- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

சிங்கள / ஆங்கில மொழிமூல மாணவர்களும்  குத்பாக்களும் !

அபூபிலால் பர்ஸான்   கொழும்பில் உள்ள பல மஸ்ஜித்களுக்கு ஆங்கில/சிங்கள மொழிகளில் கற்கும் ஏராளமானமாணவர்கள் ஜும்ஆவுக்கு வருகிறார்கள். பெரும்பாலான போது அவர்கள்கததைத்துக்கொண்டும், சுற்றித்திரிந்துகொண்டும், Mobile போன்களில்விளையாடிக்கொண்டும் இருப்பார்கள்.    நேற்றும் அப்படித்தான் கொழும்பில் ஒரு மிக முக்கிய மஸ்ஜித் ஒன்றில் ஒரு மாணவர்கள்குழு மஸ்ஜிதின் வுழு செய்யும் பகுதியில் குழுவாக இருந்துகொண்டு புகைப்படம்எடுத்துகொண்டிருந்தார்கள். குத்பா நடந்துகொண்டிருந்தது. குத்பா முடிந்த பின்னர்அவர்களை அணுகி ஏன் பள்ளியினுள் இருக்காமல் ஏன் புகைப்படம்எடுத்துக்கொண்டிருந்தீர்கள் என்றேன். அதற்கு ஒரு மாணவன் நான் எனதுநண்பனைத்தானே புகைப்படம் எடுத்தேன் என்றான். அவர்கள் செய்த தவறைசுட்டிக்காட்டிய போது 'அங்கிள் எனக்குத் தமிழ் தெரியாது' என்று சொன்னான்.  இம்மஸ்ஜிதிற்கு சுமார் ஆங்கில மொழியில் கற்கும் சுமார் 300 மாணவர்கள்வருகிறார்களாம்.    இம்மாணவர்கள் குத்பாவில் கவனம் செலுத்தாமல், மஸ்ஜித் ஒழுங்குகளைப் பேணாமல்இருப்பதற்கு  பின்வரும் நான்கு பிரதான  காரணங்களை அடையாளப்படுத்தலாம்.  தமிழில் செய்யப்படும் குத்பாக்கள் விளங்குவதில்லை (பல மாணவர்களை அணுகிக்கதைத்திறேன்; அவர்களுக்கு தமிழில் அரபு, ஹிந்தி போல விளங்குவதில்லை - இதைமஸ்ஜித் நிருவாகிகள், கதீப்மார்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்) உண்மையிலே அவர்களுக்கு குத்பாவின் போது மஸ்ஜிதினுள் அமைதியாகஇருக்கவேண்டும் என்பது தெரியாது ( இந்த அறிவு பாடசாலையிலோ, வீட்டிலோ, மச்ஜிதிலோ கிடைப்பதில்லை - பல மாணவர்களுக்கு இஸ்லாம் கிடைக்கக்கூடியஒரே சந்தர்ப்பமாக குத்பாவே அமைகின்றன) முன்பு போன்று பிள்ளைகளைக் கையேடு மஸ்ஜிதுக்கு கூட்டிச்சென்றுஇவற்றையெல்லாம் சொல்லிக்கொடுக்கும் அளவுக்கு பெற்றோருக்கு நேரமுமுல்லை; சந்தர்ப்பமும்அமைவதில்லை இவை எல்லாவற்றுக்கும் மேலாக, முன்மாதிரியாக இருக்க வேண்டிய மஸ்ஜித்நிருவாகிகள் மஸ்ஜிதின் கீழ் மாடியிலும், மஸ்ஜிதுக்கு வெளியேயும் குழுக்குழுவாகஇருந்துகொண்டு குத்பா முடியும் வரை கதைத்துக்கொண்டிருப்பது. (தகுதியானமஸ்ஜித் நிருவாகிகள் இல்லாமை ஒரு பிரச்சினையே)  சமூகத்தின் எதிர்கால சந்ததி இவ்வாறு வழிகாட்டல் இன்றி வளர்வது மிகவும் ஆபத்தானது. அல்லாஹ்வின் கட்டளைகள் இவ்விளம் சந்ததியினருக்கு பெறுமதியற்றதாகக மாறுகிறது. அதனால் மார்க்கம் ஒரு சடங்காக மாறிவிடும். இந்நிலை பெரும்பான்மை சமுகத்துக்கு்ஏற்கனவே நடந்துவிட்டது.  இதனை நிவர்த்திசெய்ய நீண்டகாலத் தீர்வுகள் அவசியம்.  உதாரணமாக பின்வருவன தீர்வுகளாக அமையலாம். ஒரு பிரதேசத்தில் உள்ள பல மஸ்ஜித்களில் ஒன்றை சிங்கள/ ஆங்கில மொழிக்குத்பாவுக்கென்றே ஒதுக்கிவைக்கலாம். தமிழில் நடைபெறும் குபாக்களின் இறுதியில் அன்றைய குத்பாவின் சாராம்சத்தைஆங்கில/சிங்கள மொழியில் 10 நிமிடத்திற்கு சொல்லலாம். அவ்வாறு  முடியாதவர்கள் இதனை பார்த்து வாசித்தாலே போதுமானது. சிங்கள/ ஆங்கிலமொழிப்புலமையுள்ள உலமாக்கள் உருவாகுவது காலத்தின் தேவையாகும். சிங்கள/ ஆங்கில மொழிகளில் மாணவர்களுக்கு விளங்கும் வண்ணம் மஸ்ஜித்ஒழுங்குகள் பற்றி ஒரு விளக்கத்தை அனைத்து மஸ்ஜித்களிலும் காட்சிப்படுத்தல். குத்பவில் தமிழில் சொல்லப்பட்ட விடயங்களை ஆங்கில/ சிங்கள மொழியில்அச்சிட்டு வழங்கலாம்.  இந்நிலைமையை எவ்வாறு சீர்செய்யலாம்? உங்கள் கருத்துகளையும்பகிர்ந்துகொள்ளுங்கள்.  எமது சமூகத்தை நீண்டகால ரீதியில் பாதிக்கக்கூடிய இப்பிரச்சினைக்கு கொழும்பில்உள்ள ஒரு தஃவா அமைப்போ/ குழுவோ முன்வந்து தீர்வு காண்பது மிகமிகஇன்றியமையாததாகும்

