- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

போராளிகளே புறப்படுங்கள் ! கவிஞர் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

  போராளிகளே புறப்படுங்கள்! ----------------------------------- போராளிகளே புறப்படுங்கள்... புதிதாக சிலை ஒன்றை வைப்பதற்கு போராளிகளே எங்களுடன் புறப்படுங்கள்....! -------------- நமது சமூகம் தோற்று விட்டது என்று நீங்கள் குழம்பிவிடக் கூடாது! அது தோற்கவே வேண்டும் என்பதற்காக போராளிகளே எங்களுடன் புறப்படுங்கள்! -------------- கரையோர மாவட்டம் கல்முனைக்கு வேண்டாம் - மாய கல்லிமலை சிலை ஒன்றே போதும் நமக்கு போராளிகளே புறப்படுங்கள்.... -------------- உங்கள் தலைவனுக்கு ஒன்றுமே தெரியாது என்பதனை...

ஓட்டமாவடி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் பிரதேச இளைஞர் முகாம்!

  பி.எம்.எம்.எ.காதர் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சின் கீழ் இயங்கிவரும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் 2016 'ஹோப்' வேலைத்திட்டம் ஊடாக நாடு பூராகவும் ஒரு பிரதேச செயலகப் பிரிவுக்கு ஒரு...

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் :மங்கள சமரவீர

வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கை தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய முறையை ஏற்படுத்துவதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் தலதா அத்துகோரல தாக்கல் செய்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி கிடைத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு மங்கள சமரவீர தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் தங்கி...

அரசாங்கம் பிழையான பாதையில் நகர்வதாக பிரதமரின் சகோதரர் சான் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்!

அரசாங்கம் பிழையான பாதையில் நகர்வதாக பிரதமரின் சகோதரரும், தனியார் தொலைக்காட்சி நிறுவனமொன்றின் உரிமையாளருமான சான் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து தாம், தமது சகோதரரிடம் ஏற்கனவே கூறியுள்ளதாகவும்  அரசாங்கத்தின் நடவடிக்கைகள் எதிர்காலத்தில்...

இமெயில் விவகாரம்: ஹிலாரி மீது கடந்த ஜூலை மாதம் நாங்கள் எடுத்த தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை:எப்.பி.ஐ.

அமெரிக்காவில் வரும் 8-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கு இன்னும் 36 மணிநேரமே...

புத்தர் சிலை வைக்­கப்­பட்ட பகு­தியில் தியான மண்­டபம் அமைக்க காணி வேண்­டு­மென தேரர்கள் கோரிக்கை !

இறக்­காமம் – மாணிக்­க­மடு தமிழ்க்­கி­ரா­மத்தில் பௌத்த பிக்­கு­களால் வைக்­கப்­பட்ட புத்தர் சிலையை அகற்­று­மாறு இப்­பி­ர­தேச தமிழ் – முஸ்லிம் மக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் குறித்த பகு­தியில் தியான மண்­டபம் அமைக்க...

அமைச்சர் றிசாத்தின் வேண்டுகோளையடுத்து இஷாக், ஷாபி நிக்கவெரட்டிய பள்ளிவாசலுக்குச் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிவு!

       குருநாகல், நிக்கவெரட்டிய டவுன் ஜும்ஆ பள்ளிவாசலில் இன்று அதிகாலை இடம்பெற்ற நாசகார சம்பவங்களை நேரில் கண்டறிய கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீனின் வேண்டுகோளின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக்...

வடபுல முஸ்லிம்களைப் பற்றி கவலைப்படாத வடமாகாண சபை எம்மை அரவணைத்துச் செல்கின்றதென்று எவ்வாறு கூற முடியும்?

சுஐப் எம்.காசிம்    புலிகளினால் வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்களை மீளக்குடியமர்த்தும் தார்மீகப் பொறுப்பிலிருந்து வடமாகாண சபை தவறி இருக்கின்றது. புலிகள் இயக்கத்தினால் உருவாக்கப்பட்ட தமிழ்க் கூட்டமைப்பின் கீழான இந்த வடமாகாண சபை, அந்த இயக்கம்...

சிலை வைப்பு விவகாரத்தில் ஹகீம் இன்னுமொரு முஸ்லிம் கிழக்கானை துரோகியாகப்பார்க்கும் நிலைக்கு ஆளாக்கியிருக்கிறார்

