- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட செயலமர்வில் முதன்முறையாக பொன்சேகா!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட செயலமர்வு ஒன்று இன்று நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நடைபெற்றுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த செயலமர்வுக்குத் தலைமை தாங்கியுள்ளார். இதில் அனைத்து கட்சிகளையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.  பிரித்தானிய...

மஹிந்த கட்சியின் பொறுப்பை கைவிட்டுச் சென்றது மனைவி,மகனைக் காக்கவே- திஸாநாயக்க

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை ஒப்படைத்தமை கட்சி அல்லது நாட்டின் மீதுள்ள அன்பினால் அல்ல என, அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.  தான் கட்சி மற்றும் நாட்டை நேசிப்பதாக...

கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் பிரதிநிதிகள்- ஷைகுல் பலாஹ் எம்.ஏ.முஹம்மது அப்துல்லாஹ் ஆலிம் றஹ்மானியுடன் சந்திப்பு!

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் அதிபர் இந்தியாவைச் சேர்ந்த மௌலானா மௌலவி எம்.ஏ.முஹம்மது அப்துல்லாஹ் ஆலிம் (றஹ்மானி)ஷைகுல் பலாஹ்வை காத்தான்குடி கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் கடந்த 13 சனிக்கிழமை...

யோசிதவுக்கு பிணை கோரி மேல் நீதிமன்றத்தில் மனு !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வரும், கடற்படை லெப்டினனுமான யோஷித்த ராஜபக்ஸ உள்ளிட்ட ஐவர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று பிணை வழங்குமாறு கோரி மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர். நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ்...

விளக்கமறியல் நீடிப்பு !

முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரத்தினத்தின் விளக்கமறியல் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா வீசாவில் இலங்கை வந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் காரணமாக குமார் குணரத்தினம் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில்...

சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு !

ஏ.எஸ்.எம்.ஜாவித்   தமிழ்க் கலைஞர் அபிவிருத்தி நிலையம் கரம் கொடுப்போம் கலை வளர்ப்போம் எனும் கலை இலக்கிய திருவிழாவில் நூல் அறிமுகம், சிறப்புச் சொற்பொழிவு மற்றும் கலை இலக்கிய ஊடகவியலாளர்கள் கௌரவம் ஆகிய மூன்று நிகழ்வுகளையும்...

றிசாத்தை தொடர்ந்து துரத்தும் பேரினவாதிகள் !

றிசாத்தை தொடர்ந்து துரத்தும் பேரினவாதிகள்  “கலகொட அத்தே ஞானசார தேரர்”  இனவாதத்தின் மறு பெயர். முஸ்லிம் விரோத மொத்த வடிவம். BBS பொதுச் செயலாளர். இவர் இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்தினார். குர்ஆனை தூசித்தார். பெருமானாரை பழித்தார். ஹலால்,...

இந்தியாவில் 16 விகிதம் முஸ்லிம்கள் இருந்தும் அரசியலில் பலமற்ற ஒரு சமூகமாக இருப்பதற்கு காரணம் இந்தியத்தேர்தல் முறையாகும் !

    ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்    இந்தியாவில் 16 விகிதம் முஸ்லிம்கள் இருந்தும் அரசியலில் பலமற்ற ஒரு சமூகமாக இருப்பதற்கு காரணம் இந்தியத்தேர்தல் முறையாகும்.  வை.எல்.எஸ்.ஹமீட் அரசியல் அமைப்பு சட்ட மாற்றம் பாகம்-03.  யுத்த காலத்திலும் யுத்த நிறுத்த காலத்திலும் பாதிக்கப்பட்ட ஒரே சமூகம் முஸ்லிம்காளாகும்   1977ம் ஆண்டு வரை இந்த நாட்டில் தொகுதி முறைதேர்தல் இருந்து வந்தது நாம் அறிந்ததே. இத்தொகுதிமுறைத் தேர்தலின் விசேட அம்சம் 50 விகிதத்திற்கும்குறைவான வாக்குகளைப் பெற்று 50 விகிதத்திற்கும்அதிகமான ஆசனங்களைப் பெறுவதாகும்.   தொகுதி முறை தேர்தல் நடைமுறையில் இருந்த காலத்தைஎடுத்து நோக்கினால் ஒரு தனிக்கட்சி ( அது ஐக்கியதேசியக் கட்சியாக இருக்காலம் அல்லது சிறீலங்காசுதந்திரக் கட்சியாக இருக்கலாம்) அறுதிப் பெறும்பான்மை, மூன்றில் இரண்டு அல்லது ஆறில் ஐந்து பெறும்பான்மைகளைப் பெற்ற வரலாறு நம் நாட்டில்இருக்கின்றது. அச்சந்தர்ப்பங்களிலெல்லாம் இக்கட்சிகள்50 விகிதத்திற்கும் குறைவான வாக்குகளையேபெற்றிருக்கின்றார்கள் 1977ம் ஆண்டுத் தேர்தலைத் தவிர. அத்தேர்தலில் 50.92 விகித வாக்குகளைப் பெற்று 5/6 விகிதஆசனங்களைப் பெற்றார்கள் . இதற்கு காரணம் ஒருதொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள்போட்டியிடுகின்ற பொழுது வெற்றி பெற்ற வேட்பாளரின்வாக்குகளை விட தோல்வியுற்ற வேட்பாளர்களின் கூட்டுமொத்த வாக்குகளின் எண்ணிக்கை பெரும்பாலானசந்தர்ப்பங்களில் அதிகமாகும். சில நேரங்களில் சிலவிதிவிலக்குகள் இருந்த போதிலும் கூட. ஏனெனில் ஒருதொகுதியில் வெற்றி பெருகின்ற வேட்பாளர் ஒருவர்தோல்வியடைகின்ற வேட்பாளர்கள் பலர். அதே நேரம் இவ்வாறு 50 விகிதத்திற்கு குறைவானவாக்குகளைப் கொண்டு 50 விகிதத்திற்கு அதிகமானஆசனங்களைப் பெறுகின்ற பொழுது அவற்றில் சிறுபான்மைசமூகங்களுக்கு உரித்தான ஆசனங்களும் கணிசமானஅளவு அக்கட்சிகளினால் அள்ளிச் செல்லப்படுகின்றன. இதுஎவ்வாறு நடைபெறுக்கின்றது என தேர்தல் முறைகள்தொடர்பாக ஆராய்கின்ற போது பார்க்கலாம். இதுசிறுபான்மை சமூகங்கள் நில சார் சமூகங்களாக (Territorial  Community) இல்லாத இடங்களில்ஏற்படுகின்றது.அதனால்தான் இந்தியாவில் முஸ்லிம்கள் 16 விகிதம் வாழ்ந்தாலும் அரசியலில் பெறுமானமற்ற சமூகமாகவாழ்கின்றார்கள். இந்திய பராளுமன்றத்தில் 545 ஆசனங்கள்இருக்கின்றன.