July 23rd , 2018 10:52 PM
Hot News
அஸீஸ் முதல் ஹனிபா வரை நிர்வாக சேவையும் முஸ்லிம்களின் வகிபங்கும் (ஏ.எல்.நிப்ராஸ்)|அக்கரைப்பற்று சர்ச்சையை தொடர்ந்து இணைத் தலைவர் பதவியிலிருந்து பைசல் காசிம் நீக்கம்|திமுத் கருணாரட்ன வேறு ஒரு ஆடுகளத்தில் ஆடுபவர் போல விளையாடினார் : டுபிளசிஸ்|ஜனாதிபதி பதவியை ஒரு பக்கம் வைத்துவிட்டு அலுகோசு பதவிக்கு விண்ணப்பியுங்கள்|விஜயகலா விவகாரம்:  வாயால் வந்த வினை (கட்டுரையாளர் ஏ.எல்.நிப்ராஸ் )|கூட்டுறவுத் துறையை வினைத்திறன் உள்ளதாக்க புதிய தேசிய கூட்டுறவு கொள்கை உருவாக்கம்”  – ரிஷாட்|புதிய மாகாண சபைத் தேர்தல் முறைமையை எம்மால் ஒருபோதும் ஆதரிக்க முடியாது : பைஸல் காசிம்|ஹரீஸ் தலைமையில் ‘ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்முனைத் தொகுதி ஆட்சி மன்றக் குழு’ உதயம்|96ஆவது சர்வதேச கூட்டுறவு தினம்|கல்விமான் கலாநிதி வீசி இஸ்மாயிலுக்கு சேறடிப்பதன் உள் நோக்கமென்ன? (கலாபூஷணம் மீரா.எஸ்.இஸ்ஸடீன்)

Daily Archives : 30th January 2017
  • மறிச்சுக்கட்டி இலவங்குளப்பாதை வழக்கில் அமைச்சர் ரிஷாட்டின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி உச்ச நீதிமன்றில் ஆஜர்

    மறிச்சுக்கட்டி இலவங்குளப்பாதை வழக்கில் அமைச்சர் ரிஷாட்டின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி உச்ச நீதிமன்றில் ஆஜர்

    ஊடகப்பிரிவு மன்னாரிலிருந்து மறிச்சிக்கட்டி ஊடாக புத்தளத்திற்குச்செல்லும்  மறிச்சுக்கட்டி – இலவங்குளப்பாதையைமூடவேண்டுமென்று ஆறு வருடங்களுக்கு முன்னர் அரசசார்பற்ற சூழலியல் நிறுவனமொன்று உச்ச நீதிமன்றில்தாக்கல் செய்த வழக்கு இன்று 30 விசாரணைக்குஎடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கின் பிரதிவாதிகளில் ஒருவரான அமைச்சர் ரிஷாட்பதியுதீனின் சார்பில் முதன் முறையாக சட்டத்தரணி ருஷ்திஹபீபின் நெறிப்படுத்தலில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, ஆஜராகியிருந்தார்.  இதுவரை காலமும் இந்த வழக்கில் அமைச்சர் ரிஷாட்பதியுதீனுக்கு சட்டமா அதிபர் திணைக்கள சட்டத்தரணிகளேஆஜராகி வந்த நிலையில் அதற்கு மேலதிகமாக ஜனாதிபதிசட்டத்தரணி அலிசப்ரி ஆஜராகி தனது வாதங்களைமுன்வைத்தார்.  இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் ஜூன் மாதம் 19 ஆம் திகதிக்குவிசாரணைக்காக எடுக்கப்படுமென நீதிபதி அறிவித்தார். அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வழக்கு விசாரணையின் பின்னர்ஊடகவியலாளருக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது, நூற்றுக்கணக்கான வருடங்களாக மக்களினால் பாவிக்கப்பட்டுவருகின்ற இந்தப் பாதைய மூடவேண்டுமென்று அரச சார்பற்றநிறுவனம் ஒன்று வழக்கு தாக்கல் செய்துள்ளது. இந்தப் பாதைதிறக்கப்படுவதால் குறிப்பிட்ட பிரதேசத்திலுள்ளவிலங்குகளுக்கு ஆபத்து ஏற்படுமென்றும் இது நெடுஞ்சாலைப்பாதையெனவும் கூறியே சூழலியல் நிறுவனமொன்று இந்தவழக்கை தாக்கல் செய்துள்ளது. மக்கள் பயன்படுத்தும்இந்தப்பாதையை மூட வேண்டுமெனவும் அதனைசெப்பனிடக்கூடாதெனவும் கூறுவது நியாயமானதொன்றல்ல.உண்மையில் இது நெடுஞாலைப்பதையுமில்லை. பொறல்பாதையாக இருக்கும் இதில் சிங்கள, முஸ்லிம் மக்கள்நீண்டகாலமாக பயன் படுத்தி வந்தனர். இராணுவமும்இதனைப்பயன்படுத்துகின்றது.  மன்னார் புத்தளம் வழியாக இந்தப்பாதையூடாக கொழும்புக்குமிகக் குறுகிய நேரத்தில் சென்றடையலாம். 32 கிலோ மீற்றர்நீளமான இந்தப்பாதையை மூடுவதன் மூலம் மக்களுக்குபல்வேறு கஷ்டங்கள் இருக்கின்றன. அதுவும் இடம்பெயர்ந்தமக்கள் தமது சொந்தக் குடியிருப்புக்களில் மீளக்குடியேறமுயற்சிக்கும் போது இந்தப் பாதையை மூடுவதற்கு முயற்சிகள்முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.  இதனை செப்பனிட்டு பயன்படுத்துவதன் மூலம் விலங்குகளுக்கு எந்தப் பாதிப்போஆபத்தோ ஏற்படப்போவதில்லை. எனவேதான் இதனைப்பயன்படுத்துவதற்கு முட்டுக்கட்டையாக இருக்கவேண்டாமென வலியுறுத்தி வருகின்றோம். அதற்காகவே எனதுசார்பில் மக்களின் நன்மை கருதி ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி இந்த வழக்கில் ஆஜராகியதாக அமைச்சர் ரிஷாட்தெரிவித்தார்.