சிலை வைப்பு விவகாரத்தில் பா.உ. மன்சூர் பலிக்கடாவாக்கப் படுகின்றாரா? ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கான வானளாவிய அதிகாரங்களைக்கொண்டு அவரால் என்ன செய்திருக்க முடியுமோ அதைச் செய்திருக்கிறார். அவ்வளவுதான் அவரால் செய்ய முடியும். கிழக்குக்கு கிடைத்திருக்க வேண்டிய கபினட் அமைச்சுப் பதவி மன்சூரிடம்இருந்திருந்தால் அந்த அதிகாரத்தின் பலம், வேறு மாதிரி காய் நகர்த்தஅவரைத் தூண்டியிருக்கும் என்பது வெளிப்படை.  கிழக்கின் கபினட் அமைச்சுப் பதவியை நயவஞ்சகமாக சூறையாடிவைத்திருக்கும் ஹகீம் அவர்கள் சிலை வைப்பு பற்றி வாய்திறந்தருளியிருக்கிறாரா? அல்லது ஒருதலைப்பட்சமாக தாக்கப்படும்மன்சூருக்கு ஆதரவாகவாவது ஏதும் கூறியிருக்கிறாரா? மன்சூரின் தலைஉருளுவதால், தன் தலை தப்பியதை எண்ணி ஆனந்தப்படுகிறாரா? உண்மைஎன்னவெனில் மன்சூரை பலிக்கடாவாக்கி தன் தலை உருளுவதிலிருந்தும்தப்பித்துக் கொள்ளப்பார்க்கிறார். முஸ்லிம் காங்கிரஸ்போராளிகளிடமிருந்தும் மன்சூர் குற்றம் சாட்டப்படுவதிலிருந்து இதைப்புரிந்து கொள்ள முடிகிறது. கிழக்கு கிழக்கு என்கிறீர்களே உங்கள் பிரச்சினையை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்பது போல் ஹகீம் வாய் மூடி மௌனமாயிருக்கிறார். அப்படி என்றால் கிழக்குக்கு உரித்தான உமது நண்பருக்குக் கொடுத்துமுடக்கி வைத்திருக்கும் தேசியப் பட்டியலையும், கபினட் அந்தஸ்துஅமைச்சர் பதவியையும், மு.கா தலைமைப் பதவியையும் கிழக்குக்குகொடுத்து விடுங்கள், எங்கள் பிரச்சினையை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். சிலை வைப்பு பற்றி கிழக்கின் எழுச்சியிடம் கேட்கப்படுகிறது. ஆத்திரமடைந்திருக்கும் இளைஞர்களை உசுப்பேற்றி அந்த சிலையைஅப்புறப்படுத்த எவ்வளவு நேரம் எடுக்கும்? இந்த சிலையை அகற்றினால்கூட கிழக்கு முஸ்லிம்களுக்குப் பெரிதாக எந்தப் பாதிப்பும்வரப்போவதில்லை. ஏனென்றால் இங்கு நாங்கள்தான் பெரும்பான்மை. அந்தப் பெரும்பான்மையைச் சிதைப்பதற்கான முயற்சிதான் இம்மாதிரியானசம்பவங்கள்.  ஆனால் அவ்வாறு சிலை அகற்றப்பட்டால் அதன் பின் ஹம்பாந்தோட்டை, மாத்தறை, காலி போன்ற ஏனைய இடங்களில் அமைந்திருக்கும்பள்ளிவாசல்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பாதுகாப்பு கொடுக்க நம்மால்முடியுமா? கிழக்கில் பெரும்பான்மையாக இருக்கும் நாங்கள் எங்களுக்கு பாதகமானவிடயங்களைக் கையாள்வதிலும், கிழக்குக்கு வெளியில் இருக்கும்முஸ்லிம்களைப் பற்றியும் அவர்களது பாதுகாப்பு பற்றியும் யோசிக்கவேண்டியிருக்கின்றது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்கின்றவிடயங்கள் அல்ல இவை.  வெளிமாநில முஸ்லிம்களைப் பற்றிச் சிந்தித்து கிழக்கான் தனதுபெரும்பான்மையையும்  இழக்கப்போகின்றான். ஆனால் அவர்களுக்குஅதைப்பற்றி எந்த அக்கறையும் இல்லை. தமது வியாபாரங்களும் தமதுநலன்களும்தான் அவர்கள் தலையில் இருக்கின்றது. அவர்களுக்கு ஏதும்பிரச்சினை என்றால் நாம் கடையடைப்பு செய்ய வேண்டும், குரல் கொடுக்கவேண்டும். நமது பிரச்சினைகளுக்கு அவர்கள் வாயும் திறக்க மாட்டார்கள். முஸ்லிம் காங்கிரஸுக்கு வாக்கும் அளிக்க மாட்டார்கள். கிழக்குக்கு எழுச்சி என்றதும் கிழக்கான் பிரதேசவாதம் பேசுகின்றான் என்றவெளி மாநிலத்தவர் எத்தனை பேர் சிலை வைக்கப்பட்டதைகண்டித்தார்கள்?  எத்தனை பேருக்கு இப்படி ஒரு விடயம் நடந்தது தெரியும்?  