September 23rd , 2018 9:53 AM
Hot News
நான் படுகொலை  செய்யப்படுவேன் என்றா கூறுகின்றீர்கள் ! – மர்ஹூம் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரஃப்|பெரும் தலைவர் மர்ஹூம் அஷ்ரஃபின் அந்தக் கடைசி ஆறு நாட்கள் -கலாபூஷணம் மீரா எஸ்.இஸ்ஸடீன்|பெரும் தலைவர் மர்ஹூம் அஷ்ரஃபின் அந்தக் கடைசி ஆறு நாட்கள் -கலாபூஷணம் மீரா எஸ்.இஸ்ஸடீன்|வலுவான தலைவர்களை கொண்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியை எவராலும் அழிக்க முடியாது : பிரதமர்|அராஜக ஆட்சிக்கு முடிவு கட்டவேண்டும், அரசாங்கத்தின் ஏமாற்று வித்தைகளுக்கு மக்கள் மேலும் ஏமாற மாட்டார்கள்|கலகத்தை விளைவித்து அதன் ஊடாக எம் மீது அவப்பெயரை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சி : மஹிந்த|“ஜனபலய கொலம்பட்ட” மக்கள் சூழ்ந்து கொண்டதால் அசைய முடியாமல் தடுமாறிய மஹிந்த|சதுர சேனாரட்னவின் திருமண விவகாரம் – அலரி மாளிகைக்கு செலுத்திய வாடகை தொகை வெளியானது|முப்படையினர் தொடர்பான தகவல்களை நீதிமன்றங்களுக்கு வழங்க வேண்டாம் : ஜனாதிபதி உத்தரவு|நாமல் பேபியை அடுத்த தலைவராக்கவே நாளை கொழும்பில் போராட்டம் நடக்கின்றது : பிரதமர்

Daily Archives : 10th February 2016

 • முஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் !

  முஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் !

  ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்      அரசியல் அமைப்பு சட்ட மாற்றம் பாகம் -01 பாகம் ஒன்றில்அரசியல் அமைப்புச் சட்டத்தில் முஸ்லிம்கள் மீது நேரடியாகதாக்கம் செலுத்தக்கூடிய தலைப்புக்கள்தரப்பட்டிருந்தன.இத்தலைப்புக்களை முஸ்லிம்களின்கோணத்தில் இருந்து ஆராய்கின்ற பொழுது மூன்று பிரதானஅம்சங்களை அடையாளம் காணலாம். 01.ஜனாதிபதி ஆட்சி முறைமையினை ஒழித்து பாராளுமன்றஅட்சி முறையினை கொண்டுவருதல். 02.தேர்தல் சீர்திருத்தம் 03.அதிகார பரவலாக்கள். இம் மூன்று தலைப்புக்களும் விரிவாக ஆராயப்படல்வேண்டும். ஏனெனில் இம்மூன்று தலைப்புக்களும் முஸ்லிம்களின் எதிர்காலத்தினை பதம்பார்க்க கூடியதாகஇருகின்றது. இம்மூன்றுதலைப்புக்களையும் விரிவாகஆராயும் முன் அவை முஸ்லிம் சமூகத்தின் மீது செலுத்தக்கூடிய தாக்கத்தின் வீச்சை சுருக்கமாக பார்த்த பின் மீண்டும்விரிவாக ஆராயலாம். அந்தவகையிலே ஜனாதிபதி ஆட்சி முறைபற்றி பார்ப்போமானால்..இந்த நாட்டில் ஜனாதிபதியினைதீர்மானிப்பதிலும் அவரை மாற்றுவதிலும் சிறுபான்மைசமூகங்களின், குறிப்பாக முஸ்லிம்களின் பங்கினை கடந்ததேர்தலில் நடைமுறையில் கண்டோம். ஜனாதிபதி ஆட்சிமுறைமை நீக்கப்படுமாயின் இந்தநாட்டின் ஆட்சியாளரைதெரிவு செய்வதில் நமக்குஇருக்கின்ற பங்கு இல்லாமல்போகின்றது.   இரண்டாவதாக தேர்தல்சீர்திருத்தத்தினைபார்க்கின்றபொழுது… புதிய தேர்தல்முறையில் ஒருதனிக்கட்சி சுயமாக 50 வீதத்திற்கு அதிகமானஆசனங்களை பெற்று தனியாக ஆட்சி அமைக்கின்றவிதத்தில் கொண்டுவர முயற்சிக்கப்படுகின்றது. அதில்அவர்கள் வெற்றி பெற்றால் ஆட்சியை தீர்மானிப்பதில்அல்லது ஆட்சியில் பங்காளர்களாக இருக்கின்றநிலைமையில் இருந்து சிறுபான்மை சமூகங்கள்,குறிப்பாகமுஸ்லிம் சமூகமானது தனது நிலையினைஇழக்கப்போகின்றது. சுருக்கமாக கூறுவதாயின் மத்தியஆட்சியில் எதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கு எதுவிதபங்கும்இருக்கப் போவதில்லை. மூன்றாவதாக அதிகாரப்பகிர்வினைபார்க்குமிடத்து…..இன்று மத்தியில் இருக்கின்றஅதிகாரத்தின் கணிசமான பகுதியினை எடுத்துமாகாணங்களுக்கு வழங்கப்போகின்றார்கள். இதனை மறுவார்த்தையில் கூறுவதாயின் இன்று மத்தியில் இருக்கின்றஅதிகாரமையத்தின் வீரியம் குறைக்கப்பட்டு மேலும் பலமானஒன்பது அதிகார மையங்கள் உருவாக்கப்பட போகின்றன. (இன்று இருக்கின்ற மாகாண சபைகள் வெறும்பெயரளவிலேயே இயங்குகின்றன என்பது கவணத்தில்கொள்க.) அவ்வாறு உருவாக்கப்படுகின்ற ஒன்பது அதிகாரமையங்களுள் கிழக்கினை தவிர  ஏனைய பிரதேசங்களில்வாழுகின்ற முஸ்லிம்கள் அரசியல் பலமுள்ள ஒரு சமூகமாகஇல்லை என்பது தெளிவான விடயமாகும். அவ்வாறான சூழ்நிலையில் அம் மாகாணங்களில் வாழுகின்ற முஸ்லிம்களின்நிலைமை கஸ்டமானதாக மாறப்போகின்றது. சுருக்கமாக கூறுவதாயின் மத்தியிலும், மாகாணக்களிலும்ஒரு செல்லாக்காசான சமூகமாக மாறுவதற்கானவாய்புஇருக்கின்றது. இந்நிலையில் !!.முஸ்லிம்இளைஞனே! தூங்குவதற்கு உனக்கெங்கேநேரமிருக்கின்றது? நாம் செல்ல வேண்டிய பாதை பரந்துவிரிந்து கிடக்கின்றது.!! என்ற அல்லாமா இக்பாலின்கவிதையினை நினைவு கூர்ந்தவர்களாகநாம்விழித்துகொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது…