எனவே முஸ்லிம்களுக்கு ஆக குறைந்தது 85  ஆசனங்கள் கிடைக்க வேண்டும். ஆனால் அதில் ¼ பங்குகூட அவர்களுக்கு கிடைப்பதில்லை. இந்தியஅமைச்சரவையில் அத்தி பூத்தாற் போல் ஒரு அமைச்சரவைஅந்தஸ்துள்ள அமைச்சர் இடம்பெறுவார். பெரும்பாலானசந்தர்ப்பங்களில் ஒன்று அல்லது இரண்டு இராஜாங்க அல்லது பிரதி அமைச்சு பதவிகள்தான் கிடைக்கும். இதன்காரணமாக இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக எத்தனையோ கொடுமைகள் நிகழ்ந்தும் அதனைதட்டிக்கேட்க முடியாத சமூகமாக அவர்கள்வாழ்கின்றார்கள். உலகில் அதிகளவில் முஸ்லிம் சனத்தொகையினைகொண்ட நாடு இந்தோனேசியாவாகும். அண்ணளவாக 25கோடி முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள். இரண்டாவதுஅதிக  முஸ்லிம்  சனத்தொகையினை கொண்ட நாடுஇந்தியா. கிட்டத்தட்ட18 கோடி முஸ்லிம்கள்வாழ்கின்றார்கள். அதற்கு அடுத்ததாகத்தான் முஸ்லிம்நாடான பாக்கிஸ்தான் இருக்கின்றது. எனவே உலகில் இரண்டாவது முஸ்லிம் சனத்தொகையினைகொண்ட இந்தியாவில் அரசியல் அனாதைகளாக ஒருகபினெட் அமைச்சு பதவியினை பெறுவதற்குகூட பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அருகதை அற்றசமூகமாக முஸ்லிம்கள் வாழ்வதற்கு காரணம் இந்தியதேர்தல் முறையாகும். எனவே ஒரு ஜனநாயக நாட்டில்அரசியல் பலம் என்பது அந்த நாட்டின் தேர்தல்முறையில்தான் தங்கியிருக்கின்றது. இந்தியாவின் ஒரு மாநிலமான தமிழ் நாட்டில் சுமார் 8 கோடிப்பேர் வாழ்கின்றார்கள். இவர்களில் ஒரு கோடிக்குமேற்பட்டவர்கள் முஸ்லிம்கள், ஆனால் உரிய காலம்தண்டனை அனுபவித்து சிறையிலிருந்து விடுவிக்கப்படுகின்றவிடயத்தில் கூட முஸ்லிம்களுக்கு சட்டத்திற்கு அப்பால்வேறுபாடு காட்டப்படுகின்றது. ஆனால்இதனை தட்டிக்கேட்க பலமான அரசியல் பிரதி நிதித்துவம்இல்லை.பாதிக்கப்பட்டவர்களின் மனைவிமார் அல்லதுபெற்றோர், உறவினர்கள் ஆர்ப்பாட்டம் செய்வதுமட்டும்தான் அவர்களால் முடிந்தது. ஆயினும்பலனேதுமில்லை. ஒரு கோடி தமிழ் நாட்டு முஸ்லிம்களுக்குஇரண்டொரு சட்டசபை உறுப்பினர்கள் மாத்திரமே அங்குஇருக்கின்றார்கள். இதுதான் தொகுதிமுறை தேர்தலின்விந்தை.   சுருங்க கூறின் நில சார் சமூகமாக (Territorial Community) இல்லாமல் சிதறி வாழும் சமூகங்களை பொறுத்தவரைஅவர்களுடைய தேசிய விகிதாசாரம் எதுவாக இருந்தாலும்அவர்களால் உரிய பிரதி நிதித்துவத்தினை பெற்றுக்கொள்ளமுடியாது. இலங்கையை பொறுத்தவரையில் மூன்றில்இரண்டு பங்கு முஸ்லிம்கள் நில சார் சமூகமாக இல்லாமல்சிதறி வாழ்கின்ற சமூகமாகவே இருக்கின்றோம் என்பதனைஇங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தபின்னணியில்தான் இலங்கையில் தேர்தல் முறைமாற்றம்தொடர்பாகவும் சிந்திக வேண்டி இருக்கின்றது.   விகிதாசார தேர்தல் முறை....   தற்போது இருக்கின்ற வீதாசார முறை நூற்றுக்கு நூறுவிகிதம் கட்சிகள் பெறுகின்ற வாக்குகளுக்கேற்றஆசனங்களை வழங்குகின்றது என்று கூற முடியாவிட்டாலும்அண்ணளவாக அவ்விகிதாசாரத்திற்கேற்ப ஆசனங்களைவழங்குகின்றது எனலாம். அதாவது 50 விகிதமானவாக்குகளை தேசிய ரீதியாக எந்தவொரு தனிக் கட்சியும்பெறறுவது நடமுறைச் சாத்தியமில்லை என்பதனால்எந்தவொரு கட்சியும் தனித்து 50விகித ஆசனங்களைபெறுவதில்லை. எனவே ஆட்சி அமைப்பதற்கு சிறுபான்மைகட்சிகளினதும், சிறு கட்சிகளினதும் தயவு தேவை. இங்குதான் சிறுபான்மைகளின் பலம் சிறுபான்மைகட்சிகளினூடாக வெளிப்படுகின்றது. சிறுபான்மை கட்சிகள்அப்பலத்தினை சரியான முறையில் பாவித்தார்களா? என்பதுவேறு ஒரு தலைப்பின் கீழ் ஆராயப்பட வேண்டியவிடயமாகும். அது நாம் தெரிவு செய்கின்றதலைமைதுவங்களினதும், பிரதி நிதித்துவங்களினதும்செயற்பாட்டில் தங்கியுள்ளது.  