‘மஸ்தானை அழைக்கவுமில்லை, அழைக்கவும் மாட்டேன் – வவுனியாவில் ரிசாட்’

-சுஐப் எம் காசிம்-  வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கே கே மஸ்தான் எனது கட்சியில் இணைந்து கொள்ளப் போவதாக வெளிவந்த செய்திகளில் எவ்விதமான உண்மையும் இல்லையென்று அமைச்சர் ரிசாட் பதியுதீன் இன்று திட்டவட்டமாக...

முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு : காலத்தின் கட்டாயம் !

  முஸ்லிம் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளின் 'ஒற்றுமை' அல்லது 'ஒன்றுதிரண்ட' பலம் பற்றி இப்போதெல்லாம் அடிக்கடி பேசப்படுகின்றது. மக்களை எல்லா அடிப்படைகளிலும் பிரித்துப் பிரித்து அரசியல் செய்வதால் அரசியல்வாதிகளும் தலைவர்களும் வளர்கின்றார்களே அன்றி, மக்களுக்கு...

சிரியாவில் தலையீட்டை ஏற்படுத்தியதே துருக்கிக்கும் ரஷ்யாவிற்கு இடையே பதற்றமான சூழல் நிலவ காரணம்!

  சிரியாவில் தலையீட்டை ஏற்படுத்தியதே துருக்கிக்கும் ரஷ்யாவிற்கு இடையே பதற்றமான சூழல் நிலவ காரணம் என்று பிரான்ஸ் குற்றம்சாட்டியுள்ளது.  இது குறித்து பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே அந்நாட்டு வானொலி ஒன்றில் பேசியதாவது:-  துருக்கி சிரியாவில் தலையிட்டு இருக்கிறது....

செவ்வாய் கிரகத்தில் உருளைக்கிழங்கு பயிரிட ‘நாசா’ முடிவு !

அமெரிக்காவின் நாசா விண்வெளிமையம் அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா என்று ஆய்வு நடத்தி வருகிறது. இதற்கிடையே 2030–ம் ஆண்டில் அங்கு பொதுமக்களை குடியமர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தில் உருளைக்கிழங்கு பயிரிட ‘நாசா’...

ராஜபக்ஸவினரின் கோட்டைக்குள் சென்று ஆராயவுள்ள பிரதமர் !

ராஜபக்ஸவினரின் அரசியல் கோட்டையாகக் கருதப்படும் ஹம்பாந்தோட்டையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மஹிந்தவின் அபிவிருத்தித் திட்டங்களில் இடம்பெற்றுள்ள மோசடிகள் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேரில் சென்று ஆராயவுள்ளார். இன்று சனிக்கிழமை அங்கு விஜயம் செய்யவுள்ள அவர், மஹிந்த...

ஜனாதிபதி நாடு திரும்பியவுடன் பீல்ட் மார்ஷலுடன் கலந்துரையாட ஏற்பாடு !

ஜேர்மன் பயணத்தை முடித்துக்கொண்டு ஒஸ்ரியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியவுடன் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுடன் கலந்துரையாடுவார் என அறியமுடிகின்றது. இதற்குரிய ஏற்பாடுகள் தற்போது இடம் பெற்று வருகின்றன. இந்தச் சந்திப்பின்...

வறுமையில் வாழும் மக்களுக்கு அபிவிருத்திக்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பதே புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு: ஒஸ்ரியாவில் ஜனாதிபதி

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தி வறுமையில் வாழும் மக்களுக்கு அபிவிருத்திக்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒஸ்ரிய ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜேர்மனிக்கான உத்தியோக பூர்வ...

முஸ்லிம்கள்; தமிழ் சகோதரர்களுடன் முரண்பட்டு என்றுமே வாழ முடியாது: சிலாவத்துறையில் அமைச்சர் றிசாத்

  சுஐப் எம்.காசிம்  வடமாகாண முஸ்லிம்களுக்கு புலிகள் தவறிழைத்தமைக்காக, தமிழ் சகோதரர்களுடன் முரண்பட்டு என்றுமே வாழ முடியாது என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் சிலாவத்துறையில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றினார். அவர் கூறியதாவது, சின்னச்சின்ன பிரச்சினைகளுக்காக நமக்குள்...

Latest news

- Advertisement -spot_img