December 14th , 2018 10:44 AM
Hot News
ரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்கமாட்டேன் – ஜனாதிபதி|நாட்டில் எந்தவொரு பிரஜையும் அரசியலமைப்பை மீறமுடியாது – றிசாட்|முஸ்லீம் தலைவர்களை கறிவேப்பிலையாக பயன்படுத்தும் ரணில்|த.தே.கூட்டமைப்பின் ஆதரவுடன் ரணிலுக்கான நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றம்|ரணிலுக்கு ஆதரவளித்தால் சம்பந்தன் ஐயா தன்னுடைய பதவியை இழக்க நேரிடும்|கல்முனை மாநகர சபையின் பட்ஜெட்டிற்கு பொதுமக்களும் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கலாம்|ACMC ஆளுகைக்குள் இருக்கும் முசலி பி.சபை வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது|புலவர் திருநாவுக்கரசின் மறைவு மன்னார் மக்களுக்கு பாரிய இழப்பாகும் – றிசாட்|மைத்திரி , மஹிந்த , ரணில் மற்றும் கட்சித்தலைவர்களுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ள அதாஉல்லா|UPFA அனைத்து MP க்களும் நாளை உயர்நீதிமன்றம் செல்ல தீர்மானம்

Monthly Archives: January 2017

  • தமது வாழ்விடத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காகப் போரிடுவதும் புனிதப் போராட்டமே!

    தமது வாழ்விடத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காகப் போரிடுவதும் புனிதப் போராட்டமே!

    கிழக்கு முஸ்லீம்களின் பூர்வீக காணிகளை, புனித பிரதேசமென்றும்,  வடக்கு முஸ்லீம்களின் பூர்வீக காணிகளை, வனப்பிராந்தியம்என்றும் பிரகடனப் படுத்தி, முஸ்லிம்களின் பாரம்பரிய காணிகள் பறிக்கப்பட்டுக் கொண்டு செல்கின்றது.  ஏற்கனவே கிழக்கில் அறுபதாயிரம் ஏக்கருக்கும் அதிகமான காணிகளை இழந்த நிலையில், இம் முன்னெடுப்பு ஒரு திட்டமிடலின்மூலம், வடக்கு கிழக்கில் வாழும் சிறுபான்மையினரை அச்சுறுத்தும் வகையில் மேற்கொள்ளப்படுகிறது. இது பௌத்த தேசம், நாங்கள் விரும்பியதை செய்வோம் என்ற எண்ணத்தில் நல்லாட்சி ஜனாதிபதியும் நடந்து கொள்ளஆரம்பித்திருப்பது, அவரைப் பதவியில் அமர்த்தப் பாடுபட்ட முஸ்லிம்களை, பானையில் இருந்து அடுப்புக்குள் விழுந்த நிலைக்குத்தள்ளியிருக்கின்றது. இந்நிலமைகளில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் மௌனம் காத்துக் கொண்டிருக்கின்றனவா? மக்கள் ஆணையைப் பெற்று அதிகாரங்களில் இருக்கும்  அனைத்து முஸ்லிம்  அரசியல் தலைமைகளும் குறைந்தபட்சம் அரசைஎச்சரிக்கும் முகமாக இந்நடவடிக்கைகளுக்குத் தமது எதிர்ப்பை பகிரங்கமாகவும் உறுதியாகவும் வெளிப்படுத்த  வேண்டும். இறக்காமம் பிரதேசத்தில் சிலை வைத்த விவகாரத்தை முறையோடு கையாளாத காரணங்கள் போன்றவற்றாலேயே, இத்தொடர்அநியாயங்கள் இடம் பெறுவதை கட்டுப்படுத்த முடியாதுள்ளது என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.  புத்தர் சிலை வைப்பதால் முஸ்லிம்கள் மதம் மாறிவிடமாட்டார்கள் என்று கூறியவர்கள், பள்ளிவாசலையும் அதைச் சார்ந்தபிரதேசத்தையும்  பௌத்த புனித பிரதேசங்களாக பிரகடப்படுத்தினால், முஸ்லிம்கள் வீடுகளில் தொழுது கொள்வார்கள் என்றுசமாதானம் சொல்லிவிட்டு, தமது பைகளை நிரப்புவதிலும் பதவிகளை தக்க வைத்துக்கொள்வதிலும் கவனமாய் இருப்பார்கள். ஆனால் இந்நிலை தொடருமாயின் நாடு முன்னிலும் பார்க்கப் பாரிய அழிவொன்றை மீண்டும் சந்திப்பது தவிர்க்க முடியாததாகிவிடும். தமது வாழ்விடத்தைப்பாதுகாத்துக் கொள்வதற்காகப் போரிடுவதும் புனிதப் போராட்டமே! தனிநபர் அதிகாரத்துக்கும், ஊர்களின் அதிகாரங்களுக்கும் நீங்கள் சண்டை பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள். முஸ்லிம் தேசியத்தின் இருப்பை உறுதிசெய்வதற்காக எமது பேராயுதமான பேரியக்கத்தை எம்மிடம் ஒப்படையுங்கள். உங்களால் இயலாது என்பதனாலேயே எங்களிடம் எமது கட்சியைத் தந்துவிட்டு ஒதுங்கி நின்று வேடிக்கை பாருங்கள் என்று பலமுறைகூறியுள்ளோம். மீண்டும் அதையே கூறுகிறோம். ஏனைய தலைவர்களும் இவ்விடயத்தில் முஸ்லிம்களை கைவிடுவது போல் நடந்து கொள்ள முற்படுவதுதொடருமானால், அரசுக்கும் முஸ்லிம் தலைவர்களுக்கும் எச்சரிக்கை விடுமாற்போல் கிழக்கு வடக்கு மக்கள் ஒருங்கிணைந்த ஒருமாபெரும் ஆர்ப்பாட்டத்தைச் செய்து தமது எதிர்ப்பைக் காட்ட வேண்டி வரும் என்பதையும் வலியுறுத்த விரும்புகிறோம்.   கிழக்கின் எழுச்சி