 • நாட்டுக்கு பெருமை தேடித் தந்த வீரர்களை வாழ்த்துகின்றேன் : ஹரீஸ் !

  நாட்டுக்கு பெருமை தேடித் தந்த வீரர்களை வாழ்த்துகின்றேன் : ஹரீஸ் !

    ஹாசிப் யாஸீன்,எம்.எம்.ஜபீர்   இந்தியாவில் இடம்பெற்று வரும் தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான 100 மீற்றர்ஓட்டப்போட்டியில் மூன்றாம் இடம்பெற்று வெண்கலப்பதக்கத்தை பெற்ற பொத்துவில் மண்ணைச் சேர்ந்தஅஷ்ரஃப்பிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதிஅமைச்சருமான  சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும்தெரிவித்துள்ளார். மேலும் பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவிக்கையில், அஷ்ரஃப் பெற்ற வெண்கலப்பதக்கத்தின் மூலம்  கிழக்கு மாகாண மக்களும், குறிப்பாக அம்பாறை மாவட்டமக்கள் மகிழ்ச்சியடைவதுடன் நாட்டுக்கு சர்வதேச ரீதியில் பெருமையை எமது பிரதேசத்தை சேர்ந்த மகன்ஒருவர் பெற்றுக்கொடுத்ததையிட்ட விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் என்ற ரீதியில்பெருமையடைகின்றேன். தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களைப் பெற்று நாட்டுக்கு மேலும் பெருமை தேடித்தந்தஏனைய வீர, வீராங்கனைகளுக்கும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். எமது நாட்டு வீர, வீராங்கனைகளை இப்போட்டிக்கு தயார் படுத்திய பயிற்றுவிப்பாளர்கள், விளையாட்டுஅமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் தெற்காசிய விளையாட்டுப் போட்டி களத்தில் நின்று நாட்டின் வீர, வீராங்கனைகளை உச்சாகப்படுத்தி வரும் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, பணிப்பாளர்நாயகம் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில்மகிழ்ச்சியடைவதாக பிரதி அமைச்சர் ஹரீஸ் மேலும் தெரிவித்துள்ளார்.