ஆனால் இன்றைய தேர்தல்முறைமையின் கீழ் சிறுபான்மையின் தயவுடன்தான்எந்தவொரு கட்சியும்ஆட்சியமைக்க முடியும். அவ்வாட்சியை தக்க வைக்கவும்முடியும் என்பதுதான் யதார்த்தமாகும்.   எனவே சுருங்க கூறின் ஜனாதிபதி தேர்தல் முறைமையின்கீழ் எவ்வாறு முஸ்லிம்கள் ஆட்சியாளர்களை தெரிவுசெய்வதில் பலம்பொருந்திய சமூகமாக இருக்கின்றார்களோஅதே போன்றுதான் பாராளுமன்ற ஆட்சியினையும் தெரிவுசெய்வதில் இருக்கின்றார்கள். முஸ்லிம்களின் அரசியல் பலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டமைஅல்லது சமூக நன்மைகளாக பாவிக்கப்பட்டமை ( இங்குவராலாறு விபரிக்கப்பட வேண்டும் தெளிவுக்காக). -------------------------------------------------- மறைந்த தலைவர் எவ்வாறு 1989ம் ஆண்டு ஜனாதிபதிதேர்தல் முறைமை மூலம் முஸ்லிம்களுகு கிடைத்த அரசியல்பலத்தினை பாவித்து எவ்வாறு வெட்டுப்புள்ளி திட்டத்தினைகுறைத்தாரோ அல்லது இல்லாமல் செய்தாரோ (மாகாணமற்றும் உள்ளூராட்சி தேர்தல் முறைமைகளில்) அதேபோன்று பொதுத்தேர்தல் முறைமை மூலம் முஸ்லிம்களுக்குகிடைத்த அரசியல் பலத்தை 17 வருட ஐக்கிய தேசியகட்சியின் ஆட்சியினை மாற்றுகின்ற விடையத்தில் 1994ம்ஆண்டு பாவித்தாரோ, அதே போன்று இந்த நாட்டுமுஸ்லிம்களின் அரசியல் இருப்பையே பாதுகாகின்றவிடையத்தில் இப்பலம் 2004ம் ஆண்டு பாவிக்கப்பட்டது.   அதாவது 2001ம் ஆண்டு சந்திரிகா பண்டாரநாயக்கதலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம்சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் வெளியேற்றத்தின் மூலம்வீழ்த்தப்பட்டது நாம் அறிந்த விடயமாகும். அப்பொழுதான்இந்த நாட்டில் சிறுபான்மையில் தங்கி ஆட்சிநடாத்துவதற்கு காரணமான பொதுத்தேர்தல் முறைமைமாற்றப்பட வேண்டும்; என்ற எண்ணக்கரு இந்த நாட்டின்ஆட்சியாளர்கள் மத்தியில் பலமாக வேறூன்றியது. சிறுபான்மைகள் நினைத்தால் ஆட்சியினைஉருவாக்குவதற்கும் சிறுபான்மைகள் நினைத்தால்ஆட்சியினை வீழ்த்துவதற்கும் வழிசமைக்கின்ற ஒரு தேர்தல்முறை சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற ஒருநாட்டில் எவ்வாறு தொடர அனுமதிக்க முடியும். அதுமட்டுமல்லாமல் சிறுபான்மைகள் நினைத்த மாத்திரத்தில்கவிழ்க்க கூடிய ஒரு ஆட்சி முறையின் நிச்சயமற்றதன்மையின் கீழ் ஸ்திரமான அரசினை நிறுவி நாட்டைஎவ்வாறு அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல முடியும்என்ற கேள்விகள் அன்று எழுந்தன. நமது பாதுகாப்பிற்காக நமது கைகளில் பலமானஆயுதம் தரப்படுகின்ற பொழுது அதை மிகக் கவனமாகநம்மைபாதுகாக்க மாற்று வழியில்லாத இக்கட்டான சூழ்நிலையில் மாத்திரமே பாவிக்க வேண்டும். அதை விடுத்துபட்டதற்கும், தொட்டதற்கும் அதனைப் பாவிக்க முற்பட்டால்அவ்வாயுதத்தை பறித்தெடுக்க சக்தியுள்ளவர்கள்அனைவரும் ஒன்றிணைவர்; என்பதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நமது அரசியல் பலத்தை ஆட்சியை உருவாக்க, தக்கவைக்க பயன்படுத்துவது என்பதும் ஆட்சியை கவிழ்க்கபயன்படுத்துவது என்பதும் இரு வெவ்வேறான தாக்கங்களைஉருவாக்க கூடியவை என்பதை நாம் மனதில் இருத்தவேண்டும். அன்று ஆட்சியினை கவிழ்ப்பதற்கு இருந்த வெளிப்படைகாரணம் சந்திரிகா அம்மையார் றவூப் ஹக்கீமை விடபேரியல் அஸ்ரஃப் அவர்களுக்கு முக்கியதுவம் கொடுத்தார்என்பதாகும். அதற்கு கொடுக்கப்பட்ட வியாக்கியானம்சந்திரிக்கா அம்மையார் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசினைஅழிக்க முற்படுகின்றார். எனவே கட்சியினை காப்பாற்றவேண்டும் என்பதாகும். ஆட்சியில் இருக்கும் தலைவர்கள்சிறுபான்மை கட்சிகளை அழிக்க முடியும் என்றால் இந்தநாட்டில் சிறுபான்மை கட்சிகளேஇருக்காது.வாக்களிக்கின்றவர்கள் மக்களே தவிர கட்சிதலைவர்கள் அல்ல. யதார்த்தில் அன்று ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஏற்பட்டநெருக்கமான உறவும் அரசியல் தொடர்பான அனுபவமுதிர்ச்சி இன்மையும்தான் அந்த ஆட்சி கவிழ்ப்பிற்குகொண்டு சென்றது என்பதுதான் உண்மையாகும். அன்றுநாம் விட்ட அந்த தவறின் தாக்கம் இன்று வரை புதியதேர்தல் சீர்திருத்த விடையத்திலும் தொடர்கின்றதுஎன்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். யுத்த நிறுத்த உடன்படிக்கையும் முஸ்லிம்களும்....   இந்த பின்னணியில் 2001ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சிஆட்சியமைத்தது. விடுதலைப் புலிகளுடன் யுத்த நிறுத்தஒப்பந்தத்தை செய்தது. இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தகாலத்திலும் விடுதலைப் புலிகள் முஸ்லிம்கள் மீதான்கொடுமைகளை நிறுத்த வில்லை. இந்த நாட்டில் எல்லா சமூகங்கலளும் யுத்த காலத்தில்பாதிக்கப்பட்டன. ஆனால் யுத்த காலத்திலும் யுத்த நிறுத்தகாலத்திலும் பாதிக்கப்பட்ட ஒரே சமூகம்முஸ்லிம்காளாகும்.இந்த நிலையில் சிறீலங்காமுஸ்லிம் காங்கிரசினால் இருந்த அரசாங்கம் பதவிகவிழ்க்கப்பட்டு ஐக்க்ய தேசியக் கட்சியினை நிறுவியதற்குகைமாறாக விடுதலைப் புலிகள் முஸ்லிம்கள் மீதுகட்டவிழ்த்த அட்டகாசங்களைக் கண்டும் ஐக்கிய தேசியக்கட்சி வாளாவிருந்தது.   வாழைச்சேனையில் இரண்டு முஸ்லிம் வாலிபர்களைகொலை செய்து அவர்களின் ஜனாசாக்களை அவர்களதுபெற்றோரின் கண்முன்னாலேயே விடுதலைப் புலிகள் தீயிட்டுகொழுத்திய பொழுது படையினர் கையாலாகாத் தனமாகநின்றிருந்தார்கள்., மூதூரில் முஸ்லிம் காங்கிரசின்உயர்பீடகூட்டத்தினை விடுதலைப் புலிகளின்அட்டகாசத்தினால் இடை நடுவில் விட்டு தப்பினோம், பிழைத்தோம் என நாம் ஓடிய பொழுது படையினர் கையறுநிலையில் நின்றிருந்தார்கள். முஸ்லிம் காங்கிரசினால்கொண்டுவரப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில்விடுதலைப் புலிகளினால் முஸ்லிம்களுக்கு நடந்தஅநியாயங்களினால் முஸ்லிம்கள் வெதும்பிப் புண்ணாகிகொண்டிருந்த போதுதான் 2004ம் ஆண்டு பாராளுமன்றம்கலைக்கப்பட்டது. பொதுத்தேர்தலில் தனித்து போட்டியிடுவதா? அல்லதுஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து போட்டியிடுவதா?   2004ம் ஆண்டு பாராளுமன்றம் கலைந்ததும் சிறீலங்காமுச்லிம் காங்கிரசின் உயர் பீடம் (Politburo) கூடியது.அக்கூட்டத்தில் புத்தளம் பாயிஸ் கலந்துகொண்டிருக்கவில்லை. நானுட்பட அதில் கலந்து கொண்டஅத்தனை பேரும் ஐகிய தேசியக் கட்சியுடன் சேர்ந்துபோட்டியிடக் கூடாது, தனித்தே போட்டியிட வேண்டும்என்று வாதாடினோம். ஒருவர் கூட மாற்றுகருத்தினைகொண்டிருக்கவில்லை. இந்த நிலையில் கட்சிதலைவருக்கு வழமை போன்று ஐக்கிய தேசியக் கட்சியுடன்சேர்ந்து போட்டியிட வேண்டும் என்றே விருப்பம். எனவேஉயர் பீடத்திற்கு (Politburo) முடிவெடுக்கும்அதிகாரமில்லை.இன்னும் இரண்டு நாட்களில் அதியுயர்பீடம் (HIGH COMMAND) கூடி முடிவெடுக்கும் என்றார்.   நாட்கள் இரண்டு கழிந்தன. அன்றிரவு 9.30 மணிக்குஅல்லது10.00 மணிக்கு அதியுயர் பீடக் (HIGH COMMAND) கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில்தனித்து போட்டியிட வேண்டும் என்று  வாதாடவேண்டுமென்று அதற்கான நியாயங்களை எல்லாம் மனதில்அசை போட்டுக்கொண்டு கூட்டத்திற்கு செல்லதயாராகிக்கொண்டிருந்த பொழுது இரவு ஒன்பது மணிக்குதொலைக் காட்சியில் செய்தி ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. அதில் ஜனாதிபதி சந்திரிக்கா அவர்கள்ஒரு கூட்டத்தில் பேசும் போது தேர்தல் முறைமாற்றியமைப்பதற்காக அரசியல் அமைப்பிற்கு திருத்தம்கொண்டு வரப்பட வேண்டும், மூன்றில் இரண்டு பங்குபெரும்பான்மையுடனோ, இல்லாமலோ (The constitution must be amended with or without...

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் ரோஹித்த கைது செய்யப்படலாம் ?

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இவருக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல்...

செயின்ட்பீட்டர்ஸ்பர்க் சர்வதேச டென்னிஸ் போட்டி : சானியா ஜோடி சாம்பியன் !

  செயின்ட்பீட்டர்ஸ்பர்க் சர்வதேச டென்னிஸ் போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் இரட்டையர் இறுதிஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹென்கிஸ் ஜோடி 6-3, 6-1 என்ற நேர்...

Latest news

- Advertisement -spot_img