

அரசாங்கம் தேர்தலை எதிர்கொள்ளும் ஸ்திரமான நிலையில் இல்லை: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

செம்டம்பரில் காலாவதியாகும் மாகாண சபை தேர்தலை பிற்போட அரசுக்கு அவசர கால சட்டம் கொண்டுவருவதை தவிர வேறு வழியில்லை .. நாட்டில் சகல மக்களினதும் அதிருப்தியை பெற்றுள்ள இந்த அரசாங்கம் செப்டம்பரில் காலாவதியாகும் மாகாணசபைகளுக்கான தேர்தலை பிற்போடுவதற்கு அவசர கால சட்டத்தை மீண்டும் கொண்டுவருவதை தவிர வேறு வழிஇல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ குறிப்பிட்டார். நேற்று அவரது இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையில் அவர்மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து அவர் கருத்து வெளியிடுகையில் ,   நாளுக்கு நாள் புகழ் இழந்து வரும் இந்த அரசாங்கம் உள்ளூராட்சி மன்ற தேர்தலை சாக்கு போக்கு சொல்லிபிற்போட்டு வருகிறது.ஆனால் செப்டம்பரில் காலாவதியாகும் மூன்று மாகாண சபைகளையும் அரசாங்கம் கலைத்துதேர்தலை அறிவிக்க வேண்டும்.   ஆனால் அரசாங்கம் தேர்தலை எதிர்கொள்ளும் ஸ்திரமான நிலையில் இல்லை. நாம் மாகாண சபை அதிகாரத்தை  கைப்பற்றுவோம் என அரச புலனாய்வு பிரிவு அரசாங்கத்துக்கு தெரிவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.   மேலும்,தினம் தினம் அரசுக்கு எதிரான ஆர்பாட்டங்களும் போராட்டங்களும்  இடம்பெறுகின்றன இவற்றைஅடக்கவும், தேர்தலை பிற்போட வேண்டும் என்றாலும் நாட்டில் அவசரகால சட்டம் வரவேண்டும்.நாட்டில் தற்போதுஏற்பட்டுள்ள நிலமைகளை பார்க்கும் போது அதற்கான முயற்சிகள் நடைபெறுகிறகிறதோ என்ற சந்தேகம் எழுகின்றமைதவிர்க்க முடியாமல் உள்ளது.   இந்த நாட்டில் யுத்தத்தை வெற்றிகொள்ள முஸ்லிம்கள் பாரிய பங்களிப்பு வழங்கியுள்ளனர். இன்று நடப்பவைகள்  சிங்கள முஸ்லிம் மக்களிடையே உள்ள நல்லுறவுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளன.அன்றுஞானசாரவை கைது செய்தால் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதாக கூறிய சம்பிக்க போனறவர்கள் இந்த அரசில்இருக்கும் வரை ஞானசார தேரருக்கு எதிராக நீதியை நிலைநாட்டுவது கடினமான ஒன்று என்றே தோன்றுகிறது எனஅவர் குறிப்பிட்டுள்ளார்.  

சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய பொலிஸார் வன்முறையாளர்களுக்கு துணை போகின்றனர்:பாராளுமன்றத்தில் ரிஷாட்

  ஊடகப் பிரிவு பொலிஸாரும் அந்தந்த பொலிஸ் நிலையங்களிலுள்ள பொறுப்பதிகாரிகளும் நேர்மையுடனும், பாரபட்சமுமின்றியும் செயற்பட்டு சட்டத்தைக் கையிலெடுத்திருந்தால் ஒரு சில மத குருமார்களினதும், திருடர்களினதும் முஸ்லிம்களுக்கெதிரான மோசமான செயற்பாடுகளை நிறுத்தியிருக்க முடியுமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன்...

இன்னும் அமைச்சரவை மாற்றம் முடிவு பெறவில்லை :அமைச்சர் கபீர் ஹாஷிம்

அமைச்சரவை மாற்றம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. எனினும் தற்போது இன்னும் அமைச்சரவை மாற்றம் முடிவு பெறவில்லை. இன்னும் பல மாற்றங்கள் செய்யப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான கபீர்...

மான்செஸ்டர் தற்கொலை குண்டு தாக்குதல்தாரியின் பெயரினை வெளியிட்ட பிரித்தானிய உளவுப்பிரிவினர்

மான்செஸ்டர் நகரில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவரின் பெயரை பிரித்தானிய உளவுப்பிரிவினர்  வெளியிட்டுள்ளனர். பிரிட்டனின் மான்செஸ்டர் நகரத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது நிகழ்ந்த தற்கொலைபடை குண்டுவெடிப்பில் சிக்கி 19 பேர்...

Latest news

- Advertisement -spot_img