- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

இலங்கையின் அமைதிச்சூழலை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்: அமீர் அலி

அஸாஹிம்  வெளிநாட்டு  முதலீட்டாளர்கள்  இலங்கையில்  முதலீடு  செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். தற்போது இலங்கையில் அமைதிச்சூழல் நிலவுகின்றுது பல்வேறு தொழிற்துறைகளுக்கான கேள்வியும் சாதகமான  காலச்சூழலும்  ஏற்பட்டுள்ளது. இந்தச் சாதகமான சந்தர்ப்பத்தை வெளிநாட்டு முதலீட்டாளர்கள்  நல்ல முறையில்...

நிந்தவுர் பிரதேச உணவக உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு!

   ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்  நிந்தவுர் பிரதேசத்திலுள்ள சாப்பாட்டுக் கடைகள், பேக்கரிகள் போன்றவற்றில் சுகாதார சீர்கேடுகள் நிலவுவதாக பொது மக்கள்கொடுத்த புகாரைத் தொடர்ந்து சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயமும், பிரதேச சபையும் துரித நடவடிக்கைகளில்குதித்துள்ளனர். நிந்தவுர் பிரதேச சபையும், நிந்தவுர் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயமும் இணைந்து நிந்தவுர் பிரதேச உணவகஉரிமையாளர்களுக்கு  'சுகாதாரம் பேணலும், ஆரோக்கிய உணவும்' எனும் தலைப்பிலான   விழிப்புணர்வுக் கருத்தரங்கொன்றைஇன்று நடாத்தியது.   இக்கருத்தரங்கில் நிந்தவுர் சுகாதார வைத்திய அதிகாரி திருமதி.தஸ்லீமா பசீர், நிந்தவுர் பிரதேச சபையின் உள்ளுராட்சி உதவிஆணையாளர் எம்.ஜௌபர், பிராந்திய உணவு மருந்துப் பரிசோதகர் எஸ்.தஸ்தகீர், வருமான பரிசோதகர் எம்.சலீம், மேற்பார்வைபொதுச் சுகாதாரப் பரிசோதகர் எம்.ஏ.எம்.சித்தீக், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களான எம்.ஏ.அப்துல் ஹமீட், எம்.ஐ.எம்.மன்சூர்,நிந்தவுர் பிரதசத்திலுள்ள தேநீர்க்  கடை, சாப்பாட்டுக்கடை உரிமையாளர்கள், பிரதான உணவு தயாரிப்பாளர்கள் எனப் பலரும்கலந்து கொண்டனர்.   பொது மக்களைப் பாதுகாக்கக் கூடிய வகையில் எவ்வாறு சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்க வேண்டும்? உணவு தயாரிப்பின்போது தயாரிப்பாளர் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள்?, சுகாதாரமான உணவுகள் தயாரிக்கும் போது எவற்றைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்?, உணவுகளில் நோய்க் கிருமிகள் தொற்றாது எவ்வாறு பாதுகாப்பது? இவற்றில் உரிமையாளர்களின் வகிபாகம்? இக்கட்டுப்பாடுகளை மீறுவோர் எவ்வாறு தண்டிக்கப்படுவர்? இவைகளிலிருந்து எவ்வாறு பாதுகாப்புப் பெறலாம் போன்ற பல்வேறுவிடயங்கள் விலாவாரியாக எடுத்துக் கூறப்பட்டன.  'இக்கருத்தரங்கின் பயன்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் நிந்தவுர்ப் பிரதேசத்தில் வாழும் சுமார் 50 ஆயிரம் மக்களின் சுகாதாரத்தைப்பாதுகாக்க முடியும்' என பிராந்திய உணவு மருந்துப் பரிசோதகர் எஸ்.தஸ்தகீர் தெரிவித்தார்.  

பாகிஸ்தானின் குவெட்டா தாக்குதலுக்கு பொறுப்பேற்றது ஐ.எஸ்.

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் கடந்த புதன்கிழமை அன்று சாலையோரத்தில் தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டு வெடித்ததில் நீதிபதிக்கு பாதுகாப்பாக சென்ற 4 போலீசார் உள்ளிட்ட 17 பேர் காயமடைந்தனர். நீதிபதி காயமின்றி தப்பினார்....

இலங்கை அணியை தனது முதலாவது டெஸ்ட் சதத்தால் வலுவான நிலைக்கு இட்டுச் செல்லும் சில்வாhttps://lankafrontnews.com/?p=31823

  இலங்கை அணியின் தனஞ்சய டி சில்வா தனது முதலாவது டெஸ்ட் சதத்தை பூர்த்திசெய்துள்ளார். இலங்கை மற்றும் ஆஸி அணிகளுக்கிடையிலான  3 ஆவது டெஸ்ட் போட்டி எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. ஆரம்பத்தில் 26 ஒட்டங்களுக்கு 5...

14 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிரான வெனிசுலா எதிர்க்கட்சி தலைவரின் மனு கோர்ட்டில் தள்ளுபடி

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மடுரோ தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க வன்முறையை தூண்டிவிட்டு சதி செய்து, போராட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் லியோபோல்டோ லோபெஸ் மீதான வழக்கில் அவருக்கு 13 ஆண்டு,...

ஆளும்- கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கலகம் காரணமாக உரியமுறையில் விவாதம்நடத்த முடியவில்லை

ஆளும் கட்சி மற்றும் கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றில் கலகம் செய்த காரணத்தினால் காணாமல் போனோர் அலுவலகம் குறித்து உரிய முறையில் பாராளுமன்றில் விவாதம் நடத்த முடியவில்லை என ஜே.வி.பி.யின் தலைவர்...

பரிசளிப்பு விழாவில் தான் கலந்துக் கொள்ள இயலாது – முரளி இலங்கை கிரிக்கட் சபைக்கு பதில்

இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் பரிசளிப்பு விழாவில் தான் கலந்துக் கொள்ள இயலாது என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இலங்கை கிரிக்கெட் சபைக்கு அறிவித்துள்ளார். இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய...

அரசியல்வாதிகளே, பேசிப் பேசியே காலம் வீணே போகின்றது : ஏ.எல்.நிப்ராஸ்

உடைத்து ஒட்டுதல் சிறுபிள்ளைகளின் விருப்பத்திற்குரிய ஒரு பொருளை விளையாடும் போது சில வேளைகளில் அவர்களே கைதவறி உடைத்து விடுவார்கள். அது உடைந்ததும் அங்குமிங்கும் ஓடியோடி அழுவார்கள். ஏதோ வீட்டில் இருக்கின்ற மற்றவர்களே உடைத்து...

Latest news

- Advertisement -spot_img