- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

வடக்கு செல்லும் போது தன்னை சிரித்த முகத்துடன் வரவேற்கும் வடக்கு மக்கள் : ஜனாதிபதி !

நாட்டின் முன்னைய அரசாங்கம் வடக்கு மக்களுக்கு கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான பொருட்களை விநியோகித்தாலும் அன்று அந்த மக்களின் முகத்தில் சிரிப்பை காணமுடியவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வடக்கு மக்களுக்கு தான் எந்த...

பிரித்தானியாவில் £35,000 குறைவாக வருவாய் ஈட்டுபவர்களை வெளியேற்ற அரசு முடிவு !

பிரித்தானியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணி புரிந்து வரும் வெளிநாட்டவர்களில் 35,000 பவுண்டுகளுக்கும் குறைவாக வருவாய் ஈட்டுபவர்களை வெளியேற்ற அரசு முடிவு செய்துள்ளது. இதனால் பாடசாலை ஆசிரியர்கள், தொழிநுட்ப வல்லுனர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கடுமையாக...

வாக்குறுதி ஒரு அமானிதமாகும், குறித்த காலத்தில் குறித்த நேரத்தில் அது நிறைவுக்கு வர வேண்டும் !

சாய்ந்தமருதுக்கான தனி உள்ளூராட்சி மன்றக் கோரிக்கை ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு சென்று நிறைவேற்றுகின்ற விடயமல்ல, அரசியல் தலைமைகளினால் கொடுக்கப்பட்ட வாக்குறுதி தொடர்ந்தும் மாநாட்டு தீர்மானங்களாக இருக்காமல் அது உடனடியாக நிறைவேற்றப்படுதல் வேண்டும்...

கல்முனை நீதி வலயத்திற்கான உத்தியோகப்பற்றற்ற நீதவான்களாகவும் இருவர் நீதி அமைச்சினால் நியமனம் !

பி.எம்.எம்.ஏ.காதர்   மருதமுனையைச் சேர்ந்த சட்டத்தரணி எப்.எம்.அமீருள் அன்சார் மௌலானா,சட்டத்தரணி ஏ.ஆர்.எம்.சுல்பி ஆகியோர் கல்முனை நீதி வலயத்திற்கான சமாதான நீதவான்களாகவும்,உத்தியோகப்பற்றற்ற நீதவான்களாகவும் நீதி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.   1972டின் நீதித்துறை சட்டத்தின் கீழ் நீதியமைச்சருக்கு உள்ள அதிகாரத்தின் அடிப்படையில்...

துணிச்சலான செயற்பாடுகள் மூலமாகவே சிறுவர் துஷ்பிரயோகங்களை முடிவிற்குகொண்டு வரமுடியும் !

  விழிப்புணர்வு மற்றும் சமூக அக்கறை கொண்ட துணிச்சலான செயற்பாடுகள் மூலமாகவே சிறுவர் துஷ் பிரயோகங்களை முடிவிற்குகொண்டு வரமுடியும்'  NFGG மகளிர் பிரிவு. 'மக்கள் மத்தியிலான விழிப்புணர்வு மற்றும் சமூக அக்கறையுடன் கூடிய துணிச்சலான செயற்பாடுகள் மூலமாகவே சிறுவர் துஷ்பிரயோகங்களை முடிவிற்கு கொண்டு வரமுடியும்' என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் மகளிர் பிரிவு தெரிவித்துள்ளது. பத்து வயது சிறுமியொருவர் தனது சிறிய தாயாரினால் கடந்த மூன்று வருடங்களாக சூடு வைக்கப்பட்டு, சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டுவந்த சம்பவம் கடந்த சில தினங்களாக காத்தான்குடி பிரதேசத்தில் பிரதான பேசு பொருளாக மாறியிருக்கின்றது. இது  தொடர்பில்நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(Nகுபுபு) யின் மகளிர் பிரிவு தனது கண்டன அறிக்கையினை வெளியிட்டுள்ளது.  இவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,.  'பண்பாடான நாகரீகப்பின்னணிகளும் வளர்ச்சியடைந்த சமூகக்கட்டமைப்புகளும் கொண்ட பிரதேசமாக கருதப்படும்காத்தான்குடியில்  இவ்வாறான துரதிஷ்டவசமான, பிற்போக்கான ஒரு சம்பவம் இடம்பெற்றிருப்பதானது உண்மையில் எம்மை மிகுந்தஅதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றது. இவ்வாறான சிறுவர் துஷ்பிரயோகங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறான சிறுவர்மீதான வன்முறைகளில் ஈடுபடுகின்றவர்கள் எவராக இருப்பினும் அவர்கள் பாரபட்சமின்றி சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டியதுகட்டாயமாகும். எனினும் இவ்வாறான சம்பவங்கள் இன்று நாடளாவிய ரீதியிலும் பிரதேச மட்டங்களிலும் நாளாந்தம் அதிகரித்துவருகின்றமை கண்கூடாகும். இவற்றை முற்றாக ஒழிக்க வேண்டுமாயின் இது தொடர்பான விழிப்புணர்வு சமூகத்திலுள்ளஒவ்வொருவரிடத்திலும் ஏற்படுத்தப்படவேண்டும். குறித்த சிறுமியின்  மீது மேற்கொள்ளப்பட்டு வந்த இவ்வன்முறைச் சம்பவமானது, கடந்த மூன்று ஆண்டுகளாக இடம்பெற்று வந்திருந்தபோதிலும் இதனை வெளிக்கொணர்வதற்கு இத்தனை ஆண்டுகளாக எவருமே முன்வராமற் போனது, இது தொடர்பானவிழிப்புணர்வின்மையை அல்லது சம்பந்தப்பட்ட தரப்பினரை எதிர்த்து சிறுமியைக் காப்பாற்றும் சமூக அக்கறையுடன் செயற்பட பலரும்தயங்கியமையையே உணர்த்துகின்றது.   எனினும் இப்பொழுது இச்சம்பவத்தினை துணிச்சலுடன் வெளிக்கொணர்ந்த அனைவரும் உண்மையில் பாராட்டப்படவேண்டியவர்களாகும் .அத்துடன் இப்பிரச்சனையினையின் பாரதூரத்தினை உடனடியாக அனைவரின் கவனத்திற்கும் கொண்டு வந்தஊடகங்கள், அழுத்தங்களுக்கு அடிபணியாது சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற பொலீசார் மற்றும் நீதித்துறையினரும்பாராட்டப்பட வேண்டியவர்களேயாகும்.  எனவே இச்சம்பவம் தொடர்பாக நடாத்தப்படவுள்ள விசாரணைகள் மிக நீதியான முறையில் நடாத்தப்பட்டு குற்றவாளிகளுக்குதண்டனைகள் விரைவாக வழங்கப்படவேண்டும். இதனை உறுதி செய்வதற்கான முயற்சிகளை சாத்வீகமான முறையில்  முன்னெடுப்பதற்கு அனைவரும் முன்வரவேண்டும். அத்துடன் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமலிருப்பதையும் அனைவரும் உறுதிசெய்யவேண்டும். இப்பிரச்சனையின் காரணமாக குறித்த சிறுமியின் எதிர்கால வாழ்வு, அவரின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படாதவண்ணம் பாதுகாக்கப்படுவதையும் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். இது தொடர்பில் நல்லாட்சிக்கான தேசியமுன்னணியின் மகளிர் பிரிவாகிய நாம் தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுவோம்' எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.   M.T. ஹைதர் அலி

டொக்டர் தாரிக் வபாத்தானார் !

சத்தார் எம் ஜாவித்   மன்னார் விடத்தல் தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் கொழும்பு வெள்ளவத்தையில் வசிப்பவருமான டொக்டர் அப்துல் காதர் தாரிக் இன்று (16) இரவு 8.00 மணியளவில் தனியார் வைத்தியசாலையில் வபாத்தானார்.   சிறிதுகாலம் நோய்வாய்ப்பட்டிருந்த இவருக்கு...

மின் வெட்டும் பயங்கரவாத செயல்களும் !

   கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நாடு முழுவதும்  இருளில் மூழ்கக் காரணமாகவிருந்த சம்பவமானது உண்மையிலேயே சதியாக இருக்குமானால் அதனை பயங்கரவாத செயலாகவே நினைக்கிறது  வேண்டியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இரண்டு மணியிலிருந்து ஏற்பட்ட மின் துண்டிப்பானது நாடெங்கும்...

கண்டனப் பேரணிக்கு அழைப்பு; எஸ் எம் சபீஸ் கைது ?

  அக்கரைப்பற்று நீர்வழங்கள் வடிகால் அமைப்பு அதிகாரசபையின் காரியாலய பிரிப்பு   தொடர்பாக எஸ் எம் சபீசினால் விடப்பட்ட அறிக்கையும் துண்டுப்பிரசுரங்களும் அக்கரைப்பற்று மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இந்நிலையில் ,   வருகின்ற வெள்ளிக்கிழமை (18.03.2016) ஜும்மா தொழுகையை...

பிரதேசவாதம் எமது இனத்துவ அடையாளத்தை இல்லாமல் செய்யும் கூரிய ஆயுதம் !

அஸ்மி அப்துல் கபூர் (தேசிய காங்கிரஸ் – முந்நாள் மாநகர சபை உறுப்பினர் ) ஊடக அறிக்கை  அரசியல்வாதிகள் பிரதேச வாதம் என்கின்ற ஒரே நகர்வினூடாக தமது சுய லாபங்களை அடைய முயல்கின்றனர்.  கல்முனையிலிருந்து அம்பாரைக்கு...

தடுமாறும்‬ ‪‎இலங்கை‬ ‪‎அணிக்கு‬ ‪‎ஊக்கம்‬ ‪‎அளிக்க‬ ‪‎இந்தியா‬ ‪‎செல்லும்‬ ‪‎குமார்‬ ‪‎சங்ககார‬ !

  இலங்கை அணியின் இரண்டு தூண்காளாக விளங்கிய ஜெயவர்த்தனேவும், குமார் சங்ககாராவும் ஓய்வு பெற்ற பிறகு அந்த அணி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறி வருகிறது. சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை 2-1...

Latest news

- Advertisement -spot_img