எத்தனை பேருக்கு, இந்த சம்பவத்தின் மூலம் கிழக்கில் முஸ்லிகள்இழக்கப்போகும் நிலங்கள் பற்றித் தெரியும். எதுவுமே தெரியாது.  ஆனால் எமது பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்ககிழக்குக்குத் தலைமை வேண்டும் என்று கேட்டால், நாம் பிரதேச வாதிகள். இதில் துயரம் என்னவென்றால் சுயநலன்களுக்காக அவர்களுடன் ஒத்தூதும்கிழக்கின் அடிவருடிகளின் செயல்கள். இது வெளி மாநில முஸ்லிம்கள் மீதான காழ்ப்புணர்வு கொண்ட ஒரு பதிவுஅல்ல. அப்படியும் இதைக் கொச்சைப்படுத்த முயல்வார்கள். ஆனால் ஹகீம்அவர்கள் எமக்குரித்தான தலைமைப் பதவியையும் கபினட் அமைச்சுப்பதவியையும் சூறையாடி வைத்திருப்பதனால் நாங்கள் இழந்துகொண்டிருக்கும் எமது உரிமைகளினதும் நிலங்களினதும் மீட்புக்கானபோராட்டம். எதிர்வரும் காலங்களில் கிழக்கு இதைவிட மோசமானஇரண்டு பேரினக் கெடுபிடிகளுக்குள் சிக்கித் தவிப்பதிலிருந்துதப்பித்துக்கொள்ள வேண்டுமாயின்  முஸ்லிம் காங்கிரஸின் தலைமைகிழக்குக்கு  மீண்டும் கொடுக்கப்பட வேண்டும். இதற்காகவே நாம்போராடுகின்றோம். வெளிமாநில முஸ்லிம் சிந்தனையாளர்களையும் கல்விமான்களையும் புத்திஜீவிகளையும் பார்த்து ஒரே ஒரு கேள்வி மாத்திரமே நான் கேட்கவிளைகிறேன். பதினாறு வருடங்கள் பிரதேசவாதம் பாராது ஹகீம்அவர்களை தலைவராக்கி, அமைச்சராக்கி அழகு பார்த்தவர்கள் கிழக்குமக்கள். ஆனால் இந்தப் பதினாறு வருடங்களில், வடக்கு கிழக்கிற்குவெளியே எங்காவது ஒரு இடத்திலாவது முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப்போட்டியிட்டு வெற்றியீட்டும் நிலையை உருவாக்கியிருக்கின்றாரா?  அவரிடம் ஒப்படைத்த கட்சியை இரண்டாக மூன்றாக உடைத்ததைத் தவிரவேறு என்ன சாதனை செய்திருக்கிறார்? அவரின் தகுதியின்மைதான் நாம்அவரை பதவி விலகச் சொல்வதற்கான காரணம் என்பதை நீங்கள்விளங்கிக் கொள்ள வேண்டும். ஹராமான வேலைகளில் ஈடுபட்டு, அதிலிருந்து தப்பிக்க அவர்களிடம் தஞ்சமடைந்து, முஸ்லிம்களின் ஹலால்ஹராம் பிரச்சினையை காபிர்கள் கேவலமாகப் பார்ப்பதற்கானநிலைமையையும் அவரே உருவாக்கினார். இது மொத்த இலங்கைமுஸ்லிம்களுக்கும் அவரால் ஏற்பட்ட பாரிய இழப்பு. உங்கள் தலைவர்பச்சை ஹராமான விடயங்களைச் செய்து கொண்டிருக்கின்றார், அவரைநீங்கள் தலைவராக வைத்துக் கொண்டிருக்கின்றீர்கள். உங்களுக்குசாப்பாட்டு விடயத்தில் மட்டும் ஹலால் கேட்குதா என்று அவர்கள்கேட்பதற்கு, என்ன பதில் சொல்வது? ஒவ்வொரு ஊர்களிலும், பிரித்தாளும் தந்திரத்தால் கட்சிக்குள்ளேயேஇரண்டு மூன்று குழுக்களை ஏற்படுத்தி, அவர்கள் தமக்குள் மோதிக்கொள்ளும்  நிலையை உருவாக்கி, முஸ்லிம் ஒற்றுமைக்குச் சிதை வைத்து, அதில் குளிர் காயும் நயவஞ்சகத்தனத்திற்காக இறைவனுக்கு பதில் சொல்லவேண்டுமென்று பயப்படுவதுமில்லை. இந்தச் சிலை வைப்பு விவகாரத்தில் பா. உ மன்சூரை மாட்டிவிட்டு கிழக்குமுஸ்லிம் மக்கள் இன்னுமொரு முஸ்லிம் கிழக்கானை துரோகியாகப்பார்க்கும் நிலைக்கு ஆளாக்கியிருக்கிறார்.  ஆனால் உண்மை நிலையைப் புரிந்து கொண்டு, கிழக்கு மக்கள் வெளிமாநில முஸ்லிம்களைத் துரோகிகளாகப் பார்க்கும் நிலை வருவதற்கு முன், ஹகீம் அவர்களை பதவி விலகுமாறு நீங்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும். இதன் மூலம் மாத்திரம்தான் நீங்களும் நாங்களும் விரும்புகின்ற ஒரேமுஸ்லிம் உம்மா எனும் விடயம் நீடித்திருக்க முடியும். ஹகீம் எனும் தனிமனிதனின் பதவிப் பேராசையால் அது சிதைவடைவதை நாம்விரும்பவில்லை.

Latest news

- Advertisement -spot_img