- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

தொழில்நுட்ப அபிவிருத்தி திகழ்ச்சித்திட்டம் தொடர்பான மாநாடு !

ஊடகப்பிரிவு   இலங்கை புடைவை கைத்தொழில் நிறுவனமும் (SLITA) ஜாப் அமைப்பும் இணைந்து ஏற்பாடுசெய்த தொழில்நுட்ப அபிவிருத்தி திகழ்ச்சித்திட்டம் தொடர்பான மாநாடு இன்று(23/02/2016) கொழும்பு ஜெய்க் ஹில்டனில் இடம்பெற்றது இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கைத்தொழில் மற்றும்...

உதுமாலெவ்வை அக்கரைப்பற்று கல்வி பற்றிப் பேசுவதற்குத் தகுதியற்றவர் : தவம் !

ரியாஸ் இஸ்மாயில்    கடந்த காலத்தில் அக்கரைப்பற்றுக் கல்வி வீழ்ச்சிக்கு காரணமானவர்களில் ஒருவரான உதுமாலெவ்வை இன்று அக்கரைப்பற்று கல்வி பற்றிப் பேசுவதற்குத் தகுதியற்றவர் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபைஅமர்வு  இன்று  (23) தவிசாளர் சந்திரதாச கலபதி தலைமையில் நடைபெற்றது. இதில் கிழக்குமாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெவ்வை கொண்டுவந்த தனி நபர் பிரேரணை மீது உரையாற்றும் போதே மாகாண சபை உறுப்பினர் தவம் மேற்கண்டவாறு இங்கு தெரிவித்தார். அவர் மேலும் இங்கு கூறுகையில்,  கடந்த காலத்தில் ஏ.எல்.இக்பால் எனும் அதிபர் சேவையைச் சேர்ந்த ஒருவருக்கு ஒரு பாடசாலையின் அதிபராக நியமனம்வழங்கப்படுவதற்காக தயார்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த நியமனக் கடிதத்தை, குறிப்பிட்டவர் மாற்று அரசியல் கருத்துடையவர்என்பதற்காக தடுத்து நிறுத்தியவர்தான் இந்த உதுமாலெவ்வை. அதேபோல, ஏ.எம். சித்தீக் எனும் உடற்பயிற்சி ஆசிரியர், வேறுகட்சியொன்றின் ஆதரவாளர் என்ற காரணத்திற்காக ஒரு மாத காலத்தினுள் ஆறு தடவைகள் இடமாற்றக் கடிதங்கள்வழங்கப்பட்டு, இறுதியில் அக்கரைப்பற்று வலயத்தை விட்டு விரக்தியோடு வெளியேறி, இன்று திருக்கோவில் வலயத்தில்கடமையாற்றுகிறார். ஆனால். அக்கரைப்பற்றில் இன்று கடுமையான உடற்பயிற்சி ஆசிரியர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்குக்காரணமும் இதே உதுமாலெவ்வை அவர்கள் தான். அக்கரைப்பற்றுப் பாடசாலைகளில் ஆரம்பக் கல்வி பாடசாலைகளை ஆளணிமற்றும் பௌதீக வளத் தட்டுப்பாட்டில் விட்டு விட்டு, நியாயமாக இப்பாடசாலைக்குக் கிடைக்க வேண்டிய வளங்களையும்,தங்களுக்கு வேண்டிய சில இரண்டாம் நிலைப் பாடசாலைகளுக்கு மட்டும் வழங்கி, அக்கரைப்பற்றின் கல்வியை பின்னடயச்செய்வதில் பின்னணியில் இருந்ததும் இதே உதுமாலெவ்வை தான்.    இப்படி அக்கரைப்பற்று கல்விக்கு உதுமாலெவ்வை செய்த அநியாயங்களை அடுக்கிக் கொண்டு செல்ல முடியும். அப்படிஇருக்கும் போது, அக்கரைப்பற்றில் ஒரு பாடசாலையில் அரசியல் செய்த அதிபரை, அதுவும் அவரே உத்தியோகபூர்வமாகஇடமாற்றக் கடிதம் வழங்கிய ஒரு அதிபரின் இடமாற்றத்தையும், பொத்துவில் கோட்டத்திலிருந்து சுயவிருப்பத்தின் பேரில்அட்டாளைச்சேனை முஸ்லிம் மத்திய கல்லூரிக்கு வழங்கப்பட்ட அதிபரின் இடமாற்றத்தையும் பற்றி பேசுவது நகைப்புக்குரியவிடயமாகும்.    ஊடகங்களில் தனது பேச்சு வர வேண்டும் அதனூடாக தான் தனது அரசியலை முன்கொண்டு செல்லவேண்டுமென்ற அரசியல் வங்குரோத்துத்தனத்தை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். உதுமாலெவ்வை அமைச்சுப்பதவியை இழந்து இருக்கின்ற நிலையில், தனக்கு வேறு வழி தெரியாமல் இவ்வாறான இழிவான அரசியலை அவர் செய்துகொண்டிருக்கிறார் என்பதை மக்கள் நன்றாகப் புரிந்து கொண்டுள்ளனர் என்பதை உதுமாலெவ்வை அறியாமல் இருப்பது அவர்தவறு. கடந்த மூன்று தினங்களாக இலத்திரனியல் ஊடகங்களிலும் சமூக வலைத் தளங்களிலும் உதுமாலெவ்வை கொண்டுவந்துள்ள மூன்று தனிநபர் பிரேரனைகள் பற்றிப் பார்த்தேன்.    ஆயிரத்திற்கு மேற்பட்ட தனிநபர் பிரேரணைகள் இதுவரைக் கொண்டு வரப்பட்டுள்ளது. அவை இவ்வாறு ஊடகங்களில்முன்கூட்டிக் போடப்படுவதில்லை.இந்த சிறு பிள்ளைத்தனத்தை பார்த்து எனக்குச் சிரிப்புதான் வந்தது. பாவம் அவர் பதவிஇல்லாமல் அவஷ்த்தைப்படுவதைப் படுகிறார் எனவும் அவர் மேலும் இங்கு கூறினார்.  

அரசியலமைப்புக்கான புதிய யோசனைகளில் தனியான முஸ்லிம் மாகாணம் வேண்டும் : ஹசன் அலி !

  அரசியலமைப்புக்கான புதிய யோசனைகளில் தனியான முஸ்லிம் மாகாண கொள்கையை உள்ளடக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் தெரிவித்துள்ளது.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஹசன் அலி இதனை குறிப்பிட்டுள்ளார்.    ஏற்கனவே கட்சியின் தவிசாளர் பஸீர் சேகு...

கண்டி, தலதா மாளிகை முன்பாக மூடப்பட்டிருக்கும் வீதி திறக்கப்படுவதை அனுமதிக்க முடியாது !

கண்டி, தலதா மாளிகை முன்பாக மூடப்பட்டிருக்கும் வீதி திறக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என்று அஸ்கிரிய பீடத்தினர் திட்டவட்டமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக அஸ்கிரிய உயர்பீட உறுப்பினர் மெதகம தம்மானந்த தேரர் ஊடகங்களுக்கு...

சாத்தியப்படுமா அதிகாரப்பகிர்வு ? (பகுதி 2 )

கடந்த பதிவின் தொடர்ச்சி...........   சாத்தியப்படுமா அதிகாரப்பகிர்வு ? முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன அவர்கள் நினைத்திருந்தால், தமிழீழ கோரிக்கை வலுவடயமுன்பே குறைந்தளவு அதிகாரத்தினையாவது வழங்கியிருக்க முடியும். அன்று தமிழர்கள் அதனை ஏற்றுக்கொண்டிருப்பார்கள். தென் பகுதிகளில் இன்று...

இந்தியா, சீனாவில் இருந்து வேலைவாய்ப்புகளை மீட்டுக்கொண்டு வருவேன் : டிரம்ப் சபதம் !

இந்தியா, சீனாவில் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வேலைவாய்ப்புகளை மீட்டுக்கொண்டு வருவேன் என்று டோனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.  குடியரசுக் கட்சி தரப்பிலான அமெரிக்க அதிபர் வேட்பாளர் டோனால்டு டிரம்ப் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்...

பருவநிலை மாற்றம் பிரச்சினைக்கு தீர்வுகாண பாடுபடுங்கள் : மாணவர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்  !

பருவநிலை மாற்றம், எரிசக்தி பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண பாடுபடுமாறு மாணவர்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டு உள்ளார்.  உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நேற்று...

Latest news

- Advertisement